திருக்குறள் பணிக்கு இலக்கிய ஆர்வலர்கள் மட்டுமல்லாமல் பல்துறை ஆர்வலர்களை ஈடுபடுத்தும் முயற்சியில் – குறிப்பாக இளைய வளரும் தலைமுறையினரை ஈடுபடுத்தும் முயற்சியில் – ஈடுபட்டு வருகிறோம். அதற்காக, மாவட்டம் தோறும் பல்வேறு சமுகச் செயல்பாட்டுக் குழுக்கள் உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். இதன் விபரம் வருமாறு:
தலைவர் – திரைப்ட இயக்குநர் வெ.சேகர் உலகப்பொதுமறை தந்த தமிழன் திருவள்ளுவரை ஒவ்வொரு சாதியினரும், ஒவ்வொரு மதத்தினரும் தங்களுக்குச் சொந்தமானர் என கூறி வருகின்றனர். மைலாப்பூரில் திருவள்ளுவரி பிறந்தார் என பள்ளி பாடத்திட்டங்களனில் குறிப்பிடப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்ட கெசட்டியரில் திருநைனார் குறிச்சியில் பிறந்தார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே, திருவள்ளுவரின் பிறப்பு வாழ்வியல் குறிதது ஆய்வு மேற்கொண்டு உண்மையை வெளிக்கொணரவேண்டிய பொறுப்பும் கடமையும் உலகத்திருக்குற்ள கூட்டமைப்புக்கு இருக்கிறது. ஆகவே இந்த பணியை திருவள்ளுவர் வரலாற்றாய்வுத் துறை மேற்கொள்ளவில்லை..
பொதுச்செயலாளர் குறள் செல்வர் ஆதிலிங்கம் கடந்த 2000 ஆண்டுகளாக திட்டமிட்டு அளிக்கப்பட்டு வரும் தமிழர் வரலாறு மற்றும் பண்பாட்டினை மீட்டுருவாக்கம் செய்யும் வகையில், தமிழர் வரலாறு, குடும்பத் தலைமுறை வரலாறுகளை தொகுத்து வழங்கிட திருக்குறள் தமிழர் வரலாற்றுப் பேரவை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். அதற்காக, மாவட்டம் தோறும் வரலாற்றார்வம் கொண்டவர்களை ஒருங்கிணைத்து வருகிறோம்.
பொருளாளர் கூட்டமைப்பின் நோக்கம் மற்றும் குறிக்கோள்களை நிறைவேற்ற நிதியாதாரத் மதிகமிகத் தேவையாகும். அதற்கானச் செயல்திட்டங்களை வகுத்து நடைமுறைப்படத்த வேண்டிய பொறுப்பும் கடமையும் கூட்டமைப்பின் பொருளாளருக்கு உள்ளது. அதற்கான பணிகளை பொருளாளார் மேற் கொள்வார்.
ஒருங்கிணைப்பாளர் மற்றும் அறக்கட்டளைத் தலைவர் புலவர் சி.பன்னீர்செல்வம்.
கூட்டமைப்பின் நோக்கம் அமற்றும் குறிக்கோள்களை நடைமுறைப்படத்திடத் தேவையான நிதியாதாரத்தை உருவாக்கம் வைப்புநிதித் திட்டத்தை ஏற்படுத்தி நிரந்தரச் செயல்திட்டத்தை மன்னெடுக்கவும் அறக்கம்டளை தலைவர் மேற்பார்வையில் 7 பேர் கொண்ட அறங்காவலர் குழு தெர்நதெடுக்கப்பட்டுள்து. அக்குழு அப்பணிமைய மேற்கொள்ளும்.
