கூட்டமைப்பின் நோக்கம் மற்றும் குறிக்கோள்களை நடைமுறைப்படுத்த கிளை அமைப்புகளில் சமுதாய மேம்பாட்டுத்திட்டம் நடைமுறைப்படுத்தபட்டு வருகிறது. அதன்படி
பள்ளிகள், அலுவலகங்கள்,பொது இடங்கள் (ம) வாகனங்களில் திருக்குறள் எழுதி விழிப்புணர்வு.
மாணவ,மாணவியருக்கு ஊர்/நகர்தோறும் வாரம் ஒருநாள் ஒரு மணிநேரம் திருக்குறள் வகுப்பு.
1330 திருக்குறள்களையும் ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு அரசு வழங்கும் ரூ 15,000/- ஊக்கத்தொகை.
திருக்குறள் கரணஆசான்கள் மூலம் வாரம் ஒருநாள் ஒருமணிநேரம் திருக்குறள் வாழ்வியல் கூட்டம்.
குடும்ப நிகழ்வுகளைத் திருக்குறள் நெறிப்படி நடத்துவதன் தேவை குறித்து விழிப்புணர்வு.
குறள்நெறி ஆசான்களாக விரும்புவோருக்குப் பயிற்சி.
2. கல்வி (ம) வேலைஉறுதித் திட்டம்:
தாய்மொழிவழிக் கல்வியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு.
பள்ளிக் கல்வியில் இடைநிற்றல் இல்லாவண்ணம் உறுதி செய்தல்.
அரசுபள்ளியில் படிக்கும் ஏழை,எளிய மாணவர்களுக்கு தனிப்பயிற்சி.
உயர்கல்விக்கு வழிகாட்டுதல்.
திருவள்ளுவர் பெயரில் நூலகம்.
வேலைக்கு வழிகாட்டுதல், சுயதொழில் பயிற்சி (ம) தொழில் தொடங்க வழிகாட்டுதல்.
3. பசுமை (ம) தூய்மைக் கிராமம்/நகர் திட்டம்:
மாதம் ஒரு திட்டப்பணி என்ற அடிப்டையில் தூய்மைப் பணிகள், நாட்டுநலப்பணிகள், மரம் நடுதல், உள்ளிட்டச் சமுதாயப் பணிகள் மேற்கொள்ளுதல்.
சுற்றுச்சூழல்பாதுகாப்பை மேம்படுத்த சோலார் உள்ளிட்ட மின்திட்டங்களின் பயன்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
திடக்கழிவு, திரவக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
வீட்டுத் தோட்டங்கள், மாடித்தோட்டங்கள் மூலம் இயற்கைமுறை காய்கறி உற்பத்தியைப் பெருக்குதல்.
சாக்கடைகள் மற்றும் வீட்டுக்கழிவு நீரினை நன்னீராக்கி பசும்புல்கள், மரச்செடிகள் வளர்த்து பசுமை கிராமமாக மாற்றுதல்.
4. சுகாதாரம் (ம) மக்கள் நல்வாழ்வுத் திட்டம்:
கிராமத்தில் மாணவ, மாணவியர், ஆடவர், மகளிர் என அனைவருக்கும் நோய்கள் வராதவண்ணம் பாதுகாக்கும் வகையில் இயற்கை உணவுமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
கிராம மக்கள் அனைவருக்கும் முதலுதவி பயிற்சி (திவீக்ஷீst கிவீபீ ) வழங்கி உயிர்காக்கும் அரும்பணியாற்ற வழிகாட்டுதல்.
அனைத்து மக்களுக்கும் தொற்றுநோய்கள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துதன்மூலம் நோயற்ற கிராமமாக மாற்றுதல்.
மருத்துவ முகாம்கள் நடத்தி மக்களின் உடற்கூறுகளை கண்டறிந்து, தேவையின் அடிப்படையில் உரிய சிகிட்சை பெற வழிகாட்டுதல்.
இரத்ததானம், உடல்தானம், கண்தானம் செய்வதன் நன்மைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
5. குழந்தைகள், மகளிர் (ம) மூத்த குடிமக்கள் பாதுகாப்புத் திட்டம்:
கிராமத்தில்/நகரில் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி படுத்துதல்.
மகளிருக்கு குடும்ப ஆலோசனை மையம் மூலம் குடும்பப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வழிகாட்டுதல்.
மகளிருக்கு சுயதொழில் பயிற்சி மூலம் பொருளாதார மேம்பாட்டுக்கு வழிகாட்டுதல், மகளிர் (ம) மூத்தகுடிமக்களுக்கு அரசு திட்டங்கள் பெற வழிகாட்டுதல்.
மகளிருக்கு அலுவலகங்களில், பொதுஇடங்களில் பாலியல் தொல்லைகளிலிருந்து தங்களை தற்காத்து கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்பினை உறுதி செய்தல்.
6. ஏழைகள் (ம) கைம்பெண்கள் பாதுகாப்புத் திட்டம்:
ஏழை எளியோருக்கு உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க வீடு, சுத்தமான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்தல்.
கணவனால் கைவிடப்பட்ட (ம) கணவனை இழந்து வாழும் பெண்களுக்குத் தேவையின் அடிப்படையில் உதவிகள் கிடைக்க வழிகாட்டுதல்.
