உலகத் திருக்குறள் கூட்டமைப்பின் ஆட்சிமன்றக் குழு மற்றும் அறக்கட்டளை நிருவாகிகள் கூட்டம் 26.02.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று கூட்டமைப்பின் தலைவர் திரைப்பட இயக்குநர் வெ. சேகர் தலைமையில் சென்னை தலைமை அலுவலகத்தில் காலை 10.00 மணிக்கு நடைபெற்றது.
கூட்டத்தில் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பேராசிரியர் தங்க. ஆதிலிங்கம், தலைமைக் கரணஆசான் தென்னிலை இராம. கோவிந்தன், மதிப்புறுத் தலைவர் தமிழாசிரியர் ஆ. நெடுஞ்சேரலாதன், அமைப்புச்செயலாளர்கள் தமிழரிமா தா. சம்பத், திருமிகு இராம. தேவராசன், துணைத்தலைவர்கள் திருக்குறள் அ. பெருமாள், திருமிகு ம. குப்புசாமி, புலவர் ஆறு.மெ.மெய்யாண்டவர், துணைப்பொதுச் செயலாளர்கள் திருமிகு பெ. சௌந்தரராசன், திருமிகு கோ. வெங்கடேசன், திருமிகு ம. நிர்மல், திருமிகு ஆல்ஃபி, மண்டலத்தலைவர்கள் திருமதி ஜி. சுவேதா, முனைவர் இரா. வனிதா, புலவர் அ.வி. உமாபதி, திருமிகு க. சின்னதுரை, திருமிகு மாத்தூரான், திருமிகு அ. சித்திரபாரதி, மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் திருமதி குறள்செல்வி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
திருக்குறள் வாழ்த்து: அலுவலகப் பணியாளர்கள் திருமதி பி. தேவி, செல்வி நா. வித்யா ஆகியோர் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் திருக்குறள் கடவுள் வாழ்த்துப் பாடினார்கள்.
வரவேற்புரை: அமைப்புச்செயலாளர் தமிழரிமா தா. சம்பத் வரவேற்புரை ஆற்றினார்.
நிருவாக அறிக்கை: கூட்டமைப்பு மற்றும் அறக்கட்டளைப் பொதுச்செயலாளர் பேராசிரியர் தங்க. ஆதிலிங்கம் திட்டப் பணிகள், குறள்நெறிக் கரண ஆசான் பயிற்சி, நிதிப்பற்றாக் குறை உள்ளிட்டவை குறித்து அறிக்கை செய்தார்.
கூட்டமைப்பின் திட்டப்பணிகளை நெறிப்படுத்துவதற்கும் அறக்கட்டளையின் செயல்பாட்டை வலுப்படுத்துவதற்கும் அறக்கட்டளையின் நிருவாகத்தை மாற்றியமைத்து புதிய நிருவாகிகள் தேர்வு செய்வது எனவும் அவ்வாறு தேர்வு செய்யப்படும் புதிய நிருவாகிகள் மற்றும் அறங்காவலர்கள் 2023 ஏப்ரல் முதல் 2026 மார்ச் வரை பொறுப்பில் இருப்பர் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அ. தலைவர் தேர்வு:
அறக்கட்டளையின் தலைவராக செயல்பட்டு வந்த கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் புலவர் சி. பன்னீர்செல்வம் அவர்கள் வயது முதிர்வு காரணமாக தலைவர் பொறுப்பிலிருந்து பதவி விலகல் கடிதம் வழங்கியுள்ளதால் அன்னாருக்குப் பதிலாக கூட்டமைப்பின் அமைப்புச் செயலாளர் தமிழரிமா தா. சம்பத் அவர்களை அறக்கட்டளையின் புதிய தலைவராகத் தேர்வு செய்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆ. பொதுச்செயலாளர் தேர்வு:
கூட்டமைப்பு மற்றும் அறக்கட்டளையின் பொதுச்செயலாளராக செயல்பட்டுவரும் பேராசிரியர் தங்க. ஆதிலிங்கம் அவர்களை மீண்டும் அறக்கட்டளையின் பொதுச்செயலாளராக தேர்வு செய்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இ. பொருளாளர் தேர்வு:
கூட்டமைப்பின் தலைவராகவும் அறக்கட்டளையின் பொருளாளாராகவும் செயல்பட்டு வரும் திரைப்பட இயக்குநர் வெ.சேகர் அவர்களை மீண்டும் அறக்கட்டளையின் பொருளாளராக தேர்வு செய்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஈ. துணைத்தலைவர்கள் தேர்வு:
கூட்டமைப்பின் மதிப்புறு தலைவர் தமிழாசிரியர் ஆ. நெடுஞ்சேரலாதன், தலைமைக் கரணஆசான் தென்னிலை இராம. கோவிந்தன், துணைத்தலைவர் திருக்குறள் அ. பெருமாள், ஆகியோர் அறக்கட்டளையின் துணைத்தலைவர்களாகதேர்வு செய்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..
