உலகத் திருக்குறள் கூட்டமைப்பு

உலகத் திருக்குறள் கூட்டமைப்பு

கூட்டமைப்பு ஏன்?

தமிழர் தொன்மைச்சிறப்பு:

உலகில் முதன்முதல் தோன்றிய இனம் தமிழர் இனம் எனவும்….
உலக முதல் உயர்தனிச் செம்மொழி தமிழ்மொழி எனவும்….

உலகில் மிகப் பழமையான குமரிக்கண்ட நாடு தமிழர் நாடு எனவும் தொல்லியல் ஆய்வுக தெரிவிக்கின்றன.

குமரிக்கண்ட நாகரிகம்…சிந்துவெளி நாகரிகம்… சங்க கால நாகரிகம்….
எனத் தலைசிறந்த தமிழர் நாகரிகங்களை உலகுக்கு வழங்கியவர்கள் தமிழர்கள்….

முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என மூன்று சங்கங்கள் அமைத்து மொழியும் பண்பாடும் வளர்த்தவர்கள் பெருமைமிகு தமிழர்கள் சங்க காலத் தமிழர்கள்….

சங்க காலத்தில் சேரர், சோழர், பாண்டியர் ஆகிய மூவேந்தர்களும் தமிழ் கூறும் நல்லுலகை ஆண்டவர்கள் தமிழ் மரபினர்…

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து வகையாக நிலங்களில் சிறப்புடன் வாழ்ந்து வந்தவர்கள் சங்ககாலத் தமிழர்கள் ….

புற வாழ்வியல் கோட்பாடு… அக வாழ்வியல் கோட்பாடு… என இரண்டு தலை சிறந்த வாழ்வியல் கோட்பாடுகளைக் கொண்டது சங்க கால த் தமிழர் வாழ்வியல் முறை…

அறத்துக்குச் சிறப்புக் கொடுத்து அறம், பொருள், இன்பம் என்னும் அடிப்படையில் தங்கள் வாழ்வியலை அமைத்துக் கொண்டவர்கள் தமிழர்கள்….

எடுத்துக்காட்டு “அந்நிலை மருங்கின் அறமுத லாகிய மும்முதற்பொருட்கு முரிய வெண்ப” (செய்யுள் 105) என்று தொல்காப்பியமும்,

“அறனும் பொருளும் இன்பமு மூன்றும் ஆற்றும் பெருமநின் செல்வம்“(28)
“சிறப்புடை மரபிற் பொருளு மின்பமும் அறத்து வழிப் படூஉந் தோற்றம் போல” (31)
என்று புறநானூறும் தமிழர் வாழ்வியல் கோட்பாட்டை வகைப்படுத்துகின்றன…..

சுருங்கக் கூறின் அறவழியில் பொருளீட்டி அதைக் கொண்டு அறவழியில் இன்பம் நுகர வேண்டும்
என்பது தமிழர் வாழ்வியல் கோட்பாடு ஆகும்…..

குமரிக்கண்ட நாகரிகம் தமிழர் நாகரிகம் என்பதற்கு தொல்லியல் ஆய்வுகள் சான்று பகர்கின்றன….
சிந்துவெளித் தமிழர் நாகரிகம் நகர நாகரிகம் என்பதற்கு சர் ஜாண் மார்சல் தலைமையில் 1922 இல் நடைபெற்ற மொகஞ்சதாரோ அரப்பா அகழாய்வு சான்று குறிப்பிடத்தக்கது….

மொத்தத்தில் தமிழ் இனம் தோன்றிய காலம் முதல் தங்கள் அறவழி வாழ்வியல் முறைகள், அரசியல்
கோட்பாடுகள் மற்றும் பண்பாட்டுக்கூறுகள் மூலம் பன்னெடுங்காலமாக மனித நேயத்திற்கு மணி மகுடம் சூட்டி மகிழ்ந்தவர்கள் நம் தமிழர் இனம்,

இந்தியத் துணைக் கண்டத்தில் சிந்துவெளி தமிழர் நாகரிகம் மற்றும் சங்ககால தமிழர் நாகரிகம் ஆகிய தன்னிகரில்லா உயரிய இரண்டு நகர நாகரிகங்களைச் சம காலத்தில் நிறுவி,

உலக மானுட இனத்திற்கே வழிகாட்டியுள்ளனர் என்பதை, சிந்துவெளியிலுள்ள மொகஞ்சதாரோ, அரப்பா மற்றும் தமிழ்நாட்டில் அரிக்கமேடு, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் கிடைக்கப் பெற்றப் புதைப்பொருள்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தற்போது, சிவகங்கை மாவட்டம் ‘கீழடியில்’ நடைபெற்று வரும் ஆய்வு முடிவுகள் அதற்கு சான்று பகிர்கின்றன.

திருவள்ளுவர் காலத்துக்கு முந்தைய தமிழர் நிலை:

இத்தகுச் சிறப்புப் பெற்றுத் திகழ்ந்த நம் தமிழர் இனத்தின் வீழ்ச்சி, ஏறத்தாழ ஐயாயிரம் ஆண்டுகளுக்கு (பொது ஆண்டு – கி.மு 2500) முன்னர், ஆடுமாடுகளுக்கு மேய்ச்சல் நிலங்களைத் தேடி, ஒரு நாடோடிக் கூட்டம்
கைபர், போலன் கணவாய்களின் வழியாக இந்தியத் துணைக்கண்டத்துக்குள் நுழைந்த போது தொடங்கிற்று.

ஆரியர்கள் இந்தியாவில் நுழைந்த போது வடக்கே சிந்துவெளி நாகரிகம் தெற்கு சங்ககால நாகரிகமும் சிறந்து விளங்கின….

சிந்துவெளி மக்களிடம் நெருங்கி பழகி- திருமண உறவு ஏற்படுத்திக் கொண்டு-அவர்களின் வாழ்வியல் முறையைத் தனதாக்கிக் கொண்டனர் ஆரியர்கள்….

சிறிதுசிறிதாக சிந்துவெளி பகுதியைக் கைப்பற்றி ஆரிய வர்த்தம் என்னும் அரசை அமைத்துக் கொண்டவர்கள் ஆரியர்கள்…..

ஆரியர்களின் நயவஞ்சகச் சூழ்ச்சிகளுக்கு ஆட்பட்டு அடங்கிப் போனப்போன தமிழர்கள் வேத மதத்தையும் (வைதீக மதம்) நால்வருணக் கோட்பாட்டையும் ஏற்றுக் கொண்டு ஆரியமயமாயினர்….

வேத (வைதீக)மதம் என்பது ரிக், எசூர், சாமம், அதர்வணம் ஆகிய ஆரிய வேத நூல்களை அடிப்படையாகக் கொண்டது….

நால்வருணக் கோட்பாடு என்பது ஆரியப் பிராமணர்கள் கடவுளின் தலையில் பிறந்தவர்கள்ச த்திரியர்கள் தோளில் பிறந்தவர்கள், வைசியர்கள் வயிற்றில் பிறந்தவர்கள் சூத்திரர்கள் காலில் பிறந்தவர்கள் என்னும் வைதீகக் கோட்பாட்டை அடிப்படையானது….

காலப்போக்கில் சிந்துவெளி தமிழர் மீது மூட நம்பிக்கைகளையும், பழக்க வழக்கங்களையும் புகுத்தி,
அவர்களை வீழ்த்தி ‘ஆரிய வர்த்தம்’ என்னும் பெயரில் தங்கள் நால்வருணக் கோட்பாட்டு ஆட்சி முறையை நிறுவிக் கொண்டனர் எனவும் இந்திய வரலாற்று ஆய்வுகள் கூறுகின்றன.

நால்வருணக் கோட்பாட்டைத் தமிழ் மக்களிடம் திணித்தல்:

சிந்துவெளித் தமிழர்களை வீழ்த்துவதற்கான போர்க் கருவிகளாக தொடக்கக் காலத்தில் ரிக், யசூர், சாமம், அதர்வணம் என்னும் நான்கு வேதங்களையும், பின்னாளில் இராமாயணம், மகாபாரதம், மனுதருமம் உள்ளிட்ட புராண இதிகாசங்களையும் அவர்கள் பயன்படுத்தி உள்ளனர்.

இந்தியத் துணைக்கண்டத்திற்குச் சொந்தக்காரர்களான தமிழர்கள் வீழ்த்தபட்ட வரலாற்றின் பின்புலத்தில் புதையுண்டுக் கிடக்கும் மற்றொரு செயிதி இற்றைநாள் தமிழர்களுக்குத் தெரியுமா என்ன?

கொவ்வைச் செவ்வாயும் குமிழ்ச் சிரிப்பும் செக்கர் மேனியும் உடைய ஆரியப் பெண்களையும் மற்றொரு வகைப் போர்க்கருவிகளாக பயன்படுத்தி, சிந்துவெளித் தமிழ் மக்களை வீழ்த்தியுள்ளனர். இதன்விளைவாக, தமிழ்வேந்தர்களும், செல்வந்தர்களும் ஆரியப் பெண்களின் மடியில் வீழ்ந்து, மகிழ்ந்து, தன்நிலை இழந்து இன்பத்தில் திளைத்தனர்.

தமிழ் இனத்தின் இனமான செங்கோல், ‘செக்கர் மேனியரின்’ காலடியில் மண்டியிட்டது. நாம் ஏற்கெனவே கூறியுள்ளபடி, ஆரியரின் நான்கு வேதங்கள் அரியணை ஏறின. தமிழ் மன்னர்கள் மனுதர்மத்தின் காவலர்கள் ஆனார்கள். தமிழ் மக்கள் இரண்டாந்தரக் குடிமக்கள் ஆக்கப்பட்டார்கள்.