திருக்குறள் கரண ஆசான் பேரவை: தமிழர் இல்லங்களில் குடும்ப விழாக்களை திருக்குறள் வழி தமிழ் மரபுப் படி நடத்திட (பிறந்த நாள் விழா, பெயர் சூட்டு விழா, காதணி விழா, நூல் ஏந்தும் நாள் (பள்ளிச் சேர்க்கை நாள்),மங்கைப் பருவ நாள் (பூப்பு நீராட்டு), திருமண உறுதி ஏற்பு, திருமண விழா, வளைகாப்பு (சூல் அழைப்பு), புகுமனை புகு விழா, வணிக நிலையத் திறப்பு விழா,பணிநிறைவு நாள் விழா, பல்வகை விழாக்கள் -ஆண்டு விழா, வெள்ளி விழா (25), பொன் விழா (50), வைர விழா (60), மணி விழா (70), பவள விழா (75), முத்து விழா (80), நூற்றாண்டு விழா, (100) வீடுபேற்றுநாள், நீத்தார் நினைவு நாள் (நினைவேந்தல், படத்திறப்பு விழா) திருக்குறள் கரண ஆசான்கள் உருவாக்கவும் குடும்ப விழாக்களை தமிழ் மரபுப் படி நடத்த வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் “திருக்குறள் கரண ஆசான் பேரவை” தொடங்கத் திட்டமிட்டுள்ளோம். அதற்காக, மாவட்டம் தோறும் கரணப் பயிற்சி பெற ஆர்வம் உள்ளவர்களை ஒருங்கிணைத்து வருகிறோம்.
திருக்குறள் மாணவர் பேரவை: பள்ளிக் கல்லூரிகளில் நடைபெறும் தேசிய சமூக சேவைத் திட்டம் (ழிஷிஷி றிக்ஷீஷீரீக்ஷீணீனீனீமீ) மரம் நடுதல், சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைத்தல் உள்ளிட்டப் பணிகளை மேற்கொள்ள திருக்குறள் மாணவர் பேரவைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளோம். இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த மாவட்டம் தோறும் பள்ளிக் கல்லூரி மாணவர்களை ஒருங்கிணைத்து வருகிறோம்.
திருக்குறள் இளைஞர் பேரவை: இரத்த தான முகாம், கண்தான முகாம், உடல்தான முகாம், மற்றும் உயர்கல்வி – வேலை வாய்ப்பு விழிப்புணர்வு திட்டம் (சிணீக்ஷீக்ஷீவீமீக்ஷீ நிuவீபீமீஸீநீமீ) உள்ளிட்ட பணிகளை திருக்குறள் இளைஞர் பேரவை மூலம் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளோம். அதற்காக, மாவட்டம் தோறும் இப்பணிகளில் ஆர்வமுள்ள இளைஞர்களை ஒருங்கிணைத்து வருகிறோம்.
திருக்குறள் மகளிர் பேரவை: மகளிர் பாதுகாப்பு, சிறுசேமிப்பு, மது மற்றும் புகையிலை விழிப்புணர்வு உள்ளிட்டப் பணிகளை திருக்குறள் மகளிர் பேரவை மூலமாக செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். அதற்காக மாவட்டம் தோறும் இப்பணியில் ஆர்வமுள்ள மகளிரை ஒருங்கிணைத்து வருகிறோம்.
திருக்குறள் தொழிலாளர் பேரவை: தொழிலாளர்களுக்கான பணிப் பாதுகாப்பு, மருத்துவக் காப்பீடுகள், மது மற்றும் புகையிலை உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள் குறித்து திருக்குறள் தொழிலாளர் பேரவை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். அதற்காக, மாவட்டம் தோறும் இப்பணிகளில் ஆர்வமுள்ள தொழிலாளர்களை ஒருங்கிணைத்து வருகிறோம்.
திருக்குறள் பேச்சாளர் பேரவை: திருக்குறள் அமைப்புகள் நடத்தும் கூட்டங்களில் சிறப்புப் பேச்சாளராக கலந்து கொள்ளுதல், புதிய பேச்சாளர்களை உருவாக்குதல் கூட்டமைப்பின் கொள்கை விளக்கக் கூட்டங்களில் பேசுதல், தெருமுனைப் பிரச்சாரங்கள் செய்தல் போன்ற செயல்பாடுகளுக்கு திருக்குறள் பேச்சாளர் பேரவை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். அதற்காக, மாவட்டம் தோறும் இப்பணிகளில் பேச்சுக் கலையில் ஆர்வம் உள்ளவர்களை ஒருங்கிணைத்து வருகிறோம்.