உ. அறங்காவலர்கள் தேர்வு:
கூட்டமைப்பின் பொருளாளர் குறள்நெறிச்செல்வர் இராம. சந்திரசேகரன், துணைத்தலைவர் புலவர் ஆறு. மெ. மெய்யாண்டவர், திருமதி குறள்செல்வி, திருமதி மல்லிகா, திருமிகு கோ. வெங்கடேசன், துணைப்பொதுச்செயலாளர்கள் திருமிகு பெ. சௌந்தரராசன், திருமிகு காசி. சாந்தகுமார் மற்றும் திருமிகு வெ.செல்வன் ஆகியோரை அறக்கட்டளையின் அறங்காவலர்களாகவும் தேர்வு செய்து ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஊ. ஒருங்கிணைப்பாளர் தேர்வு:
அமைப்புச்செயலாளர் திருமிகு இராம. தேவராசன் அவர்களை அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எ. நெறியாளர்கள் (ஆலோசகர்கள்) தேர்வு:
அறக்கட்டளையின் புதிய நெறியாளர்களாக (ஆலோசகர்கள்) பேரூர் ஆதினம் மருதாச்சல அடிகளார், கௌமார அடிகளார், குருபழனி அடிகளார், புலவர் சி. பன்னீர்செல்வம், கவிஞர் செவ்வியன், திருமிகு தா. கோ. சம்பந்தம், திருமிகு க. செங்குட்டுவன், திருமிகு கரூர் தங்கராசு, புலவர் மு.கோ. ஏழுமலை, திருமதி புனிதா கணேசன், மதிப்புறு முனைவர் மா. சின்ராசு, திருமிகு சி.எசு. துரை ஆகியோர் தேர்வு செய்து ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.
கூட்டமைப்பின் திட்டப்பணிகளை நடைமுறைப்படுத்தவும் தலைமை அலுவலக வாடகை மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கு மாத ஊதியம் மற்றும் செலவினங்களுக்கு திங்கள்தோறும் குறைந்தது ரூபாய் நாற்பதாயிரம்(40,000/-) தேவைப்படுகிறது.
2022-2023 ஆம் நிதியாண்டில் மட்டும் ஏறத்தாழ ரூபாய் 3,50,000/- பொதுச்செயலாளர் வழியாக கடன் பெற்று பற்றாக்குறையை ஈடு செய்யப்பட்டு வருகிறது. கூட்டமைப்பின் பொருளாளர் வழியாக ஏறத்தாழ ரூபாய் 40,000/- கடன் பாக்கி உள்ளது.
ஆகவே, தொடர்ந்து நிதி பற்றாக்குறை ஏற்பட்டு வருவதால் அறக்கட்டளையின் நிதியாதாரத்தைப் பெருக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வது என ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
மேற்படி செலவினங்களை ஈடு செய்வதற்கு, 2023 மே மாதத்திற்குள் ஒவ்வொரு வருவாய் மாவட்ட மூலம் (குறள் மண்டலம்) அறக்கட்டளைக்கு குறைந்தது தலா பத்தாயிரம் (10,000/-) ருபாய் நன்கொடை பெற்றுத் தந்து கூட்டமைப்பின் நிதிப்பற்றாக்குறையை ஈடுசெய்ய வேண்டும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டமைப்பின் நிதி பற்றாக்குறையை ஈடுசெய்ய அரியலூர் மாவட்டம் சார்பாக ரூபாய் நாற்பதாயிரம் (40,000-/–) நன்கொடை வழங்கப்படும் என அரியலூர் மாவட்டப் பொறுப்பாளரும் கூட்டமைப்பின் துணைப்பொதுச் செயலாளர் திருமிகு
பெ. சௌந்தரராசன் மற்றும் தலைமை ஆசிரியர் க. சின்னதுரை ஆகியோர் உறுதியளித்தனர்.