‘அரசுரிமை’, என்பது வழிவழியாக கடவுளால் வழங்கப்பட்டது எனக் கதைக்கப்பட்டது. அரசனைக் கேள்விக் கேட்டால் கடவுள் நிந்தனை ஆகும் என மக்கள் மிரட்டப் பட்டனர். ஆரியப் பார்ப்பனர்கள் தமிழ் வேந்தர்களின் ஆசான்கள் ஆனார்கள். அரசின் அடிவருடிகளுக்கு வரிவசூல் செயியும் உரிமைக் கிடைத்தது. அவர்களுக்கே கல்வி உரிமையும் வழங்கப்பட்டது.

ஆரியர்களின் சோம, சுரா பானங்கள் ‘அமிர்தம்’ எனக் கற்பிக்கப்பட்டது. ‘பரத்தையர் முறை’ மக்கள் வாழ்வியலாக்கப்பட்டது.‘தாசிமுறை’ சட்டவடிவம் பெற்றது. உயர்சாதியினருக்கு ‘காமம்’ வழங்குவது மட்டுமே சூத்திரப் பெண்களின் பணி என்றானது.

பிரம்மன் முழுமுதற் கடவுளாக்கப் பட்டார். நால்வருணக் கோட்பாடு அரசுச் சட்டமானது. பிரம்மனின் தலையில் பிறந்தவர்கள் பார்ப்பனர்கள்; தோளில் பிறந்தவர்கள் சத்திரியர்கள்; வயிற்றில் பிறந்தவர்கள் வைசியர்கள்; காலில் பிறந்தவர்கள் சூத்திரர்கள் (மேற்கூறப்பட்ட 3 பிரிவினருக்கும் பணிவிடை செயிபவர்கள்) என சாதி படிநிலை கற்பிக்கப்பட்டது.

இந்த நால்வருண சாதி படிநிலை அமைப்பினை எதிர்த்து களம் கண்டவர்கள் பஞ்சமர்கள் எனப்பட்டனர். இவர்களுக்குக் கல்வி உரிமை மறுக்கப்பட்டது.

ஆரியக் கடவுளர்களான இந்திரன், சோமன் (சோம பானம்) அக்கினி, வாயு, வருணன் ஆகியோர் வழிபடும் தெயிவங்கள் ஆனார்கள். தமிழர்களின் குலதெயிவ வழிபாடும் நடுகல் வழிபாடும் பிசாசு வழிபாடு என மடைமாற்றம் செயியப்பட்டது.

நம் ‘தாயித் தமிழ்மொழி நீசமொழி’ என புறந்தள்ளப் பட்டது. ‘சமற்கிருதம் தேவமொழி’ எனப் போற்றப்பட்டது. தமிழகத்தின் ‘ஊர்ப் பெயர்கள்’ சமற்கிருத மயமாக்கப்பட்டது. தமிழ் இசை ‘கருநாடக சங்கீதம்’ ஆக்கப்பட்டது. தமிழர் நாட்டியம் ‘பரதநாட்டியம்’ ஆனது. தமிழர் வாழ்வியலில் ‘சோதிடக்கலை’ என்ற பெயரில் மூட நம்பிக்கைகளும், பழக்க வழக்கங்களும் திணிக்கப்பட்டன.

‘வேள்வியும், நரபலியும்’ கடவுளுக்கு உகந்தது என வலியுறுத்தப் பட்டது. குழந்தைத் திருமணமும் (பாலிய விவாகம்), கணவர் இறந்தால் மனைவியை தீயில் தள்ளி, கொன்றுவிடும் முறை (உடன்கட்டை ஏறுதல்) மக்கள் சட்டமாக்கப்பட்டது.

மொத்தத்தில், ஆரியம் அரியணையில்! அன்னைத் தமிழ் தெருமுனையில்!

தமிழர்கள் தெற்கு நோக்கி விரட்டப்படுதல்:

வேத மதத்தையும் நால்வருணக் கோட்பாட்டையும் ஏற்றுக் கொள்ளாத தமிழர்கள் தெற்கு நோக்கி விரட்டப்பட்டனர்….

வட இந்தியாவை தங்கள் ஆளுகைக்குள் கொண்டு வந்த ஆரியர்கள் பின்னர் படிப்படியாக தமிழ் கூறும் நல்லுலகில் தங்கள் வைதீக மதத்தையும் நால்வருணக் கோட்பாட்டையும் புகுத்தினர்.

ஆரியர்கள் தமிழ் மன்னர்களின் அமைச்சர்களானார்கள்…… அந்தரங்க ஆலோசர்கள் ஆனார்கள்…..

ஆரியரின் சூழ்ச்சி வலையில் சிக்கி நால்வருண சனாதனக் கோட்பாட்டைப் பின்பற்றத் தலைப்பட்டனர்
சங்க காலத் தமிழ் மன்னர்கள். .

ஆரியர்களின் மதுவகைகளான சோம பானம், சுரா பானம் தமிழ் மன்னர்களின் வாழ்க்கையில் இரண்டறக் கலக்கப்பட்டது…..

போதாக்குறைக்குத் தமிழ் மன்னர்கள் அந்நிய இன பெண்களை மணந்து அவர்களுடன் கொஞ்சிக் குலாவுவதற்காக அரசாட்சியை விட்டுக் கொடுத்தனர்….

சங்கம் மருவிய காலத்தில் தமிழ் மன்னர்களும் மக்களும் மதுவுக்கும் மாதுக்கும் ஆட்பட்டு ஒருவித மயக்க நிலையில் கிடந்தனர்….

ஆரியப் பிராமணர்கள் இந்நிலையைப் பயன்படுத்தி தமிழ் மன்னர்களை மக்கள் விரோதச் செயல்களில் ஈடுபடச் செய்தனர்…. தமிழ் கூறும் நல்லுலகில் பல்வேறு சிற்றரசுகள் தோன்றலாயின….

மக்கள் பாதுகாப்பற்ற நிலைக்குத் தளளப்பட்டனர்… அன்னியர்கள் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்திய போது தமிழ் மன்னர்கள் எதிர்த்து போராட திராணியில்லாமல் சரணடைந்தனர்….. ஓட்டம் பிடித்தனர்…

ஆரியர்களின் வஞ்சக வலையில் சிக்கி அவர்களது சமர்கிருத மொழியைத் தமிழ் மொழியுடன் கலந்திட
வழிவிட்டனர் தமிழ் மன்னர்களும் மக்களும்….

இது காலப்போக்கில் தமிழும் சமற்கிருதமும் கலந்த புதிய மொழிகள் உருவாக காரணமாயிற்று…..

தமிழும் சமற்கிருதமும் கலந்து தெலுங்கு மொழி தோன்றியது…. கன்னட மொழி தோன்றியது…. மலையாள மொழியும் பிறந்தது….

இது தெலுங்கர்கள், கன்னடர்கள், மலையாளிகள் எனத் தனித்தனி இனங்கள் உருவாகக் காரணமாயிற்று… .

ஆக, திருவள்ளுவர் தொடங்கி வைத்துள்ள ஆரியர் – தமிழர் போரினை, இனமானமுள்ள நம் முன்னோர்கள் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக தங்கள் எழுதுகோல் மற்றும் பரப்புரைகள் மூலம், தொடர்ந்து அறப்போராட்டம் நடத்தி வருகின்ற நம் தமிழ்இனம் இன்னும் மீட்டெடுக்க வேண்டிய இன உரிமைகள் ஏராளம்… ஏராளம்….

ஆகவே, அன்னிய ஆளுமைகளால் காலங்காலமாக நம் தமிழ் இனத்திடமிருந்து பறித்துக் கொண்ட இன உரிமைகளை வகைப்படுத்தி, அவற்றைப் பட்டியலிட்டு தொடர்ந்து போராடி வென்றெடுக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் இனமானமுள்ள அனைத்துத் தமிழருக்கும் உண்டு.

தமிழர்மறை – உலகப்பொதுமறை திருக்குறளின் தோற்றம் என்பது ஐயாயிரம் ஆண்டுகளாக அடிமைப்பட்டுக் கிடக்கும் தமிழர்களின் விடுதலைக்குரலே என்றால் மிகையாகாது.

தமிழ் கூறும் நல்லுலகில் ஒருவித குழப்ப நிலை ஏற்பட்டது….

திருவள்ளுவர் பிறப்பு:

ஐயன் திருவள்ளுவர் பிறந்தபோது தமிழ் கூறும் நல்லுலகம் களப்பிரர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. திருவள்ளுவர் கி.மு. 31 ஆம் ஆண்டு பிறந்தார் என தமிழ் சான்றோர்கள் வரையறை செய்துள்ளனர்.

வள்ளுவன் என்பது இயற்பெயராகவும் இருக்கலாம்…. தொழில் பற்றிய பெயராகவும் இருக்கலாம்…. வள்ளுவன் என்பான், அரசன் கட்டளையைப் பறையறைந்து அறிவிப்பவன் என்று பெருங்கதையும், அரசருக்கு
உள்படு கருமத்தலைவன் என்று பின்கல நிகண்டும், புள்ளுவன் (நிமித்திகன்) என்று சீவகசிந்தாமணியும்
கூறுகின்றன.

வள் என்னும் அடிச்சொல்லுக்குள்ள பலப் பொருள்களுள் மூன்று கூர்மை, வலிமை, வன்மை என்பன. ஆதலால் வள்ளுவன் என்னும் சொல்லுக்கு கூர்மதியன், வல்லவன், வள்ளியோன் என்று பொருள் கொள்ளலாம்.

பெருங்கணி குறித்த நன்னாளிலேயே வள்ளுவன் பறையறைய வேண்டி இருந்ததாலும் வள்ளுவனைப் புள் (நிமித்தம்) அறிவிப்பவன் என்று சிந்தாமணி கூறுவதாலும் வள்ளுவர் என்பார் இன்றும் கணியராய் இருந்து வருவதாலும் பண்டை வள்ளுவனும் கணியம் அறிந்தவனே என்று கருத இடம் உண்டு.

