தலைமை அமைப்பில் கூட்டமைப்புத் தலைவர்-1, பொதுச்செயலாளர்-1, பொருளாளர்-1, அறக்கட்டளைத் தலைவர்-1, அறக்கட்டளைப் பொருளாளர்-1, தலைமைக் கரண ஆசான்-1, அமைப்புச் செயலாளர், தலைமை நிலையச் செயலாளர்-1, துணைத்தலைவர்கள்-6, துணைப்பொதுச்செயலாளர்கள்-௬ ஆகிய தலைமை நிருவாகிகள் இடம்பெறுவர்.
தலைமை நிருவாகிகளின் பணிகளில் ஒத்துழைப்பு வழங்க ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு துறைஇயக்குநர் வீதம் 40 துறைஇயக்குநர்கள் செயல்படுவர்.
தலைமை நிருவாகிகள், ஆட்சி மன்றக் குழு, செயற்குழு, பொதுக்குழுக் கூட்டங்களுக்குத் தலைமை தாங்கி வழி நடத்துதல்.
தமிழ்மரபுபடி திருக்குறள்நெறி அடிப்படையில் குடும்பவிழாக்களை நடத்துவதற்கு மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர,மாநகர மண்டல, ஊராட்சி, பேரூராட்சி, நகர வட்ட, மாநகரவட்ட, கிளை/ உறுப்பு அமைப்புகளின் கரண ஆசான்களுக்குத் தேவையான வழிகாட்டுதல் வழங்குவார்.
புதிய கரண ஆசான்களுக்கு பயிற்சி வழங்குவார்.
தமிழ்மரபுபடி திருக்குறள்நெறி அடிப்படையில் குடும்பவிழாக்களை நடத்துவதன் தேவை குறித்து
விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்துவார்.
கூட்டமைப்பின் செயல்திட்டங்களைச் சிறப்பாக முறைப்படுத்திட துணைத் தலைவர்கள், துணைப்
பொதுச்செயலாளர்கள் மற்றும் மண்டலச் செயலாளர்களுக்குத் தலா 3 வருவாய் மாவட்டங்கள் பொறுப்பு வழங்கப்படும்.
துணைத் தலைவர்கள், துணைப் பொதுச் செயலாளர்கள் தங்களுக்குப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள மூன்று (3) வருவாய் மாவட்டங்களில் குறைந்தது 40 கிளை/ உறுப்பு அமைப்புகள் கொண்ட மாவட்ட அமைப்புகளை
உருவாக்கித் திட்டப்பணிகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.
தங்கள் பொறுப்பு மாவட்டங்களில் தலா ஒரு தலைமைத்துறை இயக்குனர்கள் தேர்வு செய்து
கொள்ள வேண்டும்.
மேற்படி பொறுப்பாளர்கள் ஒவ்வொரு வரும் தாங்கள் வசித்து வரும் ஊரில்/நகரில்/குடியிருப்பில்/
15 பேர் கொண்ட கிளை அமைப்பு ஒன்று ஏற்படுத்துதல்.
தலைமைத்துறை இயக்குனர்கள் ஒவ்வொரு வரும் நிர்வாக கட்டமைப்பினை முறைப் படுத்துவதற்கு தலா ஒரு வருவாய் மாவட்டத்தைப் பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டும்.
தாங்கள் பொறுப்பு எடுத்துள்ள வருவாய் மாவட்டத்தில் 40 கிளை/உறுப்பு அமைப்புகள் உள்ளனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
தாங்கள் பொறுப்பெடுத்துள்ள வருவாய் மாவட்டத்தில் 40 கிளை/உறுப்பு அமைப்புகள் இல்லை எனில் தங்கள் மாவட்டத்தின் பொறுப்பாளரான துணைத் தலைவர்/ துணைப் பொதுச் செயலாளர் ஒத்துழைப்புடன் 40 கிளை/உறுப்பு அமைப்புகள் கொண்ட மாவட்ட அமைப்பு ஏற்படுத்தி கொடுக்க
வேண்டும்.
திருக்குறள் வழி பல்துறை சார்ந்த பயிற்சிகள் மற்றும் சமூக நலப்பணிகளை முன்னெடுக்கும்
வகையில் ஒரு துறைக்குப் பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டும்.
1) தலைவர்& அயலகத் தமிழர் ஒருங்கிணைப்புத் துறை, 2) செயலாளர்& நிருவாகம் (ம) திருக்குறள் அரசு இதழ் வளர்ச்சித்துறை, 3) பொருளாளர்&புரவலர் ஒருங்கிணைப்புத் துறை, 4) கரண ஆசான் பயிற்சி (ம) திருக்குறள் வாழ்வியலாக்கத் துறை, 5) பேச்சாளர் பயிற்சி (ம) கொள்கைப்பரப்புத் துறை, 6) சேவைப்பணி (ம) திருக்குறள் பள்ளிவளர்ச்சித் துறை, 7) வணிகர்
நலன் (ம) தொழில் முனைவோர் வளர்ச்சித் துறை, 8) உழவர் நலன் (ம) வேளாண் வளர்ச்சித் துறை, 9) மகளிர் நலன் (ம) குடும்ப ஆற்றுப்டுத்துதல் துறை, 10) மாணவர் நலன் (ம) கல்வி வழிகாட்டுதல் துறை, 11) இளைஞர் நலன், வேலை வாய்ப்பு (ம) விளையாட்டுத் துறை,
12) சுற்றுச்சூழல் பாதுகாப்பு (ம) சுற்றுலா வளர்ச்சித் துறை, 13) தமிழ் ஆட்சிமொழி (ம) கலை இலக்கியத் துறை,Ê 14) சட்ட விழிப்புணர்வு (ம) நுகர்வோர் பாதுகாப்புத் துறை, 15) அறிவியல், பொறியியல் (ம) இளம் விஞ்ஞானிகள் வளர்ச்சித் துறை, 16) மது,போதை (ம) புகையிலை
ஒழிப்புத் துறை, 17) மக்கள் நல்வாழ்வு (ம) உடலுறுப்புதான விழிப்புணர்வுத் துறை, 18) ஊர் வரலாறு (ம) குடும்பத் தலைமுறை வரலாற்றாய்வுத் துறை, 19) தொழிலாளர் நலன் (ம) அரசுத் திட்டங்கள் விழிப்புணர்வுத் துறை, 20) செய்தி (ம) நவீன தகவல் தொழில் நுட்பத் துறை ஆகிய 20 நிருவாகிகளுக்கும் துறைகள் தேர்ந்தெடுப்பது எனவும்; ஒவ்வொரு நிருவாகிக்கும் சமுதாயப் பணியாற்றுவதற்கென துறைகள் வழங்குவது எனவும் ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.