அதற்கான நிதியளிப்புக் கூட்டம் அரியலூரில் 02.04.2023 ஞாயிற்று கிழமை அன்று நடத்துவது எனவும் அதில் தலைமை நிருவாகிகள் கலந்துக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டதை ஏற்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மத்திய சென்னை மாவட்ட சார்பாக துணைப்பொதுச்செயலாளர் திருமிகு கோ. வெங்கடேசன் 2023 ஏப்ரல் முதல் வாரம் ரூபாய் 15000/- நன்கொடை வழங்கப்படும் என உறுதியளித்தார்
மதுரை மாவட்டம் சார்பாக 2023 மே மாதம் ரூபாய் நாற்பதாயிரம்(40,000/-) நன்கொடை வழங்கப்படும் எனத் துணைத்தலைவர் திருக்குறள் அ. பெருமாள் மற்றும் மண்டலத் தலைவர் திருமிகு மாத்தூரான் ஆகியோர் உறுதியளித்தனர். இது போன்று மற்ற மாவட்ட அமைப்புகளும் நிதியளித்து கூட்டமைப்பின் மாபெரும் புரட்சித் திட்டமான குறள்நெறிக் கரணஆசான் பயிற்சித் திட்டத்தை சிறப்பாக நடைமுறைபடுத்தி வெற்றி பெற ஆக்கமும் ஊக்கமும் வழங்கிட கேட்டு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டமைப்பின் சார்பாக 2023 ஏப்ரல் முதல் 2024 மார்ச் வரை நடைபெறவுள்ள குறள்நெறிக் கரணஆசான் பயிற்சி மற்றும் திட்டப்பணிகளை நடைமுறைப்படுத்துவதற்கும் அறக்கட்டளையின் நிதியாதாரத்தைப் பெருக்குவதற்கும் அறக்கட்டளை நிருவாகிகள் மற்றும் அறங்காவலர்களுக்கு தலா மூன்று அல்லது நான்கு வருவாய் மாவட்டங்கள் (குறள் மண்டலங்கள்) பொறுப்பெடுத்துக் கொள்ளவேண்டும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி, அறக்கட்டளை நிருவாகிகள் மற்றும் அறங்காவலர்களுக்கு கீழ்காணும் மாவட்டங்கள் பொறுப்பு வழங்கப்பட்டு 100 எண்ணம் கொண்ட 100/- ரூபாய் நன்கொடை பற்றுச் சீட்டு தூதஞ்சல் மூலம் அனுப்பிவைப்பது என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் பாண்டிச்சேரி மாநிலம்.
காஞ்சிபுரம் (தெற்கு, வடக்கு), இராணிப்பேட்டை (தெற்கு, வடக்கு) மாவட்டங்கள்.
தென்நென்னை (தெற்கு, வடக்கு), செங்கல்பட்டு (வடக்கு, தெற்கு) மாவட்டங்கள்.
திருப்பத்தூர், தருமபுரி, கிருட்டிணகிரி, வேலூர் மாவட்டங்கள்.
விருதுநகர் (மேற்கு, கிழக்கு), தென்காசி, இராமநாதபுரம் மாவட்டங்கள்.
கருவூர், நாமக்கல், ஈரோடு (தெற்கு, வடக்கு) மாவட்டங்கள்.
மதுரை (மேற்கு, கிழக்கு), தேனி, திண்டுக்கல் (கிழக்கு, மேற்கு) மாவட்டங்கள்
தஞ்சை (வடக்கு, தெற்கு), திருவாரூர், நாகை மாவட்டங்கள்
சிவகங்கை (தெற்கு, வடக்கு), புதுக்கோட்டை (தெற்கு, கிழக்கு) மாவட்டங்கள்
பெரம்பலூர், அரியலூர், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள்
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி (தெற்கு, வடக்கு) மாவட்டங்கள்
மத்திய சென்னை (தெற்கு, வடக்கு), வடசென்னை (தெற்கு), திருவள்ளூர் (தெற்கு) மாவட்டங்கள்
திண்டுக்கல் (வடக்கு), திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்கள்
மத்திய சென்னை (தெற்கு) ,வடசென்னை (வடக்கு), திருவள்ளூர் (மேற்கு, வடக்கு) மாவட்டங்கள்.
திருச்சி (தெற்கு, மத்தி, வடக்கு), புதுக்கோட்டை (வடக்கு) மாவட்டங்கள் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
அறக்கட்டளை நிருவாகிகள் மற்றும் அறங்காவலர்கள் தங்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ள மாவட்டங்களில் தகுதிவாய்ந்த பொறுப்பாளர் இல்லையெனில் தங்களுக்கு தெரிந்த ஒருவரை பொறுப்பாளராக தேர்வு செய்துகொள்ள பொறுப்பு வழங்கப்படுகிறது.
அறக்கட்டளையின் நிருவாகிகள் மற்றும் அறங்காவலர்களுக்கு 100 எண்ணிக்கை கொண்ட நூறு (100/-) ரூபாய் நன்கொடைச் சீட்டுகள் தலைமை அலுவலகத்- திலிருந்து அனுப்பி வைக்கப்படுகிறது.
