உலகத்திருக்குறள் கூட்டமைப்பின் நோக்கம் மற்றும் குறிக்கோள்களை நடைமுறைப்படுத்திடவும் உறுப்பு அமைப்பினருக்கு வழிகாட்டிடவும் தமிழகத்திலுள்ள 133 குறள் மாவட்டங்கள் அளவிலும், இந்திய மாநிலங்கள் அளவிலும் வெளிநாடுகள் அளவிலும் மாவட்ட அமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இம் மாவட்ட அமைப்புகள் திருக்குறள் மாவட்டங்கள் என அழைக்கப்படும்.
ஒவ்வொரு குறள் மாவட்டத்திற்கும் தலைவர்-1, செயலாளர்-1, பொருளாளர்-1, கரண ஆசான்-1, துணைத்தலைவர்கள்-2 (ஆண்-1, பெண்-1), துணைச்செயலாளர்கள் -2 (ஆண்-1, பெண்-1), திருக்குறள் பள்ளி ஆசிரியர்-1, இளைஞர்கள் -2, மகளிர்-2, மாணவர்கள்-2 என 15 பேர் நிருவாகிகள் தேர்வுச் செய்யப்படுவர்.