நாள் கோள்களின் இயக்கத்தை அறிந்து ஐந்திரம் (பஞ்சாங்கம்) வகுப்பதற்கும் அரசருக்கு பிறப்பியம் (சாதகம்) எழுதுவதற்கும் நுண்மாண் நுழைமதி வேண்டியிருத்தலின், கணியருள் ஒரு பிரிவார் வள்ளுவர்
எனப்பட்டதாகத் தெரிகிறது.

நாஞ்சில் வள்ளுவனைப் பாடிய ஒருசிறை பெரியனார், மருதனிள நாகனார், ஔவையார், கரூர்க் கதப்பிள்ளை ஆகிய நால்வரும் அவரை நாஞ்சில் பொருநன் என்று குறிக்கின்றனர். பொருநன் போர் மறவன் அல்லது படைத்தலைவன்.

“பொருந ரென்ப பெரும்போர்த் தலைவர்”
என்பது பிங்கலம்(5:119)

பாண்டி நாட்டிற்கும் சேர நாட்டிற்கும் இடைப்பட்ட நாட்டை ஆண்டதினால் ஒருகால் பாண்டியனுக்கும் மற்றொரு கால் சேரனுக்கும் படைத்தலைவனாக இருந்ததாக தெரிகிற நாஞ்சில் வள்ளுவனை வலிமையிலும் வன்மையிலும் சிறந்தவனாக மருதநில நாகனாரும் அவ்வையாரும் கதப் பிள்ளையும் பாடி இருத்தலால் அவர் பெயர் வலிமையாலோ வன்மையாலோ வந்ததாகவும் இருக்கலாம்; இயற்பெயராகவும் இருக்கலாம்.

திருவள்ளுவர் பிறந்த ஊர் இன்னதென்று அறுதியிட்டுக் கூற முடியவில்லை.. பெற்றோர் யார் என்றும் நிருபிக்கப்பட்ட குறிப்புகள் இல்லை. உடன் பிறந்தார் இருந்ததாக தெரியவில்லை பிள்ளைகள் பற்றிய குறிப்பும் இல்லை.

திருவள்ளுவரின் மனையாள் வாசுகி என்றும் மார்க்க சகாயர் என்னும் வேளாளரின் மகளார் என்றும் கூறப்படுகிறது. ஏலேலசிங்கன் என்பார் திருவள்ளுவரை ஆதரித்ததாக கூறப்படுகிறது.

திருவள்ளுவர் சிறப்பு குறித்து திருவள்ளுவமாலை என்னும் நூல் பேசுகிறது. அதில் திருவள்ளுவர் குறித்து பல்வேறு செய்திகள் உள்ளன. அவை வாய்வழி செய்திகள் நிருபிக்கப்பட்ட உண்மைகள் அல்ல எனக் கருதுவாரும் உண்டு.

எது எப்படி இருந்தாலும் கிமு முதல் நூற்றாண்டில் திருவள்ளுவர் தமிழ்நாட்டில் ஒரு தமிழராய் பிறந்தார் என்பது மட்டும் பல்வேறு இலக்கியச் சான்றுகள் மூலம் அறிய முடிகிறது….

திருவள்ளுவரின் பெருமையைப் பறைசாற்றும் ஊர்கள்:

திருவள்ளுவர் பிறந்து வளர்ந்து நாஞ்சில் வள்ளுவன் என்னும் பெயரில் சிற்றரசராக ஆட்சி புரிந்ததாக கருதப்படும் இடம் கன்னியாகுமரி மாவட்டம் நாஞ்சில் நாடு எனவும் திருநயினார் குறிச்சி எனவும் கூறப்படுகிறது.

அதன் நினைவாக கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கடலும் சந்திக்கும் கன்னியாகுமரியில் கடல் நடுவில் அமைந்துள்ள 133 அடி உயரம் கொண்ட திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது எனக் கூறுவாரும் உண்டு.

வேலூர் மாவட்டம் பொன்மலையில் திருவள்ளுவர் குந்தகுந்தாச்சியாரிடம் கல்வி பயின்றதாகவும் கூறப்படுகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரைக் குளத்தில் திருக்குறள் அரங்கேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

திருக்கோவிலூரில் கபிலர் ஔவையார் ஆகியோருடன் திருவள்ளுவர் வாழ்ந்தார் எனவும் கூறப்படுகிறது… திருவள்ளுவர் வாசுகி அம்மையாரை திருமணம் செய்து கொண்டு ஆட்சி செய்த ஊர்
திருவள்ளூர் எனக் கூறப்படுகிறது.

ஏலேல சிங்கன் என்னும் வணிகருடன் நட்புகொண்டு திருவள்ளுவர் வாழ்ந்து மறைந்த ஊர் மயிலாப்பூர் எனக் கருதப்படுகிறது… மொத்தத்தில் திருவள்ளுவர் பிறந்த ஊரும் குடும்பமும் இன்ன பிற செய்திகளும் ஆய்வுக்குரியது.

திருவள்ளுவர் காலக் குமுகாய (சமுதாய) நிலை நிலை:

திருவள்ளுவர் காலத்தில் தமிழ்கூறும் நல்லுலகில் ஆரியம் வேரூன்றி விட்டது. நிறம் பற்றிய நால்வகை வருணப் பாகுபாடும் புகுத்தப்பட்டு விட்டது. தமிழர் எல்லோரும் ஆரியருக்கு தாழ்ந்தவராகினர். பார்ப்பார் என்று சொல்லப்பட்ட இல்வாழ்க்கை பிராமணரும் தம்மை அந்தணர் என்று கூறிக் கொண்டனர். தொழில் பற்றி ஏற்பட்ட குலங்களும் பிறப்புப் பற்றிப் பெயர் பெறலாயின.

புலவருள்ளும் பிராமணர் உயர்ந்தவர் என்னும் கருத்து எழுந்தது. பொதுவாக அறங்கள் எல்லாம் பிராமணருக்கே செய்யப்பட்டன.தமிழருக்குள் உறவுக் கலப்பும் ஒற்றுமையும் குறைந்து வந்தன. மூவேந்தரும் மன்னர் சிலரும் ஆரிய சார்பாக இருந்ததனால் பிரமணியத்தைக் கண்டிக்க எவருக்கும் திராணியில்லாமல் போயிற்று.

பிராமணர் தெய்வப் பிறப்பினர் என்னும் கருத்து தமிழருக்குள் வளர்ந்து வந்தது. அதனால்,வடசொற்கள்
தமிழில் தாராளமாக கலக்கவும் தமிழ்ச் சொற்கள் மறையவும் புதுத் தமிழ்ச் சொற்கள் தோன்றாதிருக்கவும் வழிவகுக்கப்பட்டு விட்டது. (மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணரின் திருக்குறள் தமிழ் மரபுரை)

திருவள்ளுவர் காலச் சமய நிலை:

ஆயிரம் ஆண்டுகளாக ஆரியம் தமிழகத்தில் இருந்து வந்ததினால், சமயத்துறை பெரும்பாலும் ஆரிய வண்ணமாக மாறிவிட்டது. அரண்மனைகளிலும் கோயில்களிலும் செல்வர் மாளிகைகளிலும் வழிபாடும் சடங்குகளும் பிராமணரால் சமற்கிருதத்திலேயே நடத்தப்பட்டன.

தமிழ்மன்னர்கள் ஆரிய வேள்விகளைப் பின்பற்ற தலைப்பட்டு விட்டனர். துறவினால் மட்டுமே வீடுபேறு கூடும் உள்ளிட்ட ஆரிய கருத்துக்கள் தமிழர் உள்ளத்தில் பதிக்கப்பட்டன. தமிழ்த் தெய்வங்களை
ஆரியத் தெய்வங்களாக மாற்றுவதற்கும் தமிழரை அடிமடையராக்குவதற்கும் பல புராணங்கள்
இயற்றப்பட்டன. தமிழர் சித்தாந்த நூல்களிலும் ஆரியக் கருத்துக்களும் சொற்களும் சேர்க்கப்பட்டன.

இங்ஙனம் ஆரியத்தால் ஏற்பட்ட அவலங்கள்போதாதென்று பௌத்தம், சமணம் முதலிய நாத்திக
மதங்களும் உலகாயுதம் முதலான சிற்றின்ப மதங்களும் தமிழ் கூறும் நல்லுலகை அளவிறந்து
அலைக்கழித்தன. (பாவாணரின் திருக்குறள் தமிழ் மரபுரை)

ஐயன் திருவள்ளுவர் திருக்குறள் இயற்றியதன் நோக்கம் ?

ஆரியரின் வேத வைதீக மதத்தாலும் நாத்திக மதங்களாலும் குறிப்பாக ஆரியத்தால், குமுகாயத் துறையிலும் சமயத்துறையிலும் தமிழ் கூறும் நல்லுலகுக்கு ஏற்பட்ட எல்லாக் கேடுகளும் பாடுகளும் துன்பங்களும் தொல்லைகளும் நீங்கி எல்லோரும் இன்பமாக வாழ வேண்டும் என்ற இன்னருள் நோக்கம் கொண்டே தெள்ளிய மனமும் ஒள்ளிய அறிவும் திண்ணிய நெஞ்சும் நுண்ணிய மதியும் கொண்ட திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார்.

“அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்குஞ்
செந்தண்மை பூண்டொழுக லான்”

“அறத்தாற்றின் இல்வாழ்க்கை யாற்றின் புறத்தாற்றிற்
போஒய்ப் பெறுவ தெவன்”

“ஒழுக்க முடைமை குடிமை யிழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்“

“மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்“

“அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று”

“ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூன்மறப்பர் காவலன் காவா னெனின்”

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்”

“சுழன்றுமேர்ப் பின்ன துலகம் ஆதலால்
உழந்தும் உழவே தலை”.

“உழுவார் உலகத்துக்கு ஆணி அஃதற்றா
தெழுவாரை யெல்லாம் பொறுத்து”

உள்ளிட்ட பல்வேறு திருக்குறள்கள் ஆரியத்தைக் கண்டித்து எழுதப்பட்டனவாகும்.