திருக்குறள் எழுத்தாளர் பேரவை: திருக்குறள் கொள்கைகளை முன்னிறுத்தி கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், நாடகங்கள் போன்றவைகள் எழுதவும், புதிய எழுத்தாளர்களை உருவாக்கவும், திருக்குறள் எழுத்தாளர் பேரவை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம்.அதற்காக, மாவட்டம் தோறும் எழுத்தார்வமுள்ளவர்களை ஒருங்கிணைத்து வருகிறோம்.
திருக்குறள் நாட்டுப்புறக் கலைப் பேரவை: திருக்குறள் அமைப்புகள் நடத்தும் விழாக்களில் கலைநிகழ்ச்சிகள் நடத்தவும், கூட்டமைப்பின் கொள்கைக் கோட்பாடுகளை மக்கள் முன்னிலையில் கலை நிகழ்ச்சிகள் மூலம் கொண்டு செல்லவும் திருக்குறள் நாட்டுப்புறக் கலைப் பேரவைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளோம். அதற்காக மாவட்டம் தோறும் கலை ஆர்வம் உள்ளவர்களை ஒருங்கிணைத்து வருகிறோம்.
திருக்குறள் இசைப்பாடகர் பேரவை: திருக்குறள் அமைப்புகள் நடத்தும் விழாக்களில் திருக்குறள் இசைக்கச்சேரி நடத்தவும் திருக்குறள் கரண நிகழ்வுகள் நடைபெறும்போது இசைப்பாடல்கள் பாடவும் கூட்டமைப்பின் கொள்கை விளக்கப் பாடல்களை இயற்றவும், தெருமுனைப் பிரச்சாரங்கள் மற்றும் பொதுக் கூட்டங்களில் இசைப்பாடல்கள் பாடவும் திருக்குறள் இசைப்பாடகர் பேரவை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். அதற்காக, மாவட்டம் தோறும் திருக்குறள் இசைப்பாடகர் குழுவில் இணைந்து பாடல்கள் பாட ஆர்வம் உள்ளவர்களை ஒருங்கிணைத்து வருகிறோம்.
திருக்குறள் விவசாயிகள் பேரவை: இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், நெல் ª-சயராம் ஆகியோரின் கனவுகளை நடைமுறைபடுத்தும் வகையில் இயற்கை விவசாயம், பாரம்பரிய விதைகள் பாதுகாப்பு- உள்ளிட்ட பணிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் திருக்குறள் விவசாயிகள் பேரவை தொடங்கத் திட்டமிட்டுள்ளோம் அதற்காக, மாவட்டம் தோறும் இயற்கை வேளாண்மையில் ஆர்வம் உள்ளவர்களை ஒருங்கிணைத்து வருகிறோம்.
திருக்குறள் ஆசிரியர் பேரவை: பள்ளிகளில் திருக்குறள் நன்னெறி வகுப்புகள் நடப்பதை மேற்பார்வையிடவும், தேவைப்பட்டால் வகுப்புகள் நடத்தவும், ஆசிரியர்கள் இல்லாத அரசுப் பள்ளிகளில் பள்ளிப்பாடங்கள் நடத்தவும் அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து தலைமைக்கு அறிக்கைகள் அனுப்பவும், மத்திய, மாநில அரசுகள் நடத்தும் தேர்வுகளுக்கு பயிற்சி வழங்கவும் திருக்குறள் ஆசிரியர் பேரவை தொடங்கத் திட்டமிட்டுள்ளோம் அதற்காக, மாவட்டம் தோறும் இப்பணிகளை மேற்கொள்ள ஆர்வம் உள்ள ஆசிரியர்களை ஒருங்கிணைத்து வருகிறோம்.
