உலகத் திருக்குறள் கூட்டமைப்பின் தலைமை நிருவாகிகளுக்கான சிறப்புக் கூட்டம் கொரோனா பொதுமுடக்கத்திற்குப் பின்னர், திருவள்ளுவர் ஆண்டு 2052 பங்குனி 1 (14.03.2021) ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.00 மணிக்குத் தலைவர் இயக்குநர் வெ.சேகர் அவர்கள் தலைமையில் நீலாங்கரை, திருவள்ளுவர் வாழ்வியல் மன்றம் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் பொதுச்செயலாளர் குறள்செல்வர் ஆதிலிங்கம், பொருளாளர் கவிஞர் செவ்வியன், அமைப்புச் செயலாளர் புலவர் மு.கோ. ஏழுமலை, துணைத்தலைவர்கள் தமிழாசிரியர் ஆ.நெடுஞ் சேரலாதன், திரு.தென்னிலை இராம. கோவிந்தன், திரு தா.கோ.சம்பந்தம், துணைப்பொதுச்செயலாளர் திருக்குறள் செல்வன் ஆகியோர் கலந்துக் கொண்டனர். தமிழரிமா சம்பத் அவர்கள் தேர்தல் பணிக் காரணமாக கலந்துக் கொள்ள இயலாது என்பதைக் கைப்பேசி மூலம் தெரிவித்ததோடு, கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை ஏற்று செயல்படுவேன் என உறுதியளித்தார்.
கூட்டத்தில் பொதுச்செயலாளர் குறள்செல்வர் ஆதிலிங்கம் அவர்களால் கடந்த மூன்றாண்டு காலத்தில் (2018 சூன் முதல் 2021 பிப்ரவரி வரை) நடைபெற்ற கூட்டமைப்பின் செயல்பாடுகள் குறித்த சுருக்க அறிக்கை வழங்கப்பட்டது. தலைமை நிருவாகிகள் எழுப்பியக் கேள்விகளுக்கு உரிய விளக்கம் அளிக்கப்பட்ட பின், நிருவாக அறிக்கை ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
பின்னர், கூட்டமைப்பின் 2019 – 2020 ஆம் நிதியாண்டுக்கான (01.04.2019 முதல் 31.03.2020 வரை) தணிக்கையாளர் அறிக்கையினைப் பொருளாளர் கவிஞர் செவ்வியன் அவர்கள் உடல்நிலைக் குறைவு காரணமாக, பொதுச்செயலாளர் குறள்செல்வர் ஆதிலிங்கம் அவர்களால் வழங்கப்பட்டது. பங்கேற்பாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு உரிய விளக்கம் அளிக்கப்பட்ட பின், நிருவாக அறிக்கை ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
09.09.2018 அன்று கரூரில் நடைபெற்ற முதல் செயற்குழுக் கூட்டத்தில் கூட்டமைப்புக்கென ஓர் அறக்கட்டளையினைத் தொடங்கி, ஒவ்வொரு மாவட்ட அமைப்பும் தலா ரூபாய் ஓர் இலட்சம் என 50 இலட்சம் வைப்புநிதி திரட்டி, அதில் கிடைக்கும் வட்டியில் கூட்டமைப்பின் அடிப்படைச் செலவினங்களைச் செய்துக் கொள்ள வேண்டுமென பொருளாளர் கவிஞர் செவ்வியன் அவர்கள் முன்வைத்த ஆலோசனை- யினை ஏற்றுச் செயல்படுவது என ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன், மேற்படித் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த அறக்கட்டளையின் தலைவராக கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் புலவர் சி.பன்னீர் செல்வம் அவர்களும், 6 அறங்காவலர்களும் தேர்வு செய்யப்பட்டனர். அத்துடன், தலைமை நிருவாகிகள் குழு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, வைப்புநிதிச் சேர்க்கைப் பணியினைத் தொடங்கி வைத்தனர்.