மதுரை சங்கப் பலகைத் திருக்குறளை அறங்கேற்ற விடாமல் தடுத்தல்:

திருவள்ளுவர் திருக்குறளை மதுரை சங்கப்பலகையில் அரங்கேற்ற முற்பட்டபோது திருக்குறளில் அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நாற்பொருள் இல்லை. ஆகவே திருக்குறளை அரங்கேற்ற அனுமதிக்க முடியாது என மதுரை சங்கப் பலகைப் புலவர்கள் குறிப்பாக பிராமணப் புலவர்கள் தடுத்தனர்…

அப்போது ஔவையார் தலையிட்டு தேவையான விளக்கங்கள் கொடுத்து தமிழ்மறை திருக்குறளை அரங்கேற்றச் செய்தார் எனத் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன.

திருக்குறள் உலகப்பொதுமறை என்பதற்கு சான்று:

உலகியல் இனிது நடைபெறுவதற்கு இன்றியமையாத இல்லறமும் துறவறமும் அரசியலும் கணவன் மனைவியர் காம இன்பமும் பற்றி, உண்மையாகவும் நடுவுநிலைமையாகவும் எல்லாருக்கும் ஒப்ப முடிந்த வகையிலும், தலைசிறந்த பாவாலும் சிறந்த சொற்களாலும் இலக்கண வழுவின்றி சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் நூல் திருக்குறள் ஒன்றே.

விழுமிய பொருளை அணிமிக்க குறள்வெண்பாவால் பாடியிருப்பது பன்மணி பதித்த ஓவிய வேலைப்பாட்டுக்குப் பொற்கலத்தில் மன்னருக்குரிய அறுசுவையுண்டியைப் படைப்பது போலாகும். குறள்

வெண்பாவால் ஆனதினால் மானுடம் போற்றும் உயர்நறியை வகுத்துக் கொடுத்ததினாலும் திருக்குறள் என்னும் பெயர் பெற்றது.

பால் எல்லாம் நல்லாவின் பாலாமோ பாலில் உள்ள நூல் எல்லாம் வள்ளுவர்செய் நூலாமோ (பரிமேலழகர் உரை சிறப்பு பாயிரம்) ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி (பழமொழி) இவை திருக்குறளில் சிறப்பை வெளிப்படுத்துவதாகும்.

திருக்குறள் உலகப்பொதுமறை என்பதற்கு சான்று:

உலகியல் இனிது நடைபெறுவதற்கு இன்றியமையாத இல்லறமும் துறவறமும் அரசியலும் கணவன் மனைவியர் காம இன்பமும் பற்றி, உண்மையாகவும் நடுவுநிலைமையாகவும் எல்லாருக்கும் ஒப்ப முடிந்த வகையிலும், தலைசிறந்த பாவாலும் சிறந்த சொற்களாலும் இலக்கண வழுவின்றி சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் நூல் திருக்குறள் ஒன்றே.

விழுமிய பொருளை அணிமிக்க குறள்வெண்பாவால் பாடியிருப்பது பன்மணி பதித்த ஓவிய வேலைப்பாட்டுக்குப் பொற்கலத்தில் மன்னருக்குரிய அறுசுவையுண்டியைப் படைப்பது போலாகும். குறள்

வெண்பாவால் ஆனதினால் மானுடம் போற்றும் உயர்நறியை வகுத்துக் கொடுத்ததினாலும் திருக்குறள் என்னும் பெயர் பெற்றது.

பால் எல்லாம் நல்லாவின் பாலாமோ பாலில் உள்ள நூல் எல்லாம் வள்ளுவர்செய் நூலாமோ (பரிமேலழகர் உரை சிறப்பு பாயிரம்) ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி (பழமொழி) இவை திருக்குறளில் சிறப்பை வெளிப்படுத்துவதாகும்.

திருக்குறள் தமிழர் பண்பாட்டு நூல்:

அகர முதல என்று தமிழில் நெடுக்கணக்கில் முதல் எழுத்தில் தொடங்கி முயங்கப்பெறின் என்ற அதன் இறுதி எழுத்தில் முடித்திருப்பதும் திருக்குறளின் நிறைவைக் காட்டுவதோடு. திருக்குறள் தமிழ்ப் பண்பாட்டு நூல் என்பதற்கு முழுமுதல் ஆதாரமுமாகும்.

உலகப் பொதுச் சட்டம் திருக்குறள்:

திருக்குறள் தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி உலகம் முழுமைக்கும் பொதுவானது என்பது எல்லாருக்கும் ஒப்ப முடிந்தது. இது பற்றியே”வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” என்று புகழுரைத்தார் புரட்சிக் கவிஞர் பாரதியார்.

வாழ்க்கைத் துறையிலும் ஆட்சித் துறையிலும் மட்டுமின்றி சமயத் துறையிலும் பொதுவாக இருந்ததால் உலகப்பொதுமறை எனவும் உலகப் பொதுச்சட்டம் எனவும் போற்றப்பெறுகிறது.

கால வரம்பின்மை:

திருக்குறள் இத்துணைக் காலம்தான் அல்லது இன்ன நூற்றாண்டு வரை தான் பயன்படும் என்று எவரும் சொல்லுதற்கிடமின்றி, எக்காலத்திற்கும் ஏற்றதாய் இருப்பதும் அதன் ஏற்றங்களுள் ஒன்றாகும்.

மன்னர் ஆட்சியும், குடியாட்சியும், மக்களாட்சியும், கூட்டுடைமையும், பொதுவுடமையும் நீங்கி உலகெங்கும் சமவுடமை வரினும் அதற்கும்.

“பகுத்தண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை”

“பாத்தூண் மரீஇ யவனைப் பசிஎன்னும்
தீப்பிணித் தீண்ட லரிது”

“இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்”

என்னும் குறள்கள் சமத்துவ சமவுடமை சமுதாயம் பற்றி கூறுகின்றன..

இயல் வரையறைச் சிறப்பு:

பொருள்களுக்கும் பண்புகளுக்கும் வினைகளுக்கும் இயல் வரையறை (Definition) கூறுவதில் திருக்குறள் தலை சிறந்ததாகும்.

“வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இல்லா சொல்”

“உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்கு குரு”

நடுவு நிலைமை:

எல்லோரும் வாழ வேண்டும் என்பதும் குற்றத்திற்கு ஏற்ப எல்லோரையும் ஒப்பத் தண்டிக்க வேண்டும் என்பதும் திருக்குறளில் நடுவுநிலை கொள்கையாகும். இவை ஆரிய கொள்கைக்கு நேர்மாறானவை .

வள்ளுவர் செய் திருக்குறளை மறுவற நன்குணர்ந்தோர்கள் உள்ளுவரோ மனுவாதி ஒரு குலத்திற்கு ஒரு நீதி என்று மனோன்மணியம் ஆசிரியர் சுந்தரனார் கூறுதல் காண்க….

உயர்நிலை அறம்:

எல்லா அற நூல்களிலும் உயர்ந்த ஒழுக்க வரம்புகளை கூறுவது திருக்குறளே…. எடுத்துக்காட்டு:

“பயனில்சொல் பாராட்டு வானை மகனெனில்
மக்கட் பதடி யெனல்”

“இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்துவிடல்”

“உள்ளத்தால் உள்ளுவதும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வே மெனல்”

“ஈன்றாள் பசிகாண்பா னாயினுஞ் செய்யற்க
சான்றோர் பலிக்கும் வினை”

இறந்த மூப்பினராய இருமுது குரவரும் கற்புடைய மனைவியுங் குழவியும் பசியான் வருந்து மெல்லைக்கண், தீயன பலவுஞ் செய்தாலும் புரந்தருக என்பது ஆரிய அறநூல் நெறி…..

நடைமுறை அறிவு:

திருவள்ளுவர் மக்களுக்கு உயர்ந்த ஒழுக்கத்தை வகுத்தாரேனும், உலகியல் அறிந்து அதன் ஒழுங்கான நடப்பிற்கு தோதாகவே சில விலக்குகளையும் அமைத்திருக்கின்றார்.

அருளுடைமை, புலால் மறுத்தல், கள்ளாமை, வாய்மை, வெகுளாமை, இன்னா செய்யாமை, கொல்லாமை என்னும் அறவினைகளை அரசியலில் முற்றக்கடைப் பிடிப்பது அரிதாதலின் அவற்றை இல்லறவியலில் கூறாது துறவறவியலிலேயே கூறியுள்ளார்.

தெய்வம் தொழாள் கொழுநன் தொழுது எழுவாள் என்று சொன்ன வள்ளுவரே, புலத்தலின் புத்தேணாடுண்டோ” என்றும், கூடுதல் காமத்திற்கு இன்பம் என்றும் உடன்பட்டுள்ளார்.

உண்மை கூற்று:

இறைவனே நால் வகை வருணத்தாரையும் முறையே தன் முகத்தினின்றும் மார்பினின்றும் தொடை- யினின்றும் பாதத்தினின்றும் படைத்தான் என்றும் அவருள் பிராமணனே உயர்ந்தவனென்றும், மற்ற மூவரும் தாழ்ந்தவரென்றும் ஆரியனுக்கு தொண்டு செய்யவே மற்றவர் படைக்கப்பட்டவரென்றும்

ஆரிய நூல்கள் துணிந்து பொய்யுரைப்பது போல, திருக்குறள் ஓரிடத்திலும் கட்புலனான உண்மைகளைத் திரித்துக் கூறுவதில்லை. எங்கேனும் ஓரிடத்தில் உயர்வு நவிற்சி அளவிறந்திருப்பினும், அது அணிதழுவியதும் உண்மை எல்லோராலும் அறியப்படத்தக்கதுமாகவே இருக்கும்.

