உலகத் திருக்குறள் கூட்டமைப்பு

உலகத் திருக்குறள் கூட்டமைப்பு

கொள்கைத் திட்டங்கள்

உலகத் திருக்குறள் கூட்டமைப்புக் கொள்கைத் திட்டங்கள்

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை தமிழ் புத்தாண்டு நாளாக கொண்டாடுதல்.

திருவள்ளுவர் தினத்தை அடிப்படையாகக் கொண்ட நெடுங் கணக்கு முறை தமிழர் ஆண்டு கடைபிடித்தல்.

தமிழ் பண்பாட்டைப் பாதுகாத்து வரும் ஊர்கள் மற்றும் குடும்பங்களின் வரலாற்றை தொகுத்து வெளியிடுதல்.

நாட்டையே சீர்குலைத்து வரும் மது மற்றும் போதைப் பழக்கங்கள் இருந்து தமிழ் மக்களை மீட்டெடுத்தல்.

அனைத்து தமிழ் மக்களுக்கும் குடிநீர், உணவு, உடை, வீடு கிடைப்பதை உறுதிப்படுத்துதல்.

அனைத்து நிலைகளிலும் சூரிய ஒளி மற்றும் இயற்கை எரிசக்தி முறையைப் பயன்பாட்டிற்கு கொண்டு வருதல்.

தமிழ்நாட்டில் நதிகள் இணைப்பு மூலம் இயற்கை விவசாயம் மற்றும் நீர்வழிப் போக்குவரத்தை மேம்படுத்துதல்.

தமிழ் மொழிப் பயன்பாட்டை கல்வி, அலுவல், நீதிமன்றம், வழிபாட்டுத் தலங்களில் நிலை நாட்டுதல்.

உள்ளாட்சி அமைப்புகளை தன்னாட்சி உரிமை கொண்ட தன்னிறைவு பெற்ற அமைப்புகளாக மாற்றி அமைத்தல்.

தமிழர்களின் 150 ஆண்டு கால கனவுத் திட்டமான சேதுக்கால்வா ய் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்.

தமிழ்நாட்டின் பாரம்பரிய நீராதாரங்களாக முல்லைப் பெரியாறு, காவிரி மற்றும் பாலாற்றில் உரிமைகளை நிலை நாட்டுதல்.

இந்திய ஆதிக்க சக்திகளால் அண்டை மாநிலங்களுக்கும் இலங்கைக்கும் தாரை வார்த்துக் கொடுதாதுள்ள தமிழர் பகுதிகளை மீட்டெடுத்தல்.

தமிழ்நாட்டில் அகதிகள் முகாமில் வாழும் ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை மற்றும் வாழ்வாதாரத்தை உறுதிபடுத்துதல்.

சிங்கள பேரினவாத சக்திகளிடம் அடிமைப்பட்டு கிடக்கும் தமிழ் ஈழத்தை மீட்டெடுத்தல்.

தமிழ்நாட்டிற்கும் தமிழ் ஈழத்துக்கும் தனித்தனி அரசியல் அமைப்பு சட்டம், தமிழர்க்கொடிகள் ஏற்படுத்துதல்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ளது போல இந்திய ஒன்றியத்தில் உள்ள அனைத்து மொழிவெளி தேசிய நாடுகளுக்கும் தன்னாட்சி உரிமையை நிலை நாட்டுதல்.

ஐக்கிய நாடுகள்அவையில் தமிழ்நாடு மற்றும் தமிழீழ நாடுகளுக்கு நிரந்தர பிரதிநிதித்துவம் பெறுதல்.

உலக வரைபடத்தில் தமிழ்நாடு மற்றும் தமிழீழ நாட்டின் எல்லை கோடுகளை இடம்பெறச் செய்தல்.

இந்தியா மற்றும் அயல் நாடுகளில் வாழும் தமிழர்களின் நல்வாழ்வையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துதல்.

ஐக்கிய நாடுகள்அவையின் நீடித்த வளர்ச்சிக்கான 17 இலக்குகளை நடைமுறைப்படுத்துதல்.

நம் தமிழ்இனம் காலங்காலமாக இழந்து வந்துள்ள தமிழ்மொழி உரிமை, பண்பாட்டு உரிமை, மண்உரிமை மற்றும் பல்வேறு வளங்களுக்கான உரிமைகள் ஆகியவற்றை ஐயன் திருவள்ளுவர் வகுத்துத் தந்துள்ள உலகப்பொதுமறை திருக்குறள் வழிநின்று மீட்டெடுத்து மீட்டுருவாக்கம் செ ய்து அடுத்தத் தலைமுறையினரிடம் ஒப்படைத்தல்.