ஆனால், ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் வைப்புநிதிச் சேர்க்கைப் பணியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. பொருளாதாரம் இல்லையெனில் கூட்டமைப்பின் பணிகள் முடங்கிவிடும் அபாயம் உள்ளது. ஆகவே, அறக்கட்டளையின் தலைவர் உடனடியாக அறங்காவலர் குழுவினரைக் கலந்து பேசி அறக்கட்டளை வைப்புநிதிச் சேர்க்கைப் பணியி னை வேகப்படுத்திட வேண்டுமெனவும் முன்னேற்ற அறிக்கையினை அடுத்து நடைபெறும் தலைமை நிருவாகிகள் (ஆட்சிமன்றக்குழுக்) கூட்டத்தில் எழுத்து மூலம் அறிக்கைச் செய்யவேண்டுமெனவும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
கூட்டமைப்பின் முதல் செயல்திட்டமாக, முதுமுனைவர் இளங்குமரனார் அவர்கள் வழியில், தமிழர் இல்லங்களில், திருமணம் உள்ளிட்ட குடும்ப நிகழ்வுகளைக் குறள்நெறி அடிப்படையில் நடத்துவதற்கு மாவட்டம் தோறும் கரண ஆசான்களுக்கான பயிற்சி வழங்க வேண்டுமெனவும், பொதுமக்களுக்கு அது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமெனவும் 02.12.2018 அன்று இராசபாளையத்தில் நடைபெற்ற இரண்டாவது செயற்குழுக் கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இப்பணியினை நடைமுறைப்படுத்த தலைமைக் கரண ஆசானாக புலவர் அய்யா.மோகன் அவர்களும், தென்மண்டலங்களின் கரண ஆசானாக தமிழாசிரியர் ஆ.நெடுஞ்சேரலாதன், மத்திய மண்டலங்களின் கரண ஆசானாக வழக்கறிஞர் தென்னிலை இராம. கோவிந்தன், வடக்கு மண்டலங்களின் கரண ஆசானாக குன்றத்தூர் திரு. குப்புசாமி ஆகியோர் தேர்வுச் செய்யப்பட்டனர். அத்துடன், தலைமை நிருவாகிகள் குழு மற்றும் தலைமைக் கரண ஆசான் இணைந்து, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, குறள்நெறிக் கரணஆசான் பயிற்சியினைத் தொடங்கி வைத்தனர்.அத்துடன் 2019 மார்ச் 30. மற்றும் 31 ஆம் நாட்களில் சென்னையில் மாவட்டத்திற்கு 2 பேர் தேர்வு செய்து மாவட்ட கரண ஆசான்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டது.
ஆனால், ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், கரண ஆசான் பயிற்சியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஆகவே, தலைமைக் கரண ஆசான் அவர்கள், மண்டல, மாவட்ட கரண ஆசான்களுடன் கலந்து பேசி, மாவட்டங்களில் குறள்நெறிக்கரண ஆசான் பயிற்சியினை வேகப்படுத்த வேண்டுமெனவும் முன்னேற்ற அறிக்கையினை அடுத்து நடைபெறும் தலைமை நிருவாகிகள் கூட்டத்தில் எழுத்து மூலம் வழங்க வேண்டுமெனவும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டமைப்பின் சார்பில் கன்னியாகுமரியில் நடைபெற்ற (14.05.2019) முதல் ஆண்டு விழா மற்றும் 2052 ஆம் திருவள்ளுவர் ஆண்டு விழாவிற்குப் பின்னர், ஆட்சிமன்றக்குழுவினரின் செயல்பாடின்மையால் மண்டல, மாவட்டப் பொறுப்பாளர்களுடன் தொடர்பு இல்லாத நிலை நீடித்து வருகிறது. மாவட்டங்களில் கூட்டமைப்பின் செயல்தட்டங்கள் எதுவும் நடைபெறாமல் முடங்கிய நிலையிலுள்ளது. அதனால் மண்டல, மாவட்டப் பொறுப்பாளர்களில் யார், யார் பொறுப்பாளர்களாக நீடிக்கிறார்கள் என்பதை அறிய முடியாத நிலை உள்ளது.
கூட்டமைப்பின் மண்டல, மாவட்டப் பொறுப்பாளர்களை உறுதிப்படுத்தாமல், அடுத்த செயற்குழுக்கூட்டம் நடத்த முடியாது என்பதாலும் மாவட்டங்களில் எந்தப் பணிகளும் நடைமுறைப்படுத்த முடியாது என்பதாலும் முடங்கிய நிலையிலுள்ள கூட்டமைப்பின் செயல்பாடுகளை முழுவீச்சில் முன்னெடுக்க, அனைத்துத் தலைமை நிருவாகிகளும் தங்களுக்குப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள மண்டல, மாவட்டப் பொறுப்பாளர்கள் தொடர்ந்து செயலாற்ற ஆயத்தமாக இருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்தி, கூட்டமைப்புப் பணிகளில் ஆர்வம் இல்லாதவர்களுக்கு மாற்றுப் பொறுப்பாளர்களைத் தேர்வு செய்து, (தலைவர் -1, செயலாளர் -1, பொருளாளர் -1, துணைத்தலைவர்கள் -2, (ஆண்-1,பெண்-1), துணைச்செயலாளர்கள் -2, (ஆண்-1,பெண்-1) என 7 பேர்) தலைமை நிருவாகிகள்க் கூட்டத்தில் எழுத்து மூலம் அறிக்கை வழங்கும் படி அறிவிப்புச் செய்யப்பட்டிருந்தது.
