உலகத் திருக்குறள் கூட்டமைப்பு

உலகத் திருக்குறள் கூட்டமைப்பு

செயல்பாடுகள் - 2022

2022 ஆம் ஆண்டு நிகழ்வுகள்:

7 ஆவது செயற்குழுக் கூட்டம் - 22.05.2022 & சென்னை

தலைமை அலுவலக திறப்பு விழா

உலகத் திருக்குறள் கூட்டமைப்பின் தலைமை அலுவலக திறப்பு விழா திருவள்ளுவராண்டு 2053 வைகாசி எட்டாம் நாள் (22.05.2022) ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 09.30 மணிக்கு எண் 8/18, வில்வம் டவர்சு (தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு), வில்லிவாக்கம், சென்னை 600 049 என்ற முகவரியில் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் புலவர் சி. பன்னீர் செல்வம், பொதுச்செயலாளர் குறள்செல்வர் ஆதிலிங்கம் மற்றும் ஆட்சிமன்றக்குழுவினர் முன்னிலையில் தலைவர் திரைப்பட இயக்குநர் வெ.சேகர் அவர்கள் தலைமை அலுவலகத்தை திறந்து வைத்தார்கள்.

திருவிளக்கேற்றல்

அலுவலகத்தில் குறள் செல்வி பிச்சி ஆதிலிங்கம், காரைக்குடி குறள் மாவட்ட தலைவர் திருமதி சுவேதா, மத்திய சென்னை மகளிர் பேரவை துணைத்தலைவி திருமதி கீதா சுகிர்தராசு, திருமதி குந்தவை, ——————-விழாவில் ஒருங்கிணைப்பாளர், துணைத்தலைவர்கள், துணைப்பொதுச் செயலாளர்கள், மண்டலச் செயலாளர்கள், மாவட்ட அமைப்புச்செயலாளர்கள், மாவட்ட நிருவாகிகள் என 200 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

திருவள்ளுவர் திருவுருவச் சிலைக்குப் பூச்சொரிந்து வணங்குதல்

பின்னர், தலைமை அலுவலகத் திறப்பு விழாவிற்கு வருகை தந்த அனைத்துப் பொறுப்பாளர்களும் தலா ஒரு திருக்குறள் சொல்லி திருவள்ளுவர் திருவுருவச் சிலைக்குப் பூச்சொரிந்து வணங்கினர்.

ஆட்சிமன்றக்குழுக் கூட்டம்

தொடர்ந்து, தலைவர் தலைமையில் சிறப்பு ஆட்சிமன்றக் குழுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஒருங்கிணப்பாளர் புலவர் சி.பன்னீர் செல்வம், துணைத்தலைவர்கள் தென்னிலை இராம. கோவிந்தன், திருமிகு. தா.கோ. சம்பந்தம், திருமிகு அன்வர்பாட்சா, துணைப்பொதுச் செயலாளர்கள் திருமிகு காசி. சாந்தகுமார், மண்டலச் செயலாளர்கள் திருமிகு மெய்யாண்டவர், திருக்குறள் காமராசு, திருமிகு ஆல்ஃபி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

புதிய பொருளாளர் தேர்வு

கூட்டத்தில் பொருளாளர் புலவர் மு.கோ.ஏழுமலை அவர்கள் வழங்கியிருந்த பதவி விலகல் கடிதம் பரிசீலனை செய்யப்பட்டது. வயது முதிர்வு காரணமாக தன்னால் தொடர்ந்து செயல்பட இயலாது எனக் கூறி வழங்கியிருந்த பதவி விலகல் கடிதம் ஒருமனதாக ஏற்றுக் கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.

கூட்டமைப்பின் வரவு, செலவு கணக்கினைப் பராமரிக்க வேண்டிய அவசரத்தேவை உள்ளதால் புதிய பொருளாளர் ஒருவரைத் தேர்வு செய்து செயற்குழுவின் ஒப்புதலுக்குப் பரிந்துரைப்பது என தீர்மானிக்கப்பட்டது. அதன்படி பொதுச்செயலாளர் குறள் செல்வர் ஆதிலிங்கம் முன்மொழிய ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் மற்றும் தலைவர் இயக்குநர் வெ. சேகர் ஆகியோர் வழிமொழிய மண்டலச்செயலாளரும், தஞ்சை குறள் மாவட்டச் செயலாளாருமான திருமிகு இராம. சந்திரசேகரன் அவர்களை புதிய பெருளாளராக ஆட்சிமன்றக்குழுவால் ஒருமனதாக தேர்வு செய்யபட்டது.