எடுத்துக்காட்டு:

“அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்”

செய்யுள் சிறப்பு

திருக்குறள் போன்று குறள் வெண்பாவிற்கு சிறந்த நூல் முன்னும் இல்லை பின்னும் இல்லை. ஒவ்வொரு குறலும் ஒவ்வொரு வகையில் ஒளிவிடும் மணி போல்வதாகும்.

எடுத்துக்காட்டு:

“தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யனப் பெய்யும் மழை”

“மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கல நன்மக்கள் பேறு”

என்பன இன்னோசை உள்ளன.

“இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு”

“பொருள் அல்லவரை பொருளாக செய்யும்
பொருளல்லது இல்லை பொருள்”

“உழுவார் உலகுக்கு ஆணி அஃதாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து”

“தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யனப் பெய்யும் மழை”

“மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கல நன்மக்கள் பேறு”

என்பன இன்னோசை உள்ளன.

“இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு”

“பொருள் அல்லவரை பொருளாக செய்யும்
பொருளல்லது இல்லை பொருள்”

“உழுவார் உலகுக்கு ஆணி அஃதாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து”

“இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின்
பரந்து கெடுக உலகு இயற்றியான்’

“கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு
ஐம்புலனும் ஒன்டொடி கண்ணெ யுள”

என்பன பொருள் சிறப்பு உள்ளன.

“நத்தம்போர் கேடு முளதாகும் சாக்காடும்
வித்தகர்க் கல்லா லரிது.”

என்பது சொற்சுருக்கம் உள்ளது.

“தலையினி இழந்த மயிரனையர் மாந்தர்
நிலையி ழிந்தக் கடை”

“வேலோடு நின்றா னிடுவென் றதுபோலுஞ்
கோலொடு நின்றான் இரவு”

“உப்பமைந் தற்றாற் புலவி யதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்”

“நெடுநீர் மறவி மடிதுயில் நான்குங்
கெடுநீரார் காமக் கலன்”

“தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு”

“நன்றறி வாரி கயவர் திருவுடையர்
நெஞ்சத் தவல மிலர்”

“நெருந லுளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்து இவ்வுலகு”

என்பன பல்வேறு அணியுடையன.

“கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு
ஐம்புலனும் ஒன்டொடி கண்ணெ யுள”

என்பன பொருள் சிறப்பு உள்ளன.

பாயிர விளக்கம்:

மக்கள் எல்லோரும் இடையூறின்றி இனிது வாழ்வதற்கு முதற்படியாக வேண்டியவை நான்கு என திருவள்ளுவர் கண்டார்.அவை இயற்கையை போற்றுதல், மழையின் பயன், பொது வாழ்க்கையில் ஈடுபடுவோர், அற ஒழுக்கம் என்பன.

இவற்றையே ஆதி பகவன் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை, அறன்வலியுறுத்தல் என்னும் பாயிர அதிகாரங்கள் நான்கும் எடுத்தோதுகின்றன.

அதிகார ஒழுங்கு:

நூல் முழுவதும் 133 அதிகாரங்களாக வகுக்கப்பட்டிருப்பதும் ஒவ்வொன்றும் தலா 10 குறள் கொண்டிருப்பதும், ஒவ்வோரியலும் அதிகாரங்கள் ஒன்றோடு ஒன்று கோவையாய் தொடர்பு கொண்டிருப்பதும், பிற நூல்களில் காணுதற்கரிய ஒழுங்காகும்.

அதிகாரக் கணக்கு:

பால் – அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால்

அறத்துப்பால் – பாயிரயல் – 4, இல்லறவியல் – 20, துறவறவியல் -13, ஊழியல் -1

பொருட்பால் – அரசியல் – 25, உறுப்பியல் – 45

இன்பத்துப்பால் – களவியல் – 7, கற்பியல் -18

மொத்தம் 133 அதிகாரங்கள்.

திருக்குறள் வேத எதிர்ப்பு, வேள்வி எதிர்ப்பு, நால்வருண எதிர்ப்பு:

தமிழ்இனம் பன்னெடுங்காலமாக அன்னிய ஆதிக்கச்சக்திகளிடம் அடிமைப்பட்டுக் கிடப்பதை இனமானமுள்ள எந்தத் தமிழனாலும் பொறுத்துக் கொள்ள இயலாது.

அந்தவகையில், திருவள்ளுவர் தமிழ்இனக் காளையரைத் தட்டி எழுப்பி, களம் காண வழிகாட்டுவதற்கென தமிழ்மறை திருக்குறளை வகுத்துத் தந்துள்ளார்.

இதன் மூலம் திருவள்ளுவர் கடந்த 2000 ஆண்டுகளுக்கு முன்னரே ஆரியர் – தமிழர் விடுதலைப்போரைத் தொடங்கி வைத்து தமிழ் இனத்திற்கு வழிகாட்டியுள்ளார்.

எனவே, திருவள்ளுவர் தமிழ்இன விடுதலைப்போரின் தந்தை எனப் போற்றப் படுகிறார்.

ஆக, தமிழ்மறை திருக்குறள் தமிழின மீட்டுருவாக்கத்திற்கான வழிகாட்டி நூல் மட்டுமல்ல, உலகில் எந்த ஒரு மக்கள் இனம், அன்னிய ஆதிக்கச்சக்திகளிடம் அடிமைப்பட்டுக் கிடந்தாலும், எதிரிகளிடமிருந்து விடுதலை அடைவதற்கு, வழிகாட்டும் இனஉரிமை மீட்புக்கான வழிகாட்டி நூலாகவும், ஒரு புரட்சி நூலாகவும் உலகப்பொதுச் சட்டமாகவும் திகழ்கிறது என்றால் மிகையாகாது.

மேற்படி, வரலாற்றுச் செய்திகளிலிருந்து திருக்குறள் ரிக், யசூர், சாமம், அதர்வணம் என்னும் நான்கு (4) வேதங்கள் கூறும் வேள்வி முறையையும், மூட நம்பிக்கைகளையும், பழக்க வழக்கங்களையும் எதிர்த்து களம் காண வழிகாட்டுகிறது.

பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் படிநிலைக் கோட்பாடுகளை எதிர்த்து ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்னும் கோட்பாட்டை நிலைநாட்ட வலியுறுத்துகிறது.

மது, சூது, பரத்தையர் பழக்கங்களையும் பலதார மணமுறைகளையும் எதிர்த்து களம் காண வழிகாட்டுவது. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்னும் சமவுடைமை கோட்பாட்டை வலியுறுத்துகிறது.

ஆணுக்கும், பெண்ணுக்கும் கற்பு என்பது பொதுவானது என்னும் கோட்பாட்டை வலியுறுத்துகிறது. ஒருவனுக்கு ஒருத்தி என்னும் குடும்ப வாழ்வியல் முறையை வலியுறுத்துகிறது. கல்வி ஒன்றே அனைத்து குமுகாயச் சிக்கல்களுக்கும் தீர்வு தரவல்லது என்பதை வலியுறுத்துகிறது என அடுக்கிக் கொண்டே போகலாம். மொத்தத்தில், திருக்குறள் வேத எதிர்ப்பு, வேள்வி எதிர்ப்பு, நால்வருண எதிர்ப்பு – இம்மூன்றையும் உள்ளடக்கியது ஆகும்.

திருக்குறளை மக்களிடம் சென்று சேர விடாமல் தடுத்த மன்னர்கள்:

திருக்குறள் ஆட்சியாளர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டி பல்வேறு அறிவுரைகளை வழங்கியதால் தமிழ்நாட்டை ஆண்ட அன்னிய ஆதிக்கச் சக்திகளான களப்பிரர்கள், பல்லவர்கள், மராட்டியர்கள், விஜயநகரத்தார், நாயக்கர்கள், பிற்கால சேர சோழ பாண்டிய மன்னர்கள் திருக்குறளை மக்களிடம் பரவ விடாமல் தடுத்துவந்தனர்.

இராசராசச் சோழன் காலத்தில் கோயில்களில் திருப்பணிகள் செய்ய 1300க்கும் மேற்பட்ட ஆரிய பார்ப்பனர்களை அழைத்து வந்து குடியமர்த்தி பிரமதேயம் என்னும் நிலக்கொடை வழங்கி ஊக்குவித்தார். வேத வைதீக மதமும் சனாதன நால் வருணக்கோட்பாடு வளர வழிவகை செய்தார்.

இராஜேந்திர சோழன் காலத்தில் இலங்கை, ஜாவா, ஜப்பான் உள்ளிட்ட 56 நாடுகளை தனது ஆட்சி அதிகாரத்துக்குள் கொண்டு வந்து தமிழ்இனத்திற்குப் பொருமைச் சேர்த்தார்.

ஐரோப்பியர்கள் திருக்குறளை உலகெங்கும் பரப்புதல்:

கடல் வழி பயணம் மேற்கொண்டு இந்தியாவில் வணிகம் செய்ய கிரேக்கர், போர்த்துக்கீசியர், டச்சுக்காரர்கள், பிரெஞ்சுக்காரர், ஆங்கிலேயர் எனப் பல ஐரோப்பிய நாட்டினர் இந்தியா வந்தனர்.

இறுதியில், இந்தியத் துணைக் கண்டத்தில் ஓயாத உள்நாட்டுப்போர்கள் மூலமாக அரசுகள் வலுவிழந்த நிலையில், மன்னர்களையே ஒற்றுமையின்மை காரணமாக ஏற்பட்ட இடைவெளியைப் பயன்படுத்தி வேத வைதீக மதமும் சனாதன நால் வருணக்கோட்பாடு வளர வழிவகை செய்தார். சிறிது சிறிதாக இந்திய துணைக் கண்டத்தைத் தங்கள் ஆளுகைக்கு உட்படுத்தினர்.

அயோத்திதாச பண்டிதர் மூலம் சென்னை மாவட்ட ஆட்சியர் எல்லீசர் கையில் திருக்குறள் கிடைத்தது.