28.05.2023 க்குள் தங்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ள மாவட்டங்களின் பொறுப்பாளர்களிடம் நன்கொடைச் சீட்டுகள் மூலம் தலா ரூபாய் 10,000/- நன்கொடை பெற்று அறக்கட்டளை வங்கிக் கணக்கில் சேர்த்து விட்டு அடிக்கட்டையைத் தலைமையகத்திற்கு அனுப்பித்தர வேண்டும் எனவும் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
போக்குவரத்துச் செலவுத் தேவைப்படும் மாவட்டப் பொறுப்பாளர்கள் நன்கொடை பெறும் தொகையில் இருபது (20%) விழுக்காடு தொகையினை எடுத்துக்கொள்ளலாம் என ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மதிப்புறுதலைவர் திருமிகு தா.கோ. சம்பந்தம் படத்திறப்பு –
திருக்குறள்நெறி வாழ்வியல் – விழிப்புணர்வு மாநாடு –
கருத்தரங்கம் விழுப்புர மாவட்டச் சிறப்பு மலர் வெளியீடு
திருக்குறள்நெறியில் தமிழரிமா தா. சம்பத் பணிநிறைவுப்பாராட்டு விழா
133 மையங்களில் கரணஆசான் பயிற்சி அளிப்போர் அறிமுகவிழா –
ஆட்சிமன்றக்குழுவினர் – மண் டலத் தலைவர்களின் கருத்துரை
இடம் : சிறி நடராசா நடுநிலைப்பள்ளி, நாப்பாளையத் தெரு, விழுப்புரம்.
காலம் : திருவள்ளுவர் ஆண்டு 2054 சித்திரை 31 (14.05.2023) ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி.
தலைமை : திரைப்பட இயக்குநர் வெ.சேகர், தலைவர். உலகத் திருக்குறள் கூட்டமைப்பு.
வரவேற்புரை : திருமிகு உலக. துரை, தலைவர், விழுப்புரம் மாவட்டம்.
காலை 9.40 மணி: மதிப்புறு தலைவர் திருமிகு தா. கோ. சம்பந்தம் படத்திறப்பு. திறந்துவைத்து மலர்தூவி போற்றுதல் – திருக்குறள் அ. பெருமாள், துணைத்தலைவர், தாளாளர், திருவள்ளுவர் கல்வி நிலையங்கள், எழுமலை, மதுரை மாவட்டம் மற்றும் தலைமைச் செயற்குழுவினர்.
காலை 9.50 மணி: திருக்குறள்நெறி வாழ்வியல் மாநாட்டு நோக்கம் (ம) செயல்அறிக்கை:
வழங்குபவர்: பேராசிரியர் தங்க. ஆதிலிங்கம், பொதுச்செயலாளர்.
காலை 10.00 மணி: விழுப்புர மாவட்டச் சிறப்புமலர் வெளியீடு:
வெளியிட்டு வாழ்த்துரை: திருமிகு எ. சுப்ரமணியன் மதிப்புறு தலைவர், விழுப்புரம் மாவட்டம்.
பெற்றுக்கொள்பவர்கள்: திருமிகு குரு. செயபிரகாசு, சித்தலிங்கமடம்.
புலவர் துரை. இராசமாணிக்கம், திண்டிவனம்.
நல்லாசிரியர் ப. குப்புசாமி, சித்தலிங்கமடம்.
கல்வியாளர் முனைவர் தீ. ரேணுகாதேவி, செங்கல்பட்டு மாவட்ட மகளிரணித் தலைவி.
காலை 10.10 மணி: 2022-2023ஆம் பொருள்(நிதி) ஆண்டிற்கான வரவுசெலவு அறிக்கை:
வழங்குபவர்: குறள்நெறிச்செல்வர் இராம. சந்திரசேகரன், பொருளாளர்.
காலை 10.20 மணி: 2023–2024ஆம் பொருள்(நிதி) ஆண்டிற்கான
எதிர்நோக்குசெயல் அறிக்கை:
முனைவர் க. சின்னதுரை மண்டலத் தலைவர், பெரம்பலூர் மாவட்டம்.
காலை 10.30 மணி: தலைமைச் செயற்குழுவினர், ஆட்சிமன்றக்குழுவினர் மண்டலத்
தலைவர்கள் நன்கொடை தொகை மற்றும் பற்றுச்சீட்டு ஒப்படைத்தல்:
காலை 10.40 மணி: அறக்கட்டளை வைப்புநிதித் திட்டம் தொடங்கிவைத்தல்:
தமிழரிமா தா. சம்பத், அறக்கட்டளைத் தலைவர்,
காலை 10.50 மணி: ஐந்தாவது (5) பொதுக்குழுக் கூட்ட நாள் மற்றும் இடம் தீர்மானித்தல்
மற்றும் செயற்குழுவினர் கொண்டு வரும் பிறதீர்மானங்கள்.