தலைமைக் கரண ஆசான் தேர்வு

மேலும், கூட்டமைப்பின் முதல் செயல்திட்டமான தமிழர் இல்லங்களில் குடும்ப நிகழ்வுகளைத் தமிழ்மரபுப்படி குறள்நெறிவழி நடத்துவதற்கென கரண ஆசான்களுக்கு வழிகாட்டுவதற்கென தலைமை கரண ஆசானாக ஒருவரைத் தேர்வு செய்து செயற்குழுவின் ஒப்புதலுக்குப் பரிந்துரைப்பதெனத் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி மண்டலச்செயலாளர்கள் திருமிகு மெய்யாண்டவர் முன்மொழிய, திருக்குறள் காமராசு வழிமொழிய திருமிகு தென்னிலை இராம.கோவிந்தன் அவர்களை தலைமை கரண ஆசானாக ஆட்சிமன்றக்குழுவால் ஒருமனதாக தேர்வு செய்யபட்டது.

அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் தேர்வு

மேலும், கூட்டமைப்பின் அறக்கட்டளைப் பணிகளை விரைவுபடுத்துவதற்கென அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் ஒருவரைத் தேர்வு செய்து செயற்குழுவின் ஒப்புதலுக்குப் பரிந்துரைப்பதெனத் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி துணைத்தலைவர் முனைவர் அன்வர்பாட்சா முன்மொழிய துணை பொதுச்செயலாளர்கள் திருமிகு காசி சாந்தகுமார் முன்மொழிய திருமிகு தா.கோ. சம்பந்தம் அவர்களை அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளராக ஆட்சிமன்றக்குழுவால் ஒருமனதாக தேர்வு செய்யபட்டது.

பொறுப்பாளர்கள் பொறுப்பேற்றல்

பின்னர், புதிய தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம், பொறுப்பாளர்களை அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர செய்தார். பொறுப்பாளர்கள் கூட்டமைப்பின் நோக்கம் மற்றும் குறிக்கோள்களைச்சிறப்பாக நடைமுறைப்படுத்துவதற்கு முழுமனதுடன் செய்லபடுவோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இணையதளம் தொடர்ந்து செயல்பட ஏற்பாடு செய்தல் தொடர்பாக

14.05.2019 அன்று கன்னியாகுமரியில் நடைபெற்ற முதலாண்டு விழாவில் ஜிலீவீக்ஷீuளீளீuக்ஷீணீறீயீமீபீணீtவீஷீஸீ@. ஷீக்ஷீரீ என்னும் பெயரில் இணையதளம் உருவாக்கப்பட்டு, கரூர் திரு தங்கராசு அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. மேற்படி இணையதளம் உருவாக்கித் தந்த ஈக்காட்டுக்தாங்கல் இன்போடெக் நிறுவனத்திற்கு வழங்கவேண்டிய வடிவமைப்புக்கானக் கட்டணம் ரூபாய் 5,000/-செலுத்தி, இணையதளம் தொடர்ந்து இயங்க ஏற்பாடு செய்வது என ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஏழாவது செயற்குழுக் கூட்டம்

பின்னர் சென்னை வில்லிவாக்கம் சிறீகாமகோடி திருமண மாளிகையில் நடைபெற்ற செயற்குழு கூட்டம் முதல் நிகழ்வாக, காலை 10.00 மணிக்கு கோவை மாவட்டம் அன்வர் பாட்சா அவர்கள் தலைமையில் மேசிக் சோ நடத்தப்பட்டது.

வரவேற்புரை: பின்னர், காலை 10.30 மணிக்கு சென்னை வில்வம் டவர்சு திருக்குறள் பள்ளி மாணவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார். குறள்செல்வி பிச்சிஆதிலிங்கம் திருக்குறள் இறைவாழ்த்து பாடினார். கூட்டமைப்பின் அமைப்புச் செயலாளர், இராமநாதபுரம் மாவட்டம் ஆசிரியர் செம்மல் அ. செந்தில்குமார் அனைவரையும் வரவேற்றார்.

நிருவாக அறிக்கை: பொதுச்செயலாளர் குறள்செல்வர் ஆதிலிங்கம் 2021 -2022 ஆம் நிதியாண்டுக்கான நிருவாக அறிக்கை வாசித்து வழங்கினார்.

வரவு செலவு அறிக்கை: பொருளாளர் திருமிகு இராம. சந்திரசேகரன் அவர்கள் 2021 -2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவு அறிக்கையை வாசித்து வழங்கினார்.