பிள்ளைகளால் கைவிடப்படும் ஏழைகள் (ம) கைம்பெண்கள் வயதான காலத்தில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆதரவற்றோர் இல்லங்களில் பாதுகாப்பாக வாழ வழிகாட்டுதல்.
ஊர் நடுவில் பசிபிணி போக்கும் மையம் ஏற்படுத்தி ஏழை எளியோருக்கு உணவளிக்க திட்டம் வகுத்துச் செயல்படுத்தல்.
ஏழை எளிய குடும்பங்களில் மரணம் நிகழ்ந்துவிட்டால் அதற்கான முழுச் செலவினையும் ஏற்று நல்லடக்கம் செய்தல்.
7. சமூகநலன் (ம) கிராம/நகர் மேம்பாட்டுத் திட்டம்:
மக்களின் பொருளியல் நிலையை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடுஅரசுத்திட்டங்களைப் பெற வழிகாட்டுதல் (ம) சிறுசேமிப்புப் பழக்கத்தை ஊக்குவித்தல்.
இந்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
ஐக்கியநாடுகள் அவையின் நீடித்த வளர்ச்சிக்கான 17 இலக்குகள் குறித்து நடைமுறைப்படுத்த வழிகாட்டுதல்.
கிராமம்/நகர்களில் பாதுகாப்புக்குழு மூலம் சி.சி.டி.வீ கேமரா பொருத்தி குற்றங்கள் நடவாமல் பாதுகாத்தல்.
இடுகாடுகள் (ம) சுடுகாடுகளுக்குச் செல்லும் பாதைகளுக்கு இடையூறு இல்லாதவாறு பா£த்துக் கொள்ளுதல் (ம) சமத்துவ மயானங்கள் அமைவதை உறுதிப்படுத்துதல்.
8. தமிழ்மொழி, கலைகள் (ம) விளையாட்டு மீட்டுருவாக்கத் திட்டம்:
குழந்தைகளுக்கு தூயத் தமிழில் பெயர் வைக்கவும் பிறமொழி கலப்பின்றி பேசவும் எழுதவும் வழிகாட்டுதல்.
வழக்கொழிந்து போன தமிழ்ச் சொற்களை புழக்கத்தில் கொண்டு வரவும் புதிய தமிழ்ச் சொற்களைக் கண்டறியவும் வழிகாட்டுதல்.
வணிக நிறுவனங்கள், எல்லைக்கற்களில் தாய்மொழியில் பெயர்ப்பலகை வைக்க விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
நீதிமன்றங்கள், வழிபாட்டுத்தலங்களில் தாய்மொழியில் வழிபாட்டுமுறைகள் நடைபெற வழிகாட்டுதல்.
தமிழர் கலைகள், விளையாட்டுகள், இயல், இசை, நாடகம் உள்ளிட்டவற்றை நவீன தொழில் நுட்பங்கள் மூலம் மீட்டுருவாக்கம் செய்து, அடுத்தத் தலைமுறையினரிடம் ஒப்படைத்தல்.
தமிழர் குடும்பங்களின் பரம்பரை வரலாற்றைத்தொகுத்து பாதுகாப்பதன் தேவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பதிவுசெய்து பாதுகாத்தல்.
தமிழர் வாழும் ஊர்களின் வரலாறுகளைத் தொகுத்து அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்லுதல்.
உள்நாட்டு (ம) அயல்நாட்டுத் தமிழர்களின் தனிநபர் சாதனைகளைப் பதிவு செய்து, வெளிகொணர்ந்து, மற்றவர்களை சாதனைகள் படைக்க ஊக்கப்படுத்துதல்.
9. பல்துறைத் தலைமைத்துவப் பயிற்சி (ம) சட்டவிழிப்புணர்வுத் திட்டம்:
மாணவ, மாணவியர், இளைஞர், மகளிர், ஆடவர் என அனைவருக்கும் தங்கள் வாழ்வியலுக்குத் தேவையான பல்துறைப்பயிற்சிகள் வழங்குதல்.
யோகா, தற்காப்புக்கலைகள் உள்ளிட்ட உடற்பயிற்சி கலைகள் குறித்து பயிற்சி வழங்குதல்.
இளம்தொழில் முனைவோருக்குத் தேவையான தொழிற்பயிற்சி வழங்குதல்.
உலகநாடுகளின் அரசியல் சட்டங்கள், சாலைபாதுகாப்புச் சட்டங்கள், குற்றவியல் சட்டங்கள், சிவில் சட்டங்கள், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்கள்(ம)மகளிர் உரிமைச் சட்டங்கள் குறித்து பயிற்சிவழங்குதல்.
ஏழை எளியோருக்கு இலவச சட்டஉதவி வழங்கத் தேவையான முயற்சிகள் மேற்கொள்ளுதல்.
குறிப்பு: 1. ஆண்டுக்கு ஒருமுறை உலகத்திருக்குறள் கூட்டமைப்பின் திருக்குறள் வாழ்வியலாக்கத் திட்டத்தினைச் சிறப்பாக நடைமுறைப்படுத்தும் உறுப்பு அமைப்புகளுக்கும், கிளை அமைப்புகளுக்கும் ஊக்கப்பரிசுகள், விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கப்படும்.