முற்பகல் 11.00 மணி: தமிழர் வாழ்வியலில் திருக்குறளும் தமிழும்
சான்றோர்கள் பார்வையில் – சிறப்புக் கருத்தரங்கம்:
தலைமை: பேராசிரியர் க. கருத்தபாண்டி, துணைத்தலைவர்.(கோவில்பட்டி)
முற்பகல் 11.10 மணி: இராமலிங்க வள்ளலாரின் ஆன்மீகப் பயணத்தில்:
திருமிகு பெ. சௌந்தரராசன், துணைப்பொதுச்செயலாளர்(அரியலூர்),
முற்பகல் 11.20 மணி: காந்தியடிகளின் விடுதலைப் போராட்டக் களத்தில்:
திருமிகு இராம. தேவராசன், ஒருங்கிணைப்பாளர்.(திருப்பத்தூர்)
முற்பகல் 11.30 மணி: பெருங்கவி பாரதியார் கவிதைகளில்:
திருமிகு காசி. சாந்தகுமார், துணைப்பொதுச்செயலாளர்.(கன்னியாகுமரி)
பகல் 11.40 மணி: பெருந்தலைவர் காமராசர் ஆட்சியில்:
முல்லை நா. செல்லத்துரை, மண்டலத்தலைவர், (கன்னியாகுமரி).
பகல் 11.50 மணி:
தந்தை பெரியார், சிந்தனையாளர் மா.அர்த்தனாரி ஆகியோரின் பகுத்தறிவு கருத்துக்களில்:
ஓ.டெக்சு.மா.அ. இளங்கோவன், துணைத்தலைவர்(சேலம்)
ப க ல் 1 2 .0 0 ம ணி : மறைமலைஅடிகளின் ஆய்வுப்பணியில்:
முனைவர் இரா. வனிதா, மண்டலத்தலைவர் (காரைக்குடி)
ப கல் 12.10 மணி: பேரறிஞர் அண்ணாவின் மக்கள் பணியில்:
தென்றல் ஆ. சேகர், துணைத்தலைவர்,(உடுமலைப்பேட்டை)
ப க ல் 1 2 .2 0 மணி: பாவேந்தர் பாரதிதாசன் புரட்சிப்பாடல்களில்:
திருமிகு சுந்தர. அருணகிரி, செயலாளர், விழுப்புரம் மாவட்டம்.
பகல் 12.30 மணி: குன்றக்குடி அடிகளாரின் சமுதாயப் பணியில்:
லயன் செ. அன்பழகன், மண்டலத்தலைவர், (தஞ்சை).
பிற்பகல் 12.40 மணி: முதுமுனைவர் இரா. இளங்குமரனாரின் இல்லற நிகழ்வுகளில்:
ª த ன்னிலை இராம. கோவிந்தன், தலைமைக் கரணஆசான் (கருவூர்)
ப க ல் 1 2 .5 0 ம ணி : தி ருக்குறள்நெறியில் அறக்கட்டளைத் தலைவர் தமிழரிமா தா. சம்பத்
அவர்களின் பணிநிறைவுப் பாராட்டு விழா
நிகழ்வுப்பொறுப்பாளர்: திருமதி குறள்செல்வி, மகளிர் ஒருங்கிணைப்பாளர்
பிற்பகல் 1.10 மணி: உணவு இடைவேளை:
பிற்பகல் 2.00 மணி:
மாவட்டப் பயிற்சி மையங்களில் – கரண ஆசான் பயிற்சிஅளிப்போரை அறிமுகம் செய்துவைக்கும் ஆட்சிமன்றக்குழுவினர்:
இராணிப்பேட்டை: திருமிகு க. தயாளன் – கடலூர் மேற்கு: திருமிகு முத்துசெயராம்
மத்திய சென்னை: திருமிகு கோ. வெங்கடேசன் – கன்னியாகுமரி: திருமிகு காசி. சாந்தகுமார்
மாவட்டப் பயிற்சி மையங்களில் – கரண ஆசான் பயிற்சிஅளிப்போரை
அறிமுகம் செய்துவைக்கு ம் மண்டலத்தலைவர்கள்:
கடலூர் கிழக்கு: திருமிகு மா. ஆறுமுகம் – தூத்துக்குடி: திருமிகு ப. முத்துச்செல்வன்
காஞ்சிபுரம்: திருமிகு ம.குப்புசாமி – திருவண்ணாமலை: புலவர் ந. இராச மனோகரன்
விழுப்புரம்: புலவர் அ.வி. உமாபதி – சேலம்: திருமிகு காளி. தங்கதுரை
தருமபுரி: திருமிகு கீரை. பிரபாகரன் – திருநெல்வேலி: திருமிகு சண்முகசுந்தரம்
கள்ளக்குறிச்சி: திருமிகு மொ. நடராசன் – பெரம்பலூர்: திருமிகு க. சின்னத்துரை
அரியலூர்: திருமிகு சிவன். பாண்டியன் – திருப்பத்தூர்: திருமிகு பி. பாண்டியன்