நாட்காட்டி வரவு செலவு அறிக்கை: பொதுச்செயலாளர் குறள்செல்வர் ஆதிலிங்கம் அவர்கள் 2021 -2022 ஆம் நிதியாண்டுக்கான நாட்காட்டி வரவு செலவு அறிக்கையை வாசித்து வழங்கினார்.

அறக்கட்டளைத் தலைவர் உரை: அறக்கட்டளைத் தலைவர் மற்றும் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் புலவர் சி பன்னீர்செல்வம் அவர்கள் கூட்டமைப்பின் அறக்கட்டளைக்கு புரவலர்கள் சேர்க்கை குறித்து விளக்கிப் பேசினார்.

தலைமைக் கரணஆசான் உரை: தலைமைக் கரண ஆசான் தென்னிலை இராம.கோவிந்தன் அவர்கள் அனைத்து திருக்குறளய் அமைப்புகளிலிருந்தும் ஒரு குறள்நெறிக் கரணஆசான், ஒரு துணைக் கரணஆசான் என இருவர் வீதம் தேர்ந்தெடுக்கப்பட்டு அந்தந்த மாவட்டத்திலேயே அவர்களுக்குப் பயிற்சி வழங்கப்படும் அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றார்.

அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் உரை: அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் மற்றும் கூட்டமைப்பின் துணைத்தலைவர் திருமிகு தா.கோ. சம்பந்தம் அவர்கள் ஓராண்டுக்குள் கூட்டமைப்பின் அறக்கட்டளைக்கு வைப்புநிதித் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

பணிநிறைவு பாராட்டு விழா: கூட்டமைப்பின் தலைமை நிலைய செயலாளர் திருமிகு பூமணிதாசு அவர்களுக்கு குறள்செல்வி பிச்சிஆதிலிங்கம் அவர்கள் தலைமையில் திருக்குறள் நெறிப்படி பணிநிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இதைப்போன்று திருமணம் உள்ளிட்ட அனைத்துக் குடும்ப நிகழ்வுகளையும் குறள்நெறிக் கரண ஆசான்கள் மூலம் நடத்திடத் தேவையான பயிற்சி மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

தலைமையுரை: கூட்டமைப்பின் தலைவர் திரைப்பட இயக்குனர் வெ.சேகர் அவர்கள் தனது தலைமையுரையில் சமுதாய அமைப்புகள் தான் அரசுகளை இயங்க வைக்கின்றன. எடுத்துகாட்டாக தந்தை பெரியார் அவர்கள் திராவிடக்கழகம் அமைப்பின் மூலமாக முன்வைக்கபட்ட கோரிக்கைகளும், போராட்டங்களும் தான் சட்டங்களாக இயற்றப்பட்டு மக்களுக்கு பேருதவியாக அமைந்தது. அத்துடன் ஊர்அளவிலும், மாவட்ட அளவிலும் செயல்பட்டு வரும் திருக்குறள் அமைப்பினர் உலகளாவிய அமைப்பாகச் செயல்படும் நம் உலகத்திருக்குறள் கூட்டமைப்பின் பொறுப்பாளர்களாகச் செயல்படும்போது வெளியுலகத்திற்கு அறிமுகமாகும் வாய்ப்பு கிடைக்கிறது. ஆகவே, அனைத்துத் திருக்குறள் அமைப்புகளும் கூட்டமைப்பின் உறுப்பு அமைப்பாக இணைந்து செயல்பட வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

பொருளாளர் கொடுத்துள்ள பதவி விலகல் விண்ணப்பம் குறித்துத் தீர்மானித்தல் தொடர்பாக

கூட்டமைப்பின் பொருளாளர் கவிஞர் செவ்வியன் அவர்கள் வயது முதிர்வின் காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவினால் பொருளாளர் பொறுப்பினைத் தொடர்ந்து ஆற்ற இயலாத நிலையில் உள்ளதால் பதவி விலகல் விண்ணப்பம் கொடுத்துள்ளார். தலைமை நிருவாகிகளின் தீவிர ஆய்விற்குப் பின், பொருளாளர் கவிஞர் செவ்வியன் அவர்களின் உடல்நலன் கருதி, அவர்கள் கொடுத்துள்ள பதவி விலகல் விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்வது என ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கவிஞர் செவ்வியன் அவர்கள் கூட்டமைப்பினைத் தொடங்குவதற்கும், தொடர்ந்து கூட்டமைப்பு வளர்ச்சி பெறவும் ஆற்றியப் பணிகளுக்குக் கூட்டமைப்பின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்வது எனவும் கவிஞர் செவ்வியன் அவர்களின் ஒத்துழைப்புக் கூட்டமைப்பிற்குத் தேவைப்படுவதால், கூட்டமைப்பின் சிறப்புத் தலைவராகத் தேர்வு செய்வது எனவும் இத்தீர்மானத்தை அடுத்து நடைபெறும் செயற்குழுக் கூட்டத்தில் ஒப்புதல் பெற்றுக் கொள்வது எனவும் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம்-11
கூட்டமைப்பிற்கு புதிய பொருளாளர் தேர்வு செய்தல் தொடர்பாக

