உலகத் திருக்குறள் கூட்டமைப்பு

உலகத் திருக்குறள் கூட்டமைப்பு

தமிழ்த்தாயின் தலைமகன் முப்பால் முதல்வன் உலகப் பொதுமறை தந்த தமிழன் ஐயன் திருவள்ளுவர் காட்டும் வழி நின்று தமிழ் இன மீட்டுருவாக்கப் பணியில் உலகத் திருக்குறள் கூட்டமைப்பு. சொந்த வரலாறு தெரியாத...... சொந்த வரலாற்றை மறந்த..... ஓர் இனத்தால் தலை நிமிர்ந்து தழை அறுத்து தன்னுரிமையுடன் வாழ இயலாது என்பதற்கு நம் தமிழினமே சான்று...... தனக்கே உரிய பண்பாட்டு உரிமைகளை இழந்து விட்டு சமூகப் பொருளாதார, அரசியல் விடுதலை என்பது சாத்தியமில்லை என்பதற்கு தமிழ் இனமே முழு முதல் சான்று...... உலக வரலாற்றில் முதல் முறையாக தமிழர் மறை திருக்குறளைப் புலமை நூல் என்ற நிலையிலிருந்து மாற்றி புரட்சி நூலாக ஏற்று "குறள்நெறி சமுதாயம்" அமைத்திட முயல்கிறோம்! நம் தமிழினம் நாடாண்ட இனம் என்னும் வரலாற்று உண்மையைப் புகட்டி.... தன்னம்பிக்கை ஊட்டி..... இனத்தால் ஓரணியாய் திரட்டி..... அரசியல், பொருளியல், பண்பாட்டியல் துறைகளில் ஆக்கமும்..... ஆள்வினையும்..... கூட்டி.... தற்கால உலகில் பிற இனத்தாரோடும்..... நாட்டாரோடும்..... போட்டியிட வல்ல ஊக்கத்தையும் உளத்த்தியலையும் வளர்க்க வேண்டும்.. நம் நாடு வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ் கூறும் நல் லுலகமாகிய தமிழ் நாடு..... நம் மொழி உயர்தனிச் செம்மொழியாம் தமிழ் மொழி..... நம் இனம் உலக முதல் இனமாம் தமிழ்இனம்..... நம் அரசு தமிழ் முறை திருக்குறள் அரசு.... என்னும் உணர்வு பெருக வேண்டும்.... பிற மாயையிலிருந்து தமிழ்இனம் விடுபட வேண்டும்.....

"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு"

பொருள்: எழுத்துக்கள்‌ எல்லாம்‌ அகரத்தை அடிப்படையாகக்‌ கொண்டிருக்கின்றன.
அதுபோல்‌ உலகம்‌ பகலவனை அடிப்படையாகக்‌ கொண்டிருக்கின்றது.

கூட்டமைப்பு பற்றி

உலகப்பொதுமறை திருக்குறளை மக்கள் வாழிவியலாக்கினால் – குடும்பங்களில் நன்னெறி வளரும்; ஊரில் அறம் பெருகும்; நாட்டில் சமத்துவம் மலரும்; உலகில் அமைதி நிலவும் என்பது சான்றோர் முடிவு.

“மக்களிடம் செல், மக்களிடம் கற்றுக் கொள், மக்களுக்காகத் தொண்டு செய்”என்னும் கருத்தியலுக்கேற்ப, கூட்டமைப்பின் இலக்கினை வென்றெடுக்க தமிழ்நாடு – இந்திய மாநிலங்கள் மற்றும் அயல்நாடுகளில் ஊர்/நகர்கள்தோறும் கிளை அமைப்புகள் ஏற்படுத்தி, திருக்குறள் வழிநின்று தமிழ்ச் சமுதாய மீட்டுருவாக்கத் திட்டம் வகுத்துச் செயல்படுத்தி வருகிறோம்.

உலக வரலாற்றில் முதல்முறையாக தமிழர் மறை திருக்குறளைப் புலமை நூல் என்ற நிலை- யிலிருந்து மாற்றி புரட்சிநூலாக ஏற்று திருக்குறள் சமுதாயம் அமைத்திட முயல்கிறோம்!