மதுரை: திருமிகு இராம. மாத்தூரான் – தேனி: திருமிகு ம. சீனிவாசன்
செங்கல்பட்டு: திருமதி ஆசுகவி இனியா – திருவள்ளூர்: நெய்வேலி கண்ணன்
தஞ்சை: லயன் செ. அன்பழகன் – திருச்சி: திருமதி க. மல்லிகா
சிவகங்கை: திருமதி ஜி. சுவேதா – கருவூர்: திருமிகு இரா. திருமூர்த்தி
நாமக்கல்: திருமிகு செந்தில்முருகன் – விருதுநகர்: திருமிகு சு.கு. தொல்காப்பியன்
திருப்பூர்: திருமிகு கொழுமம் ஆதி – வடசென்னை: திருமிகு இரத்தினதாசு
நீலகிரி: திருமிகு சுரேசு ரமணா – நாகை: திருமதி த. சுகுணா
மயிலாடுதுறை: திருமிகு சுகுமாரன் – ஈரோடு: திருமிகு நசியனூர் பழனிச்சாமி
கிருட்டிணகிரி: திருமிகு அ.க. இராசு – வேலூர்: திருமிகு குடியாத்தம் குமணன்
தென்காசி: திருமிகு இராமர் – இராமநாதபுரம்: திருமிகு சண்முகராஜேஷ்வரன்
புதுக்கோட்டை: திருமிகு ம.கண்ணதாசன் – கோவை: திருமிகு பாண்டியராசன்
குறிப்பு: கரணஆசான் பயிற்சியளிப்பவர்களை அறிமுகம் செய்யும்போது தங்கள் கீழ் பயிற்சி பெறுபவர்களின் விண்ணப்பப்படிவங்களை ஒப்படைத்தல் வேண்டும். 1330 விண்ணப்பப்படிவங்களின் நகல் தமிழக முதல்வரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
பிற்பகல் 3.00 மணி: கரணஆசான் பயிற்சி நோக்கவுரை:
புலவர் ந. இராச மனோகரன், மண்டலத் தலைவர் (திருவண்ணாமலை)
பிற்பகல் 3.10 மணி: கரணஆசான் பயிற்சி ஊக்கவுரை
புலவர் அ. வி. உமாபதி, மண்டலத்தலைவர் (விழுப்புரம்)
பிற்பகல் 3.20 மணி: கரணஆசான் பயிற்சி ஆக்கவுரை
புலவர் ஆறு.மெ.மெய்யாண்டவர் – துணைத்தலைவர் (காரைக்குடி)
பிற்பகல் 3.30 மணி: திருக்குறள் வாழ்வியல் மாநாட்டுத் தீர்மானங்கள்:
பிற்பகல் 3.40 மணி: தலைமைஉரை:
திரைப்பட இயக்குநர் வெ. சேகர், தலைவர்
பிற்பகல் 4.00 மணி: நன்றியுரை:
முனைவர் தி.க. நாகராசன் மாவட்டத் துணைத்தலைவர், விழுப்புரம் மாவட்டம்.
!!! கூட்டமைப்பு எழுச்சிப்பண்!!!
உலகத் திருக்குறள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் செயல்பாட்டுக்குழுக் கூட்டம் திருவள்ளுவராண்டு 2054 ஆவணி இருபத்தி நான்காம் நாள் (10.09.2023) ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 11.30 மணிக்கு சிட்டி அரங்கத்தில் (சிமிஜிசீ பிகிலிலி கி/சி), குப்தா சுவீட்ஸ் மாடி, சேலம்- — 201, (சேலம் சீலநாயக்கன் பட்டி மேம்பாலம் அருகில் – சந்திர மகால் திருமண மண்டபத்தின் எதிரில்) தமிழ்நாடு மேற்கு மண்டலத் தலைவர் திருமிகு எம்.எஸ் மனோகரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் பொதுச்செயலாளர் குறள்செல்வர் பேராசிரியர் தங்க.ஆதிலிங்கம், மத்திய சென்னை மாவட்டம்; தலைமைக் கரண ஆசான் திருமிகு தென்னிலை. இராம கோவிந்தன், கரூர் மாவட்டம்; அறக்கட்டளைத் தலைவர் தமிழரிமா தா. சம்பத், கள்ளக்குறிச்சி மாவட்டம்; துணைத் தலைவர்கள் எழுமலை அ.பெருமாள், மதுரை மாவட்டம்; புலவர்மாமணி ஆறு.மெய்யாண்டவர், சிவகங்கை மாவட்டம்; துணைப்பொதுச்செயலாளர்கள் நல்லாசிரியர் பெ-.