கூட்டமைப்பின் பொருளாளாராகச் செயல்பட்டு வந்த கவிஞர் செவ்வியன் அவர்கள் வயது முதிர்வின் காரணமாக பதவி விலகல் கடிதம் கொடுத்துள்ளதைத் தலைமை நிருவாகிகள்குழு ஏற்றுக் கொண்டதால் ஏற்பட்டுள்ள காலி இடத்தை நிரப்ப புதிய பொருளாளர் தேர்வு செய்வது என ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, தற்போது அமைப்புச் செயலாளராகச் செயல்பட்டு வரும் புலவர் மு.கோ.ஏழுமலை அவர்களை புதிய பொருளாளராகத் தேர்வு செய்து ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அடுத்து வரும் செயற்குழுக்கூட்டத்தில் புதிய பொருளாளர் தேர்வினை ஒப்புதல் பெற்றுக் கொள்வது என ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ட்டமைப்பின் முதல் செயற் குழுக் கூட்டம் – 09.09.2018 – கரூர்

ஆட்சிமன்றக் குழுக்கூட்டம் – 10.11.2018 – மதுராந்தகம்

மாநில அளவிலான கரணப்பயிற்சி முகாம் – 01-12-2018 – இராசபாளையம்

இரண்டாவது செயற் குழுக் கூட்டம் – 02-12-2018 – இராசபாளையம்

இரண்டாவது ஆட்சிமன்றக்குழுக் கூட்டம் – 24.02.2019 – திருச்சி

கூட்டமைப்பின் மூன்றாம் செயற் குழுக் கூட்டம் – 16.03.2019 – கரூர்

கரண ஆசான்கள் உருவாக்குவதற்கான கருத்தரங்கு – 30.03.2019 – 31.03.2019 – நீலாங்கரை

நான்காவது செயற் குழுக் கூட்டம் – 13.07.2019 – 14.07.2019 – கோவை

தீர்மானம்-12
புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் புதுப்பித்தல் கட்டணம் பெறுதல் தொடர்பாக

கூட்டமைப்பின் உறுப்பு அமைப்பு ஒவ்வொன்றும் ஆண்டுதோறும் ரூபாய் 100 புதுப்பித்தல் கட்டணம் செலுத்தி, கூட்டமைப்பின் உறுப்பு அமைப்பாகத் தொடர்வதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும் என கூட்டமைப்பின் சட்டவிதிகள் கூறுகின்றன.

ஆகவே, தலைமை நிருவாகிகளுக்குப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களிலும், கடந்த 2 ஆண்டுகளாக புதுப்பித்தல் கட்டணம் செலுத்தாத உறுப்பு அமைப்புகளிடம் புதுப்பித்தல் கட்டணம் பெறவும் இதுநாள்வரை கூட்டமைப்பின் உறுப்பு அமைப்பாக இணையாத திருக்குறள் அமைப்பினை உறுப்பு அமைப்பாக இணைக்கவும் தலைமை நிருவாகிகள் தங்கள் பொறுப்பு மாவட்ட அமைப்புகளை அறிவுறுத்த வேண்டுமென கேட்டு ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம்-13
நாள்காட்டிக்குழு அமைத்தல் தொடர்பாக

கூட்டமைப்பின் சார்பாக ஆண்டுதோறும் வெளியிடப்படும் நாள்காட்டியில் திருவள்ளுவர் ஆண்டு சேர்க்கப்படவில்லை. அத்துடன் நாள்காட்டியில் உள்ள செய்திகளை ஆட்சிமன்றக்குழுவினரில் ஒருசிலர் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆகவே, இனிவரும் காலங்களில் கூட்டமைப்பின் பெயரில் எவரும் தன்னிச்சையாக நாட்காட்டி வெளியிடக்கூடாது எனவும் கூட்டமைப்பின் சார்பில் நாட்காட்டிக் குழு ஒன்று அமைத்து அக்குழுவினால் மட்டுமே நாட்காட்டி வெளியிட வேண்டுமெனவும் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி அக்குழுவில் தலைவர் இயக்குநர் வெ.சேகர், பொதுச்செயலாளர் குறள்செல்வர் ஆதிலிங்கம், பொருளாளர் புலவர் மு.கோ.ஏழுமலை, தலைமைக் கரண ஆசான் புலவர் அய்யா.மோகன் மற்றும் துணைத் தலைவர்கள், திரு ஆ.நெடுஞ்சேரலாதன், திரு.தென்னிலை இராம. கோவிந்தன், துணைப்பொதுச்செயலாளர் திருக்குறள் செல்வன் ஆகியோர் இடம பெறவேண்டுமென ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம்-14
வரவு செலவு கணக்குகள் கூட்டமைப்பின் வங்கிக் கணக்குகள் மூலம் மட்டுமே நடைமுறைப்படுத்துதல் தொடர்பாக