எல்லீசர் திருக்குறளுக்கு உரை எழுதினார். திருவள்ளுவருக்குத் தங்கக்காசு வெளியிட்டார். மூன்று தங்க காசுகள் வெளியிடப்பட்டுள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கிறித்தவ மதப்போதகர்கள் இந்தியாவில் மதம் பரப்ப வந்த ஜி யு போப், கால்டுவெல், வீரமாமுனிவர் உள்ளிட்ட மத போதகர்கள் தமிழ் மொழியைக் கற்றுக் கொண்டனர். தமிழ்ப் பணியாற்றினர்.

குறிப்பாக, திருக்குறளைப் படித்து அதற்கு உரை எழுதி உலகெங்கும் திருக்குறள் பரவ செய்தனர். ஜி யு போப் மூலம் திருக்குறள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு உலக நாடுகளுக்கு பரவச் செய்தார்.

திருக்குறள் தொண்டாற்றிய தமிழ்ச் சான்றோர்கள்:

தந்தை பெரியார் திருக்குறள் மாநாடு நடத்தினார். வள்ளலார் திருக்குறள் வகுப்பு நடத்தினார். பேரறிஞர் அண்ணா திருக்குறளைப் பாமர மக்களிடம் கொண்டு சென்றார்.

திராவிட இயக்க அரசுகள் திருக்குறளின் சிறப்பைப் பட்டிதொட்டியெல்லாம் பரவச் செய்தனர். குறிப்பாக, கலைஞர் மு.கருணாநிதி திருக்குறளுக்கு பல்வேறு நினைவு சின்னங்கள் எழுப்பினார்.

கடந்த 2000 ஆண்டுக்கால உலக அரசியல் வரலாற்றில் திருக்குறளை அரியனை ஏற்றி, அதற்கு அரசியல் மற்றும் சமுதாய அளவிலான ஆக்கங்களைத் தேடித் தந்ததில், டாக்டர் கலைஞர் அவர்களுக்கு நிகராக இதுவரை யார் ஒருவரும் பிறந்ததில்லை. அவருக்கு நிகர் அவர் மட்டும் தான் எனத் துணிந்து கூறலாம்.

23.11.1969 அன்று தமிழக அமைச்சரவையில் எடுத்த முடிவின் படி பொங்கல் நாளுக்கு மறுநாள் “திருவள்ளுவர் திருநாள்” என்று அறிவித்து தொடர்ந்து பின்பற்ற செய்தார்.

1967 – ஆம் ஆண்டு தமிழகப் பொதுப்பணி மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற மாண்புமிகு கலைஞர் அவர்கள் தமிழ்நாட்டிலுள்ள அரசு பேருந்துகள் அனைத்திலும் திருவள்ளுவர் படத்துடன் திருக்குறளும் இடம்பெறச் செய்தார்.

1967 – ஆம் ஆண்டு அரசினர் சுற்றுலா மாளிகைகளிலும், பயணிகள் விடுதிகளிலும் திருவள்ளுவர் படத்துடன்

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும் – (குறள் 131) என்ற திருக்குறளை இடம்பெறச் செய்தார்.

02.01.1968 – இல் சென்னை மெரினாக் கடற்கரையில் முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ விஸ்வநாதம் அவர்களைக் கொண்டு திருவள்ளுவர் சிலையினைத் திறக்கச் செய்தார்.

சென்னை, அண்ணாமலை, மதுரை ஆகிய பல்கலைக் கழகங்களில் திருக்குறள் ஆய்வு இருக்கை கள் நிறுவி திருக்குறள் ஆய்வுக்கு வழிவகுத்தார்.

திருநெல்வேலி நெல்லையப்பர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெருக்கடியைத் தவிர்ப்பதற்காக திருவள்ளுவர் ஈரடுக்கு மேம்பாலம் அமைத்து 13.11.1973 அன்று திறந்து வைத்தார்.

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் பெருமங்கல விழாவில் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு வழங்கும் முதல்வர் பதக்கத்தில் திருவள்ளுவரின் திருவுருவப் படத்தை இடம் பெறச் செய்தார்.

23.11.1971 அன்று சிகாக்கோ பல்கலைக்கழக அரங்கில் உரையாற்றும் போது அரசியலுக்கு என ஒரு தனி இயல் வகுத்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அரசியல் நெறிகண்ட “வள்ளுவரின் திருக்குறள் மணம் கமழும் நாடு நான் பிறந்த தமிழ்நாடு” எனப் பறைசாற்றினார்.

1971 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் நாட்குறிப்பிலும், 1972 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு இதழிலும் திருவள்ளுவர் ஆண்டைத் தொடர்ந்து பின்பற்றச் செய்தார். 10.01.2008 அன்று சென்னை சங்கமம் கலைவிழாவைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றும் போது திருவள்ளுவர் ஆண்டே தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவித்தார்.

27.04.1973 அன்று திருமயிலை திருவள்ளுவர் திருக்கோவில் திருப்பணிக்கான அடிக்கல் நாட்டி அனைத்து பணிகளும் நிறைவேறச் செய்தார்.

1956 முதல் பல்வேறு இதழ்களில் எழுதி வந்த குறளோவியம் என்னும் கட்டுரைத் தொகுக்கப்பட்டு 17.02.1985 அன்று குறளோவியம் என்னும் நூலாக வெளியிடப்பட்டது.

டாக்டர் கலைஞர் அவர்கள், திராவிட இயக்க வழி வந்தவராயினும், பிற திராவிட இயக்கத்தவர் யாவரினும்

திருக்குறளின் மீது பெரும் மதிப்பும் பேரீடுபாடும் கொண்டவராக விளங்குவதை அவர் தம் திருக்குறள் பணிகள் வழித் தெளிவாகத் தெரிகிறது. அந்த பெரும் மதிப்பும் பேரீடுபாடுமே திருக்குறளுக்கு அணுக்கமான ஓர் உரை காண வேண்டும் என அவரைத் தூண்டியுள்ளது. அந்த தூண்டுதலின் விளைவுதான்,திருக்குறள் கலைஞர் உரை 15.04.1996ல் வெளியிடப்பட்டது.

1976 – இல் சென்னை நுங்கம்பாக்கத்தில் சிறப்பு வாய்ந்த வள்ளுவர் கோட்டம் அமைத்தார். என்வாழ்நாளில் மிகப்பெரிய ஆசை ஒன்று நிறைவேறுகிறது என்று பெருமையோடு முழங்கி 133 அடி உயரம் கொண்ட திருவள்ளுவர் பெருஞ்சிலையை 01.01.2000 அன்று நாட்டுமக்களுக்கு அர்ப்பணித்தார்.

07.04.1990 – இல் வேணுகோபால் சர்மா அவர்கள் வரைந்த திருவள்ளுவர் படத்தை நாட்டுடைமையாக்கி அவர் குடும்பத்தாருக்கு ரூபாய் மூன்று இலட்சம் பொற்காசுகள் வழங்கினார்.

புதுடெல்லி தமிழ்ச்சங்கத்தில் திருவள்ளுவர் கலையரங்கம் அமைத்திட தமிழக அரசு சார்பில் ரூபாய் 10,000/- வழங்கிச் சிறப்பு செய்தார்.

இமயமலைக்கு பொன்னாடைப் போர்த்துதல் போல திருக்குறளுக்கு கலைஞர் எழுதிய உரைநூல் பேராசிரியர் அன்பழகன் தலைமையில், பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தர் அவர்களால் 15.04.1996 – இல் வெளியிடப்பட்டது.

மாணவர்களிடையே திருக்குறளைப் பரப்பும் வகையில் திருக்குறளை முழுமையாக மனனம் செய்து நினைவாற்றலுடன் வெளிப்படுத்தும் மாணவர்களுக்கு மாதம் தோறும் ரூபாய் மனனம் செய்து நினைவாற்றலுடன் வெளிப்படுத்தும் மாணவர்களுக்கு மாதம் தோறும் ரூபாய் 1000/– வீதம் ஆயுட்காலம் முழுதும் வழங்க வகை செய்தார். பின்னர் அது தொகுப்பு நிதியாக ரூபாய் 10,000/– ஆக ஒரே தவணையில் வழங்க ஏற்பாடு செய்து ஊக்கப்படுத்தினார்.

தமிழக அரசின் சார்பில் திருக்குறளைப் பரப்பும் அறிஞர் ஒருவருக்கு 1986 முதல் ஆண்டுதோறும் திருவள்ளுவர் வி-ருதும், ரூபாய் 10,000/– மும் வழங்க வகை செய்தார். பின்னர் அத்தொகை 1996 முதல் ஒர் இலட்சமாக«உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு மாதம்தோறும் நிதிஉதவி செய்து ஆணையிட்டு இன்று பல்கிப் பெருகி இருப்பதற்கும், அத்துடன் இலவச பேருந்து பயண அட்டை பெற செய்தவரும் கலைஞரே.

இதைப்போன்று திருக்குறள் பீடம் விருது, திருக்குறள் சங்கப்பலகை, அரசு அலுவலகங்களில் வாயில் தோறும் வள்ளுவம், ஐயன் திருவள்ளுவர் படிப்பகங்கள் பூம்புகார் நிறுவனத்தில் திருவள்ளுவர் உருவச் சிலை தயாரிக்க ஆவன செய்தது, செம்மொழி மாநாட்டில் இலச்சனையில் திருவள்ளுவர் உருவம் பொறித்தது எனப் பல்வேறு பணிகளை நிறைவேற்றியுள்ளார்.