சௌந்தராசன், அரியலூர் மாவட்டம்; திருமிகு நோ.ஆல்ஃபி, தென்சென்னை மாவட்டம்; திருமிகு கோ. கார்த்திகேயன், தஞ்சை மாவட்டம்; தலைமை ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் திருமிகு மு.ஞானமூர்த்தி, கடலூர் கிழக்கு மாவட்டம்; மண்டலத் தலைவர்கள் முனைவர் க. சின்னத்துரை, பெரம்பலூர் மாவட்டம்; திருமிகு இரா. சுந்தரராசன், கும்பகோணம் மாவட்டம்; திருமிகு மு. முருகானந்தம், இராமநாதபுரம் மாவட்டம்; திருமிகு இரா.நெடுஞ்செழியன், கள்ளக்குறிச்சி மாவட்டம்; திருமிகு வி. உமாபதி, விழுப்புரம் மாவட்டம்; பேராசிரியர் ம.இளையராசன், கோவை மாவட்டம்; பேராசிரியர் ஆசுகவி இனியா, காஞ்சிபுரம் மாவட்டம்; திருமிகு ஆர் முருகமணி, திருவண்ணாமலை மாவட்டம்; திருமிகு ஜெ. எம். ஞானசம்பந்தம், கடலூர் மேற்கு மாவட்டம்; கவிஞர் கீரை பிரபாகரன், தருமபுரி மாவட்டம்; திருமிகு ச.சந்திரன், நாமக்கல் மாவட்டம்; மற்றும் 22 குறள் மாவட்டத் தலைவர்கள் என மொத்தம் 42 பேர் கலந்து கொண்டனர்.
சேலம் திருமிகு சாந்தகுமார் தாஸ் வரவேற்புரையாற்றினார். எமது அழைப்பினை ஏற்று வருகை தந்து சிறப்பித்த சான்றோர்களுக்கும் வரஇயலவில்லை என்றாலும் கூட்டத்தில் எடுக்கும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவோம் என்று செய்தி அனுப்பி வாழ்த்திய நல்உள்ளங்களுக்கும் நன்றியினைத் தெரிவி த்துக் கொள்கிறோம். கூட்ட நிகழ்வு ஒளிப்படங்கள் குறள் மாவட்டத் தலைவர்கள் என்னும் புலனத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
பின்னர் திட்டச் செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது. பொதுச்செயலாளர் பேராசிரியர் தங்க.ஆதிலிங்கம் அவர்கள் பேசும்போது தமிழ்நாட்டை தென் (நெல்லை) மண்டலம், பாண்டிய (மதுரை) மண்டலம், சிவகங்கை மண்டலம், சோழ (தஞ்சை) மண்டலம், கடலூர் மண்டலம், திருவண்ணாமலை (மத்திய) மண்டலம், கொங்கு (கோவை) மண்டலம், சேலம் மண்டலம், தொண்டை (காஞ்சி) மண்டலம், சென்னை மண்டலம் ஆகிய 10 மண்டலங்களாக பிரித்து புதிய கிளை அமைப்புகள் ஏற்படுத்தும் பணியை ஆய்வு செய்துத் தேவையான வழிகாட் டுதல் வழங்கவேண்டும் எனத் தெரிவித்தார்.
அத்துடன், கூட்டமைப்பின் புதிய கிளை அமைப்புகள் ஏற்படுத்தும் பணியினை விரைவுபடுத்த 5 பேர் கொண்ட (8 மாவட்டங்களுக்கு ஒருவர்) தலைமை ஒருங்கிணைப்புக்குழு தேர்வு செய்ய வேண்டுமெனவும் 10 பேர் கொண்ட (4 மாவட்டங்களுக்கு ஒருவர்) மண்டலச் செயல்பாட்டுக்குழுத் தேர்வு செய்ய வேண்டுமெனவும், ஒரு மாவட்டத்திற்கு ஒருவர் என 40 மாவட்டச் செயல்பாட்டுக் குழுவினர் தேர்வுச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
மேலும் அயல்மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் கூட்டமைப்பின் கிளை அமைப்புகள் ஏற்படுத்த வேண்டுமெனவும் அதற்கு அனைத்துப் பொறுப்பாளர்களும் முன்முயற்சி எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.