கடந்த காலங்களில் கூட்டமைப்பின் வரவு செலவு கணக்குகள் வங்கிக் கணக்கு மூலமாக செயல்படுத்தாத நிலை தொடர்கிறது. ஆகவே, இனிவரும் காலங்களில் எந்த நிலையிலும் தனிநபர் வங்கிக் கணக்கில் கூட்டமைப்பின் கணக்குகள் பராமரிக்க கூடாது எனவும், கூட்டமைப்பின் வங்கி கணக்குகள் மூலம் மட்டுமே அனைத்து வரவு செலவுகளும் செய்யப்பட வேண்டுமெனவும் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம்-15
திருக்குறள் அரசுத் திங்களிதழினைத் தொடர்ந்து வெளியிடுவது தொடர்பாக

கூட்டமைப்பின் செய்தி ஏடான திருக்குறள் அரசுத் திங்களிதழினைத் தொடர்ந்து வெளியிடுவதற்கு ஒவ்வொரு மாவட்டமும் தலா 25 ஆண்டு சந்தா தொகைப் பெற்றுத் தருவது என ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன் திருக்குறள் அரசுத் திங்களிதழின் ஆசிரியர் குழுவில் ஆட்சிமன்றக்குழுவினர் அனைவரும் இடம் பெறுவது எனவும் முதல் 6 மாதங்களுக்கான திருக்குறள் அரசுத் திங்களிதழ் வெளியிடும் பொறுப்பினை ஆட்சிமன்றக்குழுவினர் ஏற்றுக் கொள்வது எனவும் ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, மார்ச் மாதம் துணைத் தலைவர். திரு தா.கோ.சம்பந்தம் அவர்களும், ஏப்ரல் மாதம் தலைவர் திரு வெ.சேகர் அவர்களும், மே மாதம் துணைத் தலைவர். திரு தென்னிலை இராம கோவிந்தன் அவர்களும், ஜுன் மாதம் ஒருங்கிணைப்பாளர். புலவர் சி.பன்னீர் செல்வம் அவர்களும், ஜுலை மாதம் பொருளாளர் புலவர் மு.கோ.ஏழுமலை அவர்களும், ஆகத்து மாதம் துணைப்பொதுச்செயலளார். திரு செல்வம் அவர்களும் பொறுப்பெடுத்துக் கொள்வது எனவும் மற்றஆட்சிமன்றக்குழுவினரும் தலா ஒரு மாதத்திற்கான இதழ்ச் செலவினை ஏற்றுக் கொள்ள முன் வர வேண்டுமெனவும் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணிக்கு எதிரான நடவடிக்கை : பின்னர், திருக்குறளை மநுநூலுக்கு ஒப்பிட்டுத் திருக்குறளும் தடைச்செய்யப்படவேண்டியதே என கட்டுரை வெளியிட்ட தினமணி நாளிதழுக்கு எதிராக வழக்குத் தொடருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் வழக்கறிஞர் சிவகுமார் கலந்து கொண்டார். தினமணி நாளிதழுக்கு எதிராக 100 திருக்குறள் அமைப்புகள் வெவ்வேறுப் பகுதிகளில் வழக்குத் தொடருவது என தீர்மானிக்கபட்டது. அதற்கான வழிகாட்டுதலை வழக்கறிஞர் சிவகுமார் வழங்க ஒப்புக்கொண்டார்.

கூட்டத்தின் நிறைவாக புதிய பொருளாளராகப் பொறுப்பேற்றுள்ள புலவர் மு.கோ. ஏழுமலை அவர்கள் நன்றி தெரிவிக்க கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.

நன்றி!!