திருக்குறளுக்கு உரை எழுதியச் சான்றோர்கள்:

திருக்குறளுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட திருக்குறள் சான்றோர்கள்உரை எழுதியுள்ளனர் அவற்றுள் குறிப்பிடத்தக்கவர்கள்

மணக்குடவர் [1] – கிபி 10ஆம் நூற்றாண்டு, காலிங்கர் [2] – 10-ஆம் நூற்றாண்டுபரிதியார் [3] – 10 -ஆம் நூற்றாண்டு, பரிப்பெருமாள் [4] – கி.பி. சுமார் 10 – ஆம் நூற்றாண்டுபரிமேலழகர் [5] – கிபி 13ஆம் நூற்றாண்டு, காரி இரத்தினக் கவிராயர் – 1550 – 1575 சுகாத்தியர் [6] – 1889, வ. உ. சிதம்பரனார் – 1935, திரு. வி. கலியாணசுந்தரனார் – 1939 கி. ஆ. பெ. விசுவநாதம், மு. வரதராசன் [7] – 1948, இரா. சாரங்கபாணி,தெ. பொ. மீனாட்சிசுந்தரம் வ.சுப. மாணிக்கம், குன்றக்குடி அடிகளார், தமிழண்ணல், சாலமன் பாப்பையா – 1995, ஆரூர் தாஸ் – 2000 அ. மா. சாமி – 2003, க.ப. அறவாணன் – 2006, மொழி ஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர்-1966, மு. கருணாநிதி [8], ஜி யு போப், முனைவர் பா. வளன்அரசு உள்ளிட்ட ஆயிரம் பேர்.

வரலாற்றுச்சிறப்புப் பெற்ற தமிழர்களின் இன்றைய நிலை:

உலகெங்கும் ஒரு மொழி பேசப்பட்டது என வேதாகமம் கூறுகிறது. அது நம் தாய் தமிழ் மொழி தான் என ஆய்வறிஞர்கள் அறுதியிட்டு கூறுகின்றனர். பின்னர் சிந்துவெளி முதல் கீழடி வரை இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் நம் தாய்த்தமிழ் பரவிக் கிடந்தது எனத் தமிழ் இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன. எடுத்துக்காட்டு: “பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்து குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு தென்திசை ஆண்ட தென்னவன்” குடி என்பதாகும். தொல்காப்பியர் காலத்தில் வடவேங்கடம் தென்குமரி ஆயிடை உள்ள நிலப் பகுதி தமிழ் கூறும் நல்லுலகமாகிவிட்டது தற்போது தமிழர் வாழ்நிலம் கும்முடிபூண்டி முதல் கன்னியாகுமரி வரை முடக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இந்த நிலப்பரப்பிலிருந்தும் தமிழ் மக்களை விரட்டி அடிக்கும் நோக்கில் திட்டமிட்டு ஓசைப்படாமல் வட இந்தியர்கள் குடியமர்த்தப்படுகிறார்கள். இன்று தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் வட இந்தியர்களின் ஆதிக்கம் தலை விரித்து ஆடுகிறது. இதன் விளைவு நம் தமிழ் மொழி பிறமொழி கலப்பு ஏற்பட்டு தனித்தன்மை இழந்து வருகிறது. பெரும்பான்மையான தமிழ் மக்களுக்கு நம் தாய் மொழியாகிய தமிழைப் பிழையின்றி எழுதவும் பேசவும் தெரியாத நிலை உள்ளது. இந்நிலையில் தமிழ் மக்களை இருமொழிக் கொள்கை மும்மொழிக் கொள்கை எனக் குழப்புகிறார்கள். அதுமட்டுமல்ல நம் தமிழ்ப் பண்பாடு பிற மொழியாளரின் பண்பாட்டுடன் கலந்து தனித்தன்மை இழந்து கொஞ்சம் கொஞ்சமாக நீர்த்துப் போக செய்யப்படுகிறது. அத்துடன் நம் தமிழ் நிலத்தின் வளங்கள் திட்டமிட்டு சுரண்டப்பட்டு வட இந்திய மாநிலங்களுக்கு தாரை வார்க்கப்படுகிறது. நாம் வழங்கும் வரியில் நமக்குத் திருப்பித் தருவது ஒரு ரூபாய்க்கு 25 பைசா மட்டுமே. வட இந்திய மாநிலங்களில் ஒன்றான உத்தரப்பிரதேசத்திற்கு ஒரு பைசாவுக்கு 240 பைசா அதிகமாக வழங்கப்படுகிறது. மொத்தத்தில் இந்திய விடுதலை என்ற பெயரில் ஆங்கிலேயர்களிடமிருந்து இந்திக்காரர்களிடம் ஆட்சி அதிகாரம் கைமாறிய பின் கடந்த 77 ஆண்டுகளாக தமிழர் வாழ்நிலம் திட்டமிட்டு ஆக்கிரமிக்கப்படுகிறது. நம் தாய்த்தமிழ் மொழி அழிக்கப்படுகிறது. தமிழ்ப் பண்பாடு சிதைக்கப்படுகிறது. தமிழர் வாழ்வாதார வளங்கள் சுரண்டப்படுகின்றன. ஆட்சியதிகாரம் ஒன்றிய அரசிடம் குவிக்கப்படுகிறது. மாநில உரிமைகள் கொஞ்சம் கொஞ்சமாக பறிக்கப்பட்டு வருகிறது. பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்த சிறப்பான மதிப்பெண் எடுத்த பின்னரும் நுழைவுத் தேர்வு என்ற பெயரில் கார்ப்பரேட் கம்பெனிகள் சுரண்டிக் கொழுப்பதற்கு வழிவகை செய்து கொடுக்கப்பட்டுள்ளது. நாம் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தன் படையைத் தானே வெட்டி சாய்ப்பது எப்படி? உடன் பழகுகிறவர்களின் காலைப் பிடித்து கீழே தள்ளுவது எப்படி என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறோம். தமிழர்களாகிய நாம் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தூங்கிக் கொண்டிருக்கிறோம். இந்நிலை திருவள்ளுவர் காலத்திலும் இருந்துள்ளது என்பதைத் திருக்குறள் சுட்டிக் காட்டுகிறது. 2000 ஆண்டுகளுக்கு முன்னரே திருவள்ளுவர் தமிழ் சமுதாயத்துக்கு எதிரான கொடுமைகளை கண்டு வெகுண்டெ ழுந்துள்ளள்ளார் என்பது திருக்குறள் வாயிலாக வெளிப்படுகிறது. “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்”
“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு”
“இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு”
“இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின்பரந்து
கெடுக உலகியற்றி யான்”
“ மழித்தலும் நீட்டலும் வேண்டாம்“ போன்ற சமுதாய மாற்றத்துக்கான வாழ்வியல் கோட்பாடுகள் திருவள்ளுவரால் முன்மொழியப்பட்டுள்ளன. மானுட விடுதலைக்கான உலகின் முதல் புரட்சி நூலான தமிழ் மறையும் உலகப் பொதுமறையுமான திருக்குறளை வழிகாட்டி நூலாக ஏற்று நம் தமிழினம் உள்ளிட்ட பல்வேறு தேசிய இனங்களின் அரசியல் பொருளியல் பண்பாட்டியல் விடுதலைக்கான போர்படைத் தளபதிகளாக செயல்பட வேண்டும். ஐயன் திருவள்ளுவர் வகுத்து தந்துள்ள உலகப்பொதுமறை திருக்குறள் கூறும் அறநெறி அடிப்படை- யிலான Ôபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்Õ என்னும் படியான Ôபகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் சமத்துவ சமஉடைமை மக்களாட்சி முறைÕ என்னும் புதிய மாற்றுச் சமுதாயக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும். திருக் குறள் மட்டுமே புதிய மாற்று சமுதாய கட்டமைப்பை உலகுக்கு வழங்கும் சக்தி வாய்ந்தது என்பதே உலகக் திருக்குறள் கூட்டமைப்பின் முடிந்த முடிவாகும்.

பின்னிணைப்பு:

உலகில் தேசிய இன உணர்வு என்பது மனித குலத்தை வழிநடத்தும் சிறப்புக் காரணியாகத் திகழ்கிறது. ஓர் இனம் என்பது ஒரு மக்கள் குழுவின் மரபுக் கூறு சார்ந்ததோ, பண்பாடு சார்ந்ததோ மட்டுமல்ல அது ஒரு மக்கள் குழு மற்றொரு மக்கள்குழுவை ஒடுக்கி மேலாண்மை செய்யும் ஒரு ஒடுக்குமுறை கருத்தியலாகவும் பலநூறு ஆண்டுகளாக இருந்து வந்திருக்கிறது. வரலாறு தொடங்கிய காலம் முதலே இன ஒடுக்கு முறையும் தொடர்கிறது.

அதுபோன்றே ஒரு மக்கள் குழுவை ஒருங்கிணைத்து ஓர்மை உணர்வூட்ட இனஉரிமை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் சக்தியாக இன உணர்வு இருந்து வந்திருக்கிறது. இது இன்று வரை வரலாற்றின் உந்து சக்தியாகவும் உள்ளது.

மனிதகுலம் தொடக்கத்தில் பல மரபினங்களாகத் தோற்றம் பெற்று இன்று பல்வேறு மொழிவழி தேசிய இனங்களாக வளர்ச்சி பெற்றுள்ளது. இனிவரும் காலங்களில் உடல்சார்பண்புகளால் ஓர் இனத்தை அடையாளம் கண்டுவிடமுடியாது. தவிர்க்க இயலாதவாறு மரபினக் கலப்புகளுடன் உருவாகிவிட்ட தேசிய இன மொழிகளே ஓர் இனத்தை அடையாளப்படுத்துகின்றன.

தேசிய இனம் என்பதற்கு ஒரு பொதுமொழியையும், பொது வாழ்க்கை முறையையும் வரையறுக்கபட்ட ஒரு வாழ்நிலத்தையும், பொதுபண்பாட்டில் உருவான உளவியல் உருவாக்கத்தையும், பொதுப் பொருளாதார அமைப்பையும் பெற்ற வரலாற்று அடிப்படையில் அமைந்த ஒரு நிலையாக சமுதாய மக்கள் என வரையறைப் படுத்தப்படுகிறது.

