திருக்குறள் கூட்டமைப்பு காலத்தின் கட்டாயம் :
“ஒன்றுபட்டால் உண்டுவாழ்வு ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு” என்னும் முதுமொழி உணர்த்துவதன் அடிப்படையில், ஒருங்கிணையவும், திருவள்ளுவர் கூறும்
“செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்”
என்னும் திருக்குறள் (466) முன்வைக்கும் பேருண்மையினைக் கருத்தில் கொண்டுத் தொண்டாற்றவும் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை முறையாகப் பயன்படுத்தவும், பட்டறிவைப் பகிர்ந்து கொள்ளவும், திருவள்ளுவர்/திருக்குறள் அமைப்புகளுக்கும், பற்றாளர்களுக்கும் ஏற்படும் சிக்கல்களை எதிர்கொண்டு வெற்றிபெறவும், அனைத்துத் திருவள்ளுவர்/திருக்குறள் அமைப்பினர் மற்றும் அமைப்புச் சாராத்திருக்குறள் தொண்டர்களுக்கிடையே நல்லுறவு ஏற்படுத்தவும் உலகெங்கும் உள்ள திருவள்ளுவர்/திருக்குறளை நடுவப்படுத்தி செயலாற்றிவரும் திருக்குறள் தொண்டர்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயல்படுவது காலத்தின் கட்டாயமாகும்.
ஐயன் திருவள்ளுவர் வகுத்துத் தந்துள்ள உலகப்பொதுமறை திருக்குறள் நெறி அடிப்படை- யிலான ஓர் மக்கள் சமுதாயம் உருவாக வேண்டும் என்பதற்காக திருக்குறள் பற்றாளர்கள் மற்றும் திருவள்ளுவர் – திருக்குறள் பெயரில் செயல்படும் அமைப்புகளை ஒருங்கிணைத்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில், திருவள்ளுவர் ஆண்டு 2038 புரட்டாசி மாதம் 15 ஆம் நாள் (01-10.2017) அன்று ஆகிய 22 திருக்குறள் அமைப்பினர் ஒன்றுகூடி, உலகத் திருக்குறள் கூட்டமைப்புத் தொடங்கப் பட்டது. அமைப்புகள் விபரம்:
ஐயன் திருவள்ளுவர் வகுத்துத் தந்துள்ள உலகப்பொதுமறை திருக்குறள் நெறி அடிப்படையிலான ஓர் மக்கள் சமுதாயம் உருவாக வேண்டும் என்பதற்காக திருக்குறள் பற்றாளர்கள் மற்றும் திருவள்ளுவர் – திருக்குறள் பெயரில் செயல்படும் அமைப்புகளை ஒருங்கிணைத்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில், திருவள்ளுவர் ஆண்டு 2038 புரட்டாசி மாதம் 15 ஆம் நாள் (01-10.2017) அன்று
01) குறள்செல்வர் பேராசிரியர் தங்க. ஆதிலிங்கம் (திருக்குறள் அரசுக் கழகம்) வில்லிவாக்கம்.
02) முனைவர் கு. மோகன்ராசு (உலகத் திருக்குறள் மையம்) பெருங்குடி.
03) திருமிகு தெ.பொ. இளங்கோவன் (திருக்குறள் பேரவை ) குரோம்பேட்டை.
04) புலவர் மு.கோ. ஏழுமலை (அடையாறு திருக்குறள் பேரவை) திருவான்மியூர்.
05) கலைமாமணி குமரிச்செழியன் (உலகத் திருக்குறள் வாழ்வியல் நெறி மன்றம்) வில்லிவாக்கம்.
06) குறள்செல்வி தா. பிச்சி ஆதிலிங்கம் – திருவள்ளுவர் திருஅவை அறக்கட்டளை.
07) திருக்குறள் ச. கோதண்டராமன் உலகப்பொதுமறை திருக்குறள் சங்கம்.
08) முனைவர் கசுதூரி ராசா (உலகத் திருக்குறள் பேரவை) சென்னை.
09) முனைவர் கோ. பெரியண்ணன் (திருக்குறள் பேரவை) நங்கநல்லூர்.
10) திருமிகு பூவை அரிகரன் (திருவள்ளுவர் அருள் நெறி மன்றம்) தண்டையார் பேட்டை.
11) முனைவர் இலலிதா சுந்தரம் (திருவள்ளுவர் திருக்குறள் நற்பணி மையம்) பாடி.
12) முனைவர் என்.இ.இராமலிங்கம் (திருவள்ளுவர் கழகம்) ஆதம்பாக்கம்.
13) முனைவர் சாமி தியாகராசன் (திருவள்ளுவர் திருநாட்கழகம்) விருகம்பாக்கம்.
14) திருமிகு கோ. பார்த்த சாரதி (திருவள்ளுவர் இலக்கிய மன்றம்) வாணுவம் பேட்டை.
15) திருக்குறள் பாசுக்கரன் (கருணாகரன் நினைவுத் திருக்குறள் நூலகம்) அண்ணாநகர்.
16) முனைவர் ப.ச. ஏசுதாசன் (திருவள்ளுவர் பைந்தமிழ் இலக்கிய மன்றம்) புரசைவாக்கம்.
17) திருமிகு வள்ளுவ வாடாப்பூ (திருவள்ளுவர் திருச்சபை அறக்கட்டளை) கொடுங்கையூர்.
18) திருமிகு இராம். மோகன்தாசு (திருவள்ளுவர் மிசன்) காட்டாங்கொளத்தூர்.
19) முனைவர் பா. தாமோதரன் (டாக்டர் மு.வ. திருக்குறள் நற்பணி மன்றம்) மேத்தாநகர்.