அன்புடன்

(குறள்செல்வர் ஆதிலிங்கம்)

2 மற்றும் 3 ஆவது பொதுக்குழுக் கூட்டம்

2019-2020 மற்றும் 2020-2021, - 29.09.2021 - அரியலூர் (09.09.2021) பொதுக்குழுக் கூட்ட அறிக்கை

லகத்திருக்குறள் கூட்டமைப்பின் பொதுக்குழுக் கூட்டம் திருவள்ளுவராண்டு 2052 புரட்டாசி மாதம் மூன்றாம் நாள் (09.09.2021) ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு அரியலூர் மாவட்டம் தத்தனூர் மீனாட்சி இராமசாமி கலை அறிவியல் கல்லூரியில் கூட்டமைப்பின் தலைவர் திரைப்பட இயக்குனர் வெ.சேகர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தத்தனூர் மீனாட்சி இராமசாமி கலை அறிவியல் கல்லூரி தாளாளர் முனைவர் மீ.இரா. இரகுநாதன் அவர்கள் முன்னிலை வகித்தார்.

கொரோனா பெருந்தொற்றினால் நடைமுறையில் இருந்த பொதுமுடக்கம் காரணமாக 2019-2020 ஆம் நிதியாண்டிற்கானப் பொதுக்குழுக் கூட்டம் நடத்த இயலாததால், 2019-2020 மற்றும் 2020-2021 ஆம் நிதியாண்டுகளுக்கான பொதுக்குழுக் கூட்டம் இணைத்து நடத்தப்பட்டது.

106 பங்கேற்பாளர்கள்

கூட்டத்தில் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர், பொருளாளர், (பொறுப்பு) ஒருங்கிணைப்பாளர், தலைமை கரண ஆசான், துணைத்தலைவர்கள், துணைப் பொதுச்செயலாளர்கள், மண்டல ஒருங்கிணைப்பாளர்கள், மாவட்டப் பொறுப்பாளர்கள், உறுப்பு அமைப்பினர் என 106 பேர் கலந்து கொண்டனர்.

வரவேற்புரை

தொடக்க நிகழ்வாக குறள்செல்வி பிச்சிஆதிலிங்கம் திருக்குறள் இறைவாழ்த்து பாடினர். குறள்அரசி மினர்வா ஆட்லின் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார். கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் புலவர் சி .பன்னீர்செல்வம் அனைவரையும் வரவேற்றார்.

இரங்கல் நிகழ்வு

பின்னர், கூட்டமைப்பின் மதிப்புறு தலைவர் முனைவர் இளங்குமரனார், நாகை மாவட்டத் தலைவர் திரு. முருகு அருணன், கிருட்டிணகிரி மண்டல ஒருங்கிணைப்பாளர் தமிழ்ச்செம்மல் நாகராசன், சாகித்ய அகாடமி விருது பெற்ற கி. இராசநாராயணன், திரைப்பட பாடலாசிரியர் புலவர் புலமைப்பித்தன், நவீனகவிஞர் பிரான்சிசு கிருபா, தந்தை பெரியாரின் தொண்டர் திருச்சி ஆனைமுத்து ஆகியோரின் மறைவுக்கு நினைவஞ்சலிச் செலுத்தப்பட்டது.

தலைமையுரை

தலைவர் கூட்டமைப்பின் தலைவர் திரைப்பட இயக்குனர் வெ.சேகர் தலைமை உரையாற்றினார்.

நிருவாக அறிக்கை

பொதுச்செயலாளர் குறள்செல்வர் ஆதிலிங்கம் 2018 -2019, 2019 -2020, 2020 -2021 ஆகிய நிதியாண்டுகளுக்கான நிருவாக அறிக்கை வாசித்து வழங்கினார். அறிக்கைத் தொடர்பாக பொதுக்குழு உறுப்பினர்கள் எழுப்பிய வினாக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்ட பின் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

வரவு செலவு (ம) தணிக்கையாளர் அறிக்கை

பொருளாளர்,(பொறுப்பு) மு.கோ.ஏழுமலை 2019 -2020, 2020 – 2021 ஆகிய நிதியாண்டுகளுக்கான தணிக்கையாளர் அறிக்கையினை வாசித்து வழங்கினார். தணிக்கையாளர் அறிக்கைத் தொடர்பாக பொதுக்குழு உறுப்பினர்கள் எழுப்பிய வினாக்களுக்கு, பொருளாளரால் விளக்கம் அளிக்கபட்ட பின் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