திருக்குறள் வணிகர் பேரவை: நுகர்வோர் பாதுகாப்புக்காகவும், தரமான பொருட்கள் விற்பனை செய்வதை உறுதிப்படுத்தவும் திருக்குறள் வணிகர் பேரவை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம் அதற்காக மாவட்டம் தோறும் இப்பணிகளை மேற்கொள்ள ஆர்வம் உள்ள வணிகர்களை ஒருங்கிணைத்து வருகிறோம்.
திருக்குறள் பொறியாளர் பேரவை: பொறியாளர்களுக்கிடையே நல்லுறவு ஏற்படுத்தவும், பொறியாளர் துறையில் புதிய தொழில் நுட்ப யுக்திகளை மேற்கொள்ளவும், பொறியாளர்களுக்கான வேலைவாய்ப்பினைப் பெருக்கிடவும், திருக்குறள் பொறியாளர் பேரவை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம் அதற்காக, மாவட்டம் தோறும் இப்பணிகளை மேற்கொள்ள ஆர்வம் உள்ள பொறியாளர்களை ஒருங்கிணைத்து வருகிறோம்.
திருக்குறள் தகவல் தொழில்நுட்பப் பேரவை: நவீன தகவல் தொழில் நுட்பங்களை திருக்குறள் நெறிபரப்புவதற்கு பயன்படுத்தவும், தொழில்நுட்ப ஆர்வலர்களுக்கு வழிகாட்டவும், திருக்குறள் தகவல் தொழில்நுட்பப் பேரவை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம் அதற்காக, மாவட்டம் தோறும் இப்பணிகளை மேற்கொள்ள ஆர்வம் உள்ள தகவல் தொழில்நுட்ப ஆர்வலர்களை ஒருங்கிணைத்து வருகிறோம்.
திருக்குறள் நல்வாழ்வுப் பேரவை: மருத்துவ முகாம்கள் நடத்துதல், சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்துதல், சித்த மருத்துவம் மற்றும் நாட்டுப்புற மருத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற செயல்பாடுகளுக்காக திருக்குறள் நல்வாழ்வுப் பேரவை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம் அதற்காக, மாவட்டம் தோறும் இப்பணிகளை மேற்கொள்ள ஆர்வம் உள்ள மருத்துவர்களை ஒருங்கிணைத்து வருகிறோம்.
திருக்குறள் வழக்கறிஞர் பேரவை: அரசியல் சட்ட விழிப்புணர்வு, சட்டஒழுங்கு மற்றும், கிருமினல், சிவில், பாலியல், மற்றும் மகளிர் சட்ட உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும், ஏழை, எளிய மக்களுக்கு இலவசச் சட்ட உதவிகள் வழங்கவும் திருக்குறள் வழக்கறிஞர் பேரவை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். அதற்காக, மாவட்டம் தோறும் இப்பணிகளை மேற்கொள்ள ஆர்வம் உள்ள வழக்கறிஞர்களை ஒருங்கிணைத்து வருகிறோம்.
திருக்குறள் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பேரவை: சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இயற்கைவள பாதுகாப்பு, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குதல் போன்ற பணிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த திருக்குறள் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பேரவை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். அதற்காக, மாவட்டம் தோறும் இப்பணிகளை மேற்கொள்ள ஆர்வம் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்களை ஒருங்கிணைத்து வருகிறோம்.
திருக்குறள் ஆவணப்படத்துறைப் பேரவை: கூட்டமைப்பின் செயல்பாடுகளை ஆவணப்படுத்தவும், திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு மற்றும் திருக்குறள் தொடர்பான கதைகள், நாடகங்கள் உருவாக்கவும் திருக்குறள் ஆவணப்படத்துறைப் பேரவை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். அதற்காக, மாவட்டம் தோறும் இப்பணிகளை மேற்கொள்ள ஆர்வம் உள்ள கலைஞர்களை ஒருங்கிணைத்து வருகிறோம்.