20) திருமிகு கு.ஆறுமுகம் (திருக்குறள் சங்கம்) அடையாறு.
21) திருமிகு கொ.பா. இராமசாமி (திருக்குறள் பேரவை) நொளம்பூர்.
22) திருமதி கோ.ப. செல்லம்மாள் (உலகத் திருக்குறள் கலைச் சங்கமம்) கோட்டூர்.
ஆகிய 22 திருக்குறள் அமைப்பினர் ஒன்றுகூடி, உலகத் திருக்குறள் கூட்டமைப்புத் தொடங்கப் பட்டது.
உலகத் திருக்குறள் கூட்டமைப்புக்கு நிருவாகிகள் தேர்வு செய்தல்
திருவள்ளுவர் ஆண்டு 2038 கார்த்திகை 23, ஆங்கில ஆண்டு 09-12-2017 அன்று உலகத் திருக்குறள் கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஒன்றுகூடி
தலைவராக திருக்குறள் தெ.பொ. இளங்கோவன் – திருக்குறள் பேரவை,
பொதுச் செயலாளராக குறள்செல்வர் பேராசிரியர் தங்க. ஆதிலிங்கம் – திருக்குறள் அரசுக் கழகம்,
பொருளாளராக திருக்குறள் மு.கோ. ஏழுமலை – அடையாறு திருக்குறள் பேரவை,
துணைத்தலைவராக முனைவர் கசுதூரி ராசா – உலகத் திருக்குறள் பேரவை,
துணைச்செயலாளராக திருக்குறள் மு. வெங்கடேசன் – உலகத் திருக்குறள் மையம்,
ஆகியோர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
கூட்டத்தில் தமிழ்நாடு, அயல் மாநிலங்கள், வெளிநாடுகளில் செயல்பட்டு வரும் திருக்குறள் அமைப்புகளை ஒருங்கிணைக்கும் பணியில் கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் ஈடுபடுவது எனத் தீர்மானிக்கப்பட்டது..
09-12-2017 அன்று தமிழகம், அயல் மாநிலங்கள், வெளிநாடுகளில் செயல்பட்டு வரும் திருக்குறள் அமைப்புகளை ஒருங்கிணைக்கும் பணியில் கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் ஈடுபடவேண்டும் என்னும் தீர்மானத்தின் அடிப்படையில் அடுத்தக்கட்ட செயல்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் 17.02.2018 அன்று சென்னை நீலாங்கரை திருக்குறள் வாழ்வியல் மையத்தின் தலைவர் கவிஞர். செவ்வியன் அவர்கள் இல்லத்தில் தமிழகத்திலுள்ள முக்கியத் திருக்குறள் அமைப்புகளின் பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பேராசிரியர் பா.வளன்அரசு – உலகத் திருக்குறள் தகவல் மையம், குறள்செல்வர் பேராசிரியர் தங்க. ஆதிலிங்கம் – திருக்குறள் அரசுக் கழகம், திருமிகு சி. இராசேந்திரன் – வள்ளுவர் குரல் குடும்பம், முனைவர் கு. மோகன்ராசு – உலகத் திருக்குறள் மையம், திருமிகு குமரிச்செழியன், – திருக்குறள் வாழ்வியல் நெறிக்கழகம், திருமதி குறள்செல்வி பிச்சி ஆதிலிங்கம் – திருவள்ளுவர் திருஅவை அறக்கட்டளை, திருக்குறள் ச.கோதண்டராமன் உலகப்பொதுமறை திருக்குறள் சங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
1, தஞ்சையில் திருக்குறள் அமைப்புகளின் ஒருங்கிணைப்பு மாநாடு நடத்தத் தீர்மானித்தல்:
02.06.2018 அன்று தஞ்சாவூர் பாரத் கல்வி குழுமம் வளாகத்தில் ஒருங்கிணைந்த திருக்குறள்
அமைப்புகளின் ஒருங்கிணைப்பு மாநாடு நடத்தத் தீர்மானிக்கப்ட்டது.
2, தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மாநிலங்களில் திருக்குறள்த் தொண்டாற்றி வரும் அமைப்புகளை ஒருங்கிணைத்தல்:
கூட்டமைப்புத் தொடர்பான கடிதப் போக்குவரத்து மேற்கொள்ளுதல் மற்றும் ஒருங்கிணைப்புப் பொறுப்பினை பொதுச்செயலாளர் குறள்செல்வர் பேராசிரியர் தங்க. ஆதிலிங்கம் அவர்களுக்கு வழங்குவது என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
3, ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் குறள்செல்வர் பேராசிரியர் தங்க. ஆதிலிங்கம் திருக்குறள் சான்றோர்களைச் சந்தித்து ஆதரவு கோருதல்
ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் குறள்செல்வர் பேராசிரியர் தங்க. ஆதிலிங்கம் தமிழ்நாட்டிலுள்ள திருக்குறள்ச் சானறோர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டுவது எனத் தீர்மானித்து ஜெயங்கொண்டம் புலவர் சி. பன்னீர்செல்வம், பெண்ணாடம் திருமிகு தா.கோ சம்பந்தம், கருவூர் வள்ளுவர் கல்வி நிறுவனங்களின் தலைவர் திருமிகு செங்குட்டுவன், பேராசிரியர் வளன்அரசு, பாளையங்கோட்டை, முனைவர் கு. மோகனராசு, திருமிகு குமரிச்செழியன் உள்ளிட்ட பல்வேறு திருக்குறள் சான்றோர்களை அவர்கள் இல்லம் தேடி சந்தித்து உலகத்திருக்குறள் கூட்டமைப்பின் ஒருங்கிணைந்த செயல்பாட்டுக்கு ஆதரவு கோரினார்.