ஆட்சிமன்றக்குழுத் தேர்தல்

பின்னர், தத்தனூர் மீனாட்சி இராமசாமி கலை அறிவியல் கல்லூரி தாளாளர் முனைவர் மீ.இரா. இரகுநாதன் அவர்கள் முன்னிலையில் 2021 அக்டோபர் முதல் 2014 செப்டம்பர் ஆண்டுகளுக்கான ஆட்சிமன்றக்குழுத் தேர்தல் நடைபெற்றது. கூட்டமைப்பின் தலைவராக திரைப்பட இயக்குனர் வெ.சேகர், பொதுச் செயலாளராக குறள்செல்வர் ஆதிலிங்கம், பொருளாளராக மு.கோ.ஏழுமலை, ஒருங் கிணைப்பாளராக புலவர் சி. பன்னீர் செல்வம், தலைமை கரண ஆசானாக புலவர் அய்யா.மோகன் ஆகியோரும், துணைத்தலைவர்களாக தென்னிலை இராம.கோவிந்தன் (கரூர்), திருமிகு தா.கோ. சம்பந்தம் (கடலூர்), தமிழரிமா தா.சம்பத் (திருக்கோவிலூர்), திருக்குறள் அ.பெருமாள் (மதுரை எழுமலை), முனைவர் மு.க.அன்வர்பாட்சா (கோவை), பேராசிரியர் க.கருத்தபாண்டி (கோவில்பட்டி) ஆகியோரும் துணைப் பொதுச்செயலாளர்களாக திருமிகு ம.இராவணன் (அரியலூர்), தென்றல் ஆ.சேகர் (உடுமலைப்பேட்டை) திருமிகு அன்புஆறுமுகம் (சாத்தூர்), ஓட்டெச்சு மா.அ இளங்கோவன் (சேலம்), திருமிகு காசி.சாந்தகுமார் (கன்னியாகுமரி), திருமிகு தயாளன் (இராணிப்பேட்டை) ஆகியோரும் ஒருமனதாகத் தேர்வுச் செய்யப்பட்டனர்.

புதிய ஆட்சிமன்றக்குழுவினர் அறிமுகம்

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆட்சிமன்றக்குழுவினர் அனைவரையும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு பொதுச் செயலாளர் குறள்செல்வர் ஆதிலிங்கம் அறிமுகம் செய்து வைத்தார். தலைவர் இயக்குநர் வெ.சேகர் அனைத்துப் பொறுப் பாளர்களுக்கும் கதராடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

புதியஆட்சிமன்றக்குழுவினர் பொறுப்பேற்பு

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரும் பொதுக்குழு உறுப்பினர் முன்னிலையில் கூட்டமைப்பின் வளர்ச்சிக்கு தன்னலம் கருதாது உழைப்போம் என உறுதிமொழி எடுத்து 2021 அக்டோபர் முதல் 2024 செப்டம்பர் வரையிலான மூன்றாண்டுகளுக்கான தலைமையக நிருவாகிகளாகப் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

திருக்குறள் உரைநூல் வெளியீடு

தத்தனூர் மீனாட்சி இராமசாமி கலை அறிவியல் கல்லூரி தாளாளர் முனைவர் மீ.இரா. இரகுநாதன் அவர்கள் எழுதிய திருக்குறள் விளக்கஉரை மற்றும் சுருக்கஉரை நூலை தலைவர் திரைப்பட இயக்குனர் வெ.சேகர், தலைமை கரண ஆசான் புலவர் அய்யா.மோகன் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் நூலாசிரியர் திருக்குறள் உரைநூல் வழங்கிச் சிறப்பித்தார்கள். (பொதுச்குழுக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. தீர்மான விவரங்கள் தனியாக கொடுக்கப்பட்டுள்ளது).

நன்றியுரை

நிறைவாக கூட்டமைப்பின் துணைப் பொதுச்செயலாளர் திரு ம.இராவணன் அவர்கள் நன்றி கூற நாட்டுப்பண்ணுடன் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.

19.09.2021 அன்று அரியலூரில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத் தீர்மானங்கள்

தீர்மானம்-1
கூட்டமைப்பின் ஆட்சிமன்றக்குழுத் தேர்தல் ஒப்புதல் பெறுதல்

2021 அக்டோபர் முதல் 2024 செப்படம்பர் வரையிலான மூன்றாண்டுகளுக்கான ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமை நிருவாகிகள், துணைத்தலைவர்கள், துணைப் பொதுச்செயலாளர்கள் பட்டியலைப் பொதுக்குழு ஏற்று, ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம்-2
மண்டல செயலாளர்கள் மற்றும் அமைப்புச் செயலாளர்கள் ஒப்புதல் பெறுதல்

ஆட்சிமன்றக் குழுவினரின் பணிகளில் ஒத்துழைப்பு வழங்கத் தேவையான மண்டலச் செயலாளர்கள் மற்றும் அமைப்புச்செயலாளர்கள் தேர்வு செய்து கொள்வதற்கு தலைமை நிருவாகிகளுக்கு அனுமதி வழங்கி, பொதுக்குழுவில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அமைப்புச்செயலாளர்கள் பட்டியல் இதழின் 4, 5 ஆம் பக்கங்களில் உள்ளது.