ஒவ்வொரு தேசிய இனமும் தனக்கான இறையாண்மையுடைய தேசத்தைப் படைத்துக் கொள்ளத் துடிக்கிறது. பல்வேறுப் போராட்டங்களுக்குப் பின் தனக்கான தேசத்தைப் படைத்துக் கொண்ட தேசிய இனங்கள் உரிமையுடனும் பாதுகாப்புடனும் வாழ்கின்றன. தனக்கான உரிமையையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்த இயலாத சில தேசிய இனங்கள் தங்கள் உரிமைக்காகத் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றன.

ஆயுதப் போராட்டங்கள் மூலம் தங்கள் உரிமையையும் பாதுகாப்பையும் உறுதிபடுத்த முடியும் எனக் கருதிய பல்வேறு தேசிய இனங்கள் தங்களுக்கிடையே பல அணிகளாகத் திரண்டு ஆயுதப் போராட்டங்கள் நடத்தின. இதன் விளைவு கடந்த பலநூறு ஆண்டுகளாக உலகம் இரத்தக்களமாக மாற்றப்பட்டது. இந்நிலையில் 14, 15 ஆம் நூற்றாண்டுகளில் தங்கள் வாணிபத்தைப் பெருக்குவதற்காக கடல்வழிமார்க்கமாக புதிய நாடுகளை கண்டுபிடிக்க மேற்கத்திய நாடுகள் அணிதிரண்டன. பல்வேறு புதிய நாடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்நிலையில் நாடுபிடிக்கும் போட்டியோடு மதப்பிரச்சாரங்களும் முன்னெடுக்கபட்டன. குறிப்பாக, ஆங்கிலேயர்கள் இந்திய வருகையின் போது உலகப்பொதுமறை திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உலகெங்கும் பரப்பினர்.

தொழில் புரட்சி ஏற்பட்டது. 1789 இல் பிரெஞ் புரட்சி என்னும் மக்கள் புரட்சி தங்கள் தேசியஇன உரிமைக்காகவும் பாதுகாப்பிற்காகவும் போராடிவரும் மக்களுக்கு புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சியது. தொடர்ந்து பல்வேறு தேசிய இனங்கள் தங்கள் உரிமைக்காக தன்னெழுச்சியுடன் போரடத் தொடங்கின. 1917 இல் கம்யூனிசக் கொள்கையை முன்னெடுத்து ருசிய புரட்சி ஏற்பட்டது.

இருபதாம் நூற்றண்டில் உலகநாடுகள் இரண்டு அணிகளாகத் திரண்டு தங்கள் உரிமைகளுக்காகவும், பாதுகாப்பிற்காகவும் போராடின. அதுவே முதலாம் உலகப்போர், இரண்டாம் உலகப்போர் என வரலாறு குறிக்கிறது. முதல் உலகப்போருக்கு பின் தேன்றிய பன்னாட்டுக் கழகம் இனிவரும் நாலங்களில உலக நாடுகளுக்கிடையே ஆயுதப்போர் நிகழாமல் இருக்க ஓர்இனம் ஒருநாடு என்ற சுயநிர்ணய உரிமைக் கொள்கையை தன் உலகளாவிய நடைமுறைக் கொள்கையாக ஏற்றுக் கொண்டது.

ஆனால் தங்கள் உரிமைக்காகவும் பாதுகாப்பிற்காகவும் போராடி வந்த தேசிய இனங்கள் ஆதிக்கச் சக்திகளின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட இரண்டணிகளாகத் திரண்டன. அணு ஆயுத உற்பத்தியின் உச்சகட்டமாக அமெரிக்கா ஜப்பான் நாட்டின் இரண்டு வணிகநகரங்களான கிரோசிம நாகசாகி ஆகியவை மீது அணுகுண்டு வீசி தரைமட்டமாக்கின இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தது.

அணு ஆயுதப்போர் தொடர்ந்தால் மனித இனம் அழிக்கப்பட்டுவிடும் என்பதைக் கண்டு கொண்ட உலகநாடுகள் 1945 இல் ஐக்கியநாடுகள் பாதுகாப்பு அவை என்னும் அமைப்¬பைத் தொடங்கினர். தொடக்கத்தில் 48 நாடுகள் மட்டுமே ஐக்கியநாடுகள் அவை அங்கம் வகித்தன.

ஐக்கியநாடுகள் அவை தங்கள் உரிமைக்காகவும், பாதுகாப்பிற்காகவும் போராடிவரும் தேசிய இனங்களின் போரட்டங்களுக்கு ஆதாரமாக பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. குறிப்பாக, 1950 ஆம் ஆண்டு ஐக்கியநாடுகள் அவை நியயமித்து வல்லுநர்க் குழு ஒன்று தெளிவாக வரையறுக்கப்பட்டப் பகுதியில் தன்னாட்சி நடத்திய வரலாறும் தனித்தப் பண்பாடும் இழந்த தன்னாட்சி உரிமையை மீண்டும் பெறுவதற்கானப் பொது விருப்பமும் ஆற்றலும் உடைய தேசிய இனங்கள் விடுதலைபெற தகுதி உடையவை எவை என்னம் வரலாற்றுச்சிறப்பு மிக்கத் தீர்மானத்தை நிறைவேற்றியது.

இந்த அறிக்கையின் அடிப்படையில் தான் உலகெங்கும் ஆதிக்கச் சக்திகளிடம் அடிமைப்பட்டுக் கிடந்த பல்வேறு தேசிய இனங்கள் தன்னாட்சி உரிமை அடைந்து வருகின்றன. தற்போது 200–க்கும் மேற்பட்ட தேசிய இனநாடுகள் விடுதலை அடைந்து ஐக்கியநாடுகள் அவையில் அங்கம் வகிக்கின்றன.

தற்போது உலகில் தனியுடைமை முதலாளித்துவக் கோட்பாட்டை கடைபிடிக்கும் நாடுகளும் பொதுவுடைமை சர்வாதிகாரக் கோட்பாட்டைக் கடைபிடிக்கும் நாடுகளும் போட்டிப் போட்டுக் கொண்டு அணு ஆயுதங்களை பெருக்கி உலகெங்குமுள்ள தேசிய இன நாடுகளைக் கொலைக்களமாகக் கொண்டு தங்கள் மேலாதிக்கத்தை நிலைநாட்டி வருகின்றன. இவர்களின் கோரப்பசி மதப் பயங்கரவாதமாகவும், அரசப் பயங்கரவாதமாகவும் உருவெடுத்து உலகையே அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்கின்றன.

ஆகவே, உலகெங்குமுள்ள மொழிவழி தேசிய இனங்களின் உரிமையையும் பாதுகாப்பையும் உறுதிபடுத்துவதற்கும் இறையாண்மையை பாதுகாப்பதற்கும் அனைத்துத் தேசிய இனங்களிடையே நல்லுறவை ஏற்படுத்தவும் ஓர் இனம் இன்னொரு இனத்தை மேலாதிக்கம் செய்வதைத் தடுத்து நிறுத்தவும் அன்னிய ஆதிக்கச்சக்திகளிடம் அடிமைபட்டுக் கிடக்கும் தேசிய இனங்களைத் தன்னுரிமை கொண்ட இனங்களாக மாற்றவும் உலகிலுள்ள அனைத்துத் தேசிய இனங்களும் ஐ.ந.அவையில் உறுப்பு நாடுகள் என்பதை உறுதிபடுத்தவும் உலகத் திருக்குறள் கூட்டமைப்புத் தேவையானத் திட்டங்கள் வகுத்துச் செயல்படும்.

உலகில் தேசிய இன உணர்வு இப்பொழுது நடைபெற்றுவரும் தனியுடைமை முதலாளித்துவ ஆட்சிமுறையும் பொது உடைமை சர்வாதிகார ஆட்சிமுறையும் உலகத் தேசிய இனங்களின் வாழ்வுரிமைக்கும் பாதுகாப்புக்கும் எதிரானது உலகச் சமுதாயத்திற்குத் தீங்கானது. தேசிய இனங்களுக்குப் புத்துயிர் ஊட்டும் பணி. சொந்த வரலாறு தெரியாத ஓர்இனத்தால் தலைநிமிர்ந்து தளையறுத்து தன்னுரிமையுடன் வாழ இயலாது.

அதுபோல தனது அடையாளங்களையும் தனக்கே உரிய பண்பாட்டு மரபுகளையும் இழந்துவிட்ட சமுக பொருளாதார அரசியல் விடுதலை அடைவது சாத்தியமில்¬லை. ஆகவே, ஒவ்வொரு தேசிய இனமும் தாங்கள் நாடாண்ட இனம் என்னும் வரலாற்று உண்மையைப் புரட்டி ஓர் அணியாய் திரட்டி அரசியல், பொருளியல் பண்பாட்டியல் துறைகளில் ஆக்கமும் ஆழ்வினையும் கூட்டி தற்கால உலகில் பிற இனத்தாரோடும், நாட்டரோடும் போட்டியிட வல்ல ஊக்கத்தையும் உளத்தியலையும் வளர்க்க வேண்டும்.

திருவள்ளுவர் தொடங்கி வைத்துள்ள விடுதலை தீபம் திருக்குறள்:

ஆகவே இவ்விரண்டின் பட்டறிவிலிருந்து ஐயன் திருவள்ளுவர் வகுத்து தந்துள்ள உலகப்பொதுமறை திருக்குறள் கூறும் அறநெறி அடிப்படையிலான Ôபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்Õ என்னும் படியான Ôபகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் சமத்துவ சமஉடைமை மக்களாட்சி முறைÕ என்னும் புதிய மாற்றுச் சமுதாய கட்டமைப்பபை உருவாக்க வேண்டும். திருக் குறள் மட்டுமே புதிய மாற்று சமுதாய கட்டமைப்பை உலகுக்கு வழங்கும் சக்தி வாய்ந்தது என்பதே உலகக் திருக்குறள் கூட்டமைப்பின் முடிந்த முடிவாகும்.