ஆனால், பொதுச்செயலாளர் மற்றும் அமைப்புச்செயலாளர் இருவர் தவிர மற்ற தலைமை நிருவாகிகள் எழுத்து மூலம் முழுமையான அறிக்கை அளிக்கவில்லை. ஒருமாத கால இடைவெளி வழங்கிய பின்னரும் மேற்படிப் பணியினைச் செயல்படுத்தாமல் இருப்பது ஏற்றுக் கொள்ளத் தக்கதல்ல. கூட்டமைப்புத் தொடங்கிய காலத்- திலிருந்தே ஒருசில ஆட்சிமன்றக்குழுவினர் தங்களுக்குப் பொறுப்பு வழங்கப்பட்ட மாவட்டங்களில் திட்டமிட்டப் பணிகளை நடைமுறைப்படுத்தாமல் இழுத்தடிக்கும் நிலைத் தொடர்கிறது. இதனால் கூட்டமைப்பின் பணிகள் தொடர்ந்து முடங்கிய நிலையிலுள்ளது.இந்நிலைத் தொடராமல் இருக்க ஆட்சிமன்றக்குழுவினர் விரைந்துச் செயலாற்ற வேண்டிய நிலை உள்ளது.
எனவே, தலைமை நிருவாகிகள் கூட்டமைப்பின் பணிகள் தொடர்ந்து விரைவாக நடைபெற 31.03.2021 – க்குள் தங்களுக்குப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள மண்டலங்கள் மற்றும் மாவட்டங்களின் பொறுப்பாளர்களை உறுதிபடுத்தி, புதுப்பித்தல் பட்டியலை ஆயத்தம் செய்து, தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டுமென அனைத்துத் தலைமை நிருவாகிகளையும் கேட்டு, ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உலகத் திருக்குறள் கூட்டமைப்பு, தமிழ்நாடு அரசுச் சங்கங்களின் சட்டவிதிமுறைகள் படி பதிவுச் செய்யப்பட்டுள்ளதால், மாவட்டப் பொறுப்பாளர்களைத் தேர்வு செய்யும்போது ஓர் உறுப்பு அமைப்பிற்கு ஒரு பொறுப்பாளர் என்ற அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டுமென சங்கப்பதிவு அலுவலகம் உறுதிபட தெரிவித்துள்ளது.
ஆகவே, 7 திருக்குறள் அமைப்புகள் இல்லாத மாவட்டங்களில் தேவையான புதிய திருக்குறள் அமைப்புகளை ஏற்படுத்தி, மாவட்டப் பொறுப்பு வழங்க வேண்டுமென ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. (இது சாத்தியமா என்னும் கேள்வி எழுவோர், விரும்பினால் திருவள்ளுவர் ஞானமன்றம் நிறுவனர் புலவர் சி-. பன்னீர்செல்வம் அவர்களிடம் ஆலோசனைப் பெற்றுக் கொள்ளலாம்).
தலைவர் – திரைப்பட இயக்குநர் வெ.சேகர்
கோவை மண்டலம் – கோவை, நீலகிரி மாவட்டங்கள் (மண்டல ஒருங்கிணைப்பாளர் -திரு.அன்வர்பாட்சா) சேலம் மண்டலம் – சேலம், ஈரோடு மாவட்டங்கள் (திரு.ஓட்டெக்சு இளங்கோவன்)
பொதுச்செயலாளர் – திருக்குறள்செல்வர் ஆதிலிங்கம் திருநெல்வேலி மண்டலம் – திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் (காவடியூரார்) தூத்துக்குடி மண்டலம் – தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்கள்(பேரா.கருத்தபாண்டி)
அமைப்புச் செயலாளர் கவிஞர் மு.கோ.ஏழுமலை
சென்னை மண்டலம் – தென் சென்னை, மத்திய சென்னை மாவட்டங்கள