துணைத் தலைவர் திருமிகு ஆறு.மெய்யாண்டவர், அவர்கள் பேசும்போது பொதுச்செயலாளர் மற்றும் தலைமை நிருவாகிகள் மண்டல வாரியாக சுற்றுப்பயணம் செய்து, புதிய கிளை அமைப்புகள் ஏற்படுத்தும் பணியினை விரைவுபடுத்த வேண்டுமெனக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
உலகத் திருக்குறள் கூட்டமைப்பின் ஆட்சிமன்றக்குழுக் கூட்டம் திருவள்ளுவராண்டு 2054 மார்கழி ஒன்றாம் நாள் (17.12.2023) ஞாயிற்றுக்கிழமை அன்று கடலூர் மாவட்டம் பெண்ணாடகம் சரோ இரத்தின அரங்கத்தில் காலை 11.00 மணிக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் அரிமா ஞானமூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
தொடக்க நிகழ்வாக அவையோர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர். விழுப்புரம் மாவட்ட கரணஆசான் புலவர் அ.வி. உமாபதி திருக்குறள் கடவுள் வாழ்த்து பாடினார். கடலூர் மண்டலத் தலைவர் திருமிகு ஜெ. எம். திருஞான சம்பந்தம் வரவேற்புரையாற்றினார்.
அரியலூர் மண்டலத் தலைவர் நல்லாசிரியர் பெ. சௌந்தரராசன் மற்றும் தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமிகு ம.வ. தசரதன் (திருப்பத்தூர்) ஆகியோர் மாவட்டம் தோறும் திருக்குறள் கரணஆசான் பயிற்சிக் குறித்து கருத்துரை வழங்கினர். தலைமை ஒருங்கிணைப்பாளர் திருக்குறள் அ. பெருமாள் (மதுரை) மற்றும் கள்ளக்குறிச்சி மண்டலத் தலைவர் திருமிகு இரா. பழனிவேல் ஆகியோர் திருக்குறள் கரண ஆசான்கள் அரங்கேற்ற விழா – மாநாடு வரவேற்புக்குழு அமைத்தல் குறித்து கருத்துரை வழங்கினர். சிவகங்கை வடக்கு மண்டலத் தலைவர் முனைவர் இரா. வனிதா மற்றும் மத்திய சென்னை மண்டலத் தலைவர் திருமிகு கோ. வெங்கடேசன் ஆகியோர் கிளை அமைப்புகள் உருவாக்குதல் அனுபவம் குறித்து கருத்துரை வழங்கினர். கிளை அமைப்புகள் செயல்பாடுகள் குறித்து கருத்துரை வழங்கினர். பெரம்பலூர் மண்டலத் தலைவர் முனைவர் க. சின்னத்துரை மற்றும் விழுப்புரம் மாவட்ட கரணஆசான் புலவர் அ. வி. உமாபதி ஆகியோர் கிளை அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து கருத்துரை வழங்கினர். தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் பொறியாளர் கோ.கார்த்திகேயன் (தஞ்சாவூர்) மற்றும் திருமிகு நோ. ஆல்ஃபி (தென் சென்னை) ஆகியோர் மாவட்ட, வட்டார கிளைப் பொறுப்பாளர்களுக்குப் பல்துறைப் பயிற்சியின் தேவைக் குறித்து கருத்துரை வழங்கினர். வேலூர் மண்டலத் தலைவர் திருமிகு ஜெ. என். ஜெனார்த்தனன் மற்றும் திருப்பத்தூர் மண்டலத் தலைவர், திருமதி உலக. தேன்மொழி ஆகியோர் அடுத்த 2 ஆண்டுகளுக்கான பொறுப்பாளர்கள் தேர்தல் – தகுதி குறித்து கருத்துரை வழங்கினர்.
மகளிர் ஒருங்கிணைப்பாளர் திருமதி குறள்செல்வி (சென்னை) 2022 – 2023 ஆம் நிதியாண்டு மற்றும் 2023 முதல் காலாண்டுக்கான (ஏப்ரல், மே, ஜீன்) வரவு செலவு அறிக்கை மற்றும் மகளிர்துறை வலுப்படுத்துதல் குறித்து கருத்துரை வழங்கினார். தலைமை ஒருங்கிணைப்பாளரும், அறக்கட்டளைத் தலைவருமான தமிழரிமா தா. சம்பத் அறக்கட்டளை வரவு செலவு அறிக்கை மற்றும் அறங்காவலர்க்குழுவினை வலுப்படுத்துதல் குறித்து கருத்துரை வழங்கினார். பொதுச்செயலாளர் பேராசிரியர் தங்க.ஆதிலிங்கம் அவர்கள் கூட்டமைப்பின் நிருவாகக் கட்டமைப்பினை வலுப்படுத்துவது குறித்தும் தமிழர் இல்லங்களில் திருமணம் உள்ளிட்ட குடும்ப நிகழ்வுகளை தமிழ் வழியில் ஒரு தமிழ் ஆசானைக்கொண்டு தமிழ்மறைத் திருக்குறள் ஓதி நடத்துவதன் தேவை குறித்தும் திருக்குறள் கரண ஆசான் பயிற்சித் திட்டத்தின் தேவை குறித்தும் நிறைவுரையாற்றினார்.