தீர்மானம்-3
வழிகாட்டுதல்குழு உறுப்பினர்கள் நியமனம் ஒப்புதல் பெறுதல்

ஆட்சிமன்றக் குழுவினால் நியமனம் செய்யப்பட்டுள்ள வழிகாட்டுதல் குழு உறுப்பினர்களாக அய்யா. பழ.நெடுமாறன் (சென்னை), தவத்திரு குன்றக்குடி அடிகளார் (குன்றக்குடி), தவத்திரு மருதாச்சல அடிகளார் (கோவை), தவத்திரு குமரகுருபர சுவாமிகள் (கோவை), தவத்திரு குருபழனி அடிகளார் (மதுராந்தகம்), முனைவர் பொற்கோ (சென்னை), திருமிகு. சைதை துரைசாமி (சென்னை), கவிஞர் செவ்வியன் (சென்னை), திருமிகு க.செங்குட்டுவன் (கரூர்), திருமதி புனிதா கணேசன் (தஞ்சை), முதுமுனைவர் பா.வளன்அரசு (நெல்லை), முதுமுனைவர் ச.பத்மநாபன் (கன்னியா குமரி), திருமிகு சி. இராசேந்திரன், ஐ.ஆர். எசு. (சென்னை), திருமிகு டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் (சென்னை), திருக்குறள் ப.தங்கராசு (கரூர்), தமிழாசிரியர் ஆ.நெடுஞ் சேரலாதன், (விருதுநகர்), வழக்கறிஞர் மீ.இரா.இரகுநாதன் (தத்தனூர்), முனைவர் கொ.வி.புகழேந்தி (அரியலூர்), திருமிகு ச.இராமன் சாத்தைய்யா (காரைக்குடி), புலவர் சுந்தரராசன் (கன்னியாகுமரி) புலவர் ஆறுமுகம் (மதுரை) திருமிகு த.ஞானசேகரன் (மேற்கு வங்க மாநிலம்) ஆகியோரும், நெறியாளாராக திருமிகு தமிழடியான் (சேலம்) அவர்களையும் ஏற்று, பொதுக்குழுவில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம்-4
அயல் மாநிலங்கள் மற்றும் அயல்நாடுகளின் பொறுப்பாளர்கள் நியமனம் ஒப்புதல் பெறுதல்

ஆட்சிமன்றக் குழுவினரால் நியமனம் செய்யப்பட்டுள்ள அயல் மாநிலங்கள் மற்றும் அயல்நாடுகளின் தலைவர்களாக கலைமாமணி வி.முத்து (புதுச்சேரி), திருமிகு கி.சு.இளங்கோவன் (கருநாடகம்) திருமிகு த.ஞானசேகரன் (மேற்கு வங்கம்), முனைவர் இராசமாணிக்கம் (தெலுங்கானா), திருமிகு செ.துரைசாமி (ஒடிசா), திருமிகு என்.வி. அசரப் (டெல்லி), திருமிகு ச.பெருமாள்சாமி (மராட்டியம் முனைவர் முனுசாமி (ஆந்திரா), திருமிகு மணி (கேரளா), டாக்டர் ஆர். நவீரார் (கொல்கொத்தா), திருமிகு சாந்திவாரித் தம்பி சாந்தலிங்கம் (இங்கிலாந்து), திருமிகு மா.உத்திராபதி (சிங்கப்பூர்), திருமிகு சங்கா சின்னைய்யா (மலேசியா), திருமதி சமந்தா செம்மலர், (செயின்ட் லுசியானா), செல்வி ஆ.பி.மினர்வா ஆட்லின் (ஜார்ஜியா) ஆகியோரின் நியமனத்தைப் பொதுக்குழு ஏற்று, ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அயல்மாநிலங்கள் மற்றும் அயல்நாடுகளின் தலைவர்கள் தங்கள் பகுதியில் நிருவாக வசதிக்காக செயலாளர் -1, பொருளாளர்-1, துணைத்தலைவர்கள்-2, துணைச்செயலாளர்கள்-2 தேர்வு செய்து தலைமையகத்திற்கு பட்டியல் அனுப்பும் படி கேட்டுக் கொள்ளப்பட்டது.