செயல்பாடுகள்

திருக்குறள் கூட்டமைப்பு காலத்தின் கட்டாயம் :

“ஒன்றுபட்டால் உண்டுவாழ்வு ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு” என்னும் முதுமொழி உணர்த்துவதன் அடிப்படையில், ஒருங்கிணையவும், திருவள்ளுவர் கூறும்

“செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்”

என்னும் திருக்குறள் (466) முன்வைக்கும் பேருண்மையினைக் கருத்தில் கொண்டுத் தொண்டாற்றவும் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை முறையாகப் பயன்படுத்தவும், பட்டறிவைப் பகிர்ந்து கொள்ளவும், திருவள்ளுவர்/திருக்குறள் அமைப்புகளுக்கும், பற்றாளர்களுக்கும் ஏற்படும் சிக்கல்களை எதிர்கொண்டு வெற்றிபெறவும், அனைத்துத் திருவள்ளுவர்/திருக்குறள் அமைப்பினர் மற்றும் அமைப்புச் சாராத்திருக்குறள் தொண்டர்களுக்கிடையே நல்லுறவு ஏற்படுத்தவும் உலகெங்கும் உள்ள திருவள்ளுவர்/திருக்குறளை நடுவப்படுத்தி செயலாற்றிவரும் திருக்குறள் தொண்டர்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயல்படுவது காலத்தின் கட்டாயமாகும்.

தற்போதைய தலைமை நிர்வாகிகள்

கவிஞானி
மு. ஞானமூர்த்தி

தலைவர்
உலகத்‌ திருக்குறள் கூட்டமைப்பு

பேராசிரியர்
தங்க. ஆதிலிங்கம்

பொதுச் செயலாளர் கூட்டமைப்பு மற்றும் உலகத்திருக்குறள் கூட்டமைப்பு அறக்கட்டளை

நல்லாசிரியர்
பெ. செளந்தரராசன்

பொருளாளர்
உலகத் திருக்குறள் கூட்டமைப்பு

தமிழரிமா தா.சம்பத்

தலைவர்
உலகத்திருக்குறள் கூட்டமைப்பு அறக்கட்டளை

திருமிகு ப. முத்து செல்வன்

பொருளாளர்
உலகத் திருக்குறள் கூட்டமைப்பு அறக்கட்டளை

திருக்குறள் மாமணி இராம கோவிந்தன்

தலைமைக் கரண ஆசான் உலகத்திருக்குறள் கூட்டமைப்பு

திரு. திருமூர்த்தி

துணைப் பொதுச் செயலாளர்

ச. பாலசுப்பிரமணியன்

துணைப் பொதுச் செயலாளர்

திரு. பி. சம்பத்குமார்

தலைமை நிலையச் செயலாளர்

திரு. வி. காசிநாதன்

அமைப்புச் செயலாளர்

தற்போதைய தலைமை நிர்வாகிகள்

கவிஞானி
மு. ஞானமூர்த்தி

தலைவர்

பேராசிரியர்
தங்க. ஆதிலிங்கம்

பொதுச் செயலாளர்

நல்லாசிரியர்
பெ. செளந்தரராசன்

பொருளாளர்

தமிழரிமா தா.சம்பத்

தலைவர்
அறக்கட்டளை

திருமிகு ப. முத்து செல்வன்

பொருளாளர்
அறக்கட்டளை

திருக்குறள் மாமணி இராம. கோவிந்தன்

தலைமைக் கரண ஆசான்

திரு. வ. காசிநாதன்

அமைப்புச் செயலாளர்

திரு. பா. சம்பத்குமார்

தலைமை நிலையச் செயலாளர்

சிறப்பு நிகழ்வுகள்

கூட்டமைப்புத் தோற்றம் – 01.10.2017 – சென்னை வள்ளுவர் கோட்டம்

ஒருங்கிணைப்பு மாநாடு – 02.06.2018 – தஞ்சை பாரத் கல்விக்குழுமம்

கூட்டமைப்பின் முதல் செயற் குழுக் கூட்டம் – 09.09.2018 – கரூர்

ஆட்சிமன்றக் குழுக்கூட்டம் – 10.11.2018 – மதுராந்தகம் திருக்குறள் பீடம்

மாநில அளவிலான கரணப்பயிற்சி முகாம் – 01-12-2018 – இராசபாளையம் திருவள்ளுவர் மன்றம்

இரண்டாவது செயற் குழுக் கூட்டம் – 02-12-2018 – இராசபாளையம் திருவள்ளுவர் மன்றம்

இரண்டாவது ஆட்சிமன்றக்குழுக் கூட்டம் – 24.02.2019 – திருச்சி பதின்மப் பள்ளி

கூட்டமைப்பின் மூன்றாம் செயற் குழுக் கூட்டம் – 16.03.2019 – கரூர் வள்ளுவர் கல்வி நிறுவனம்

புகைப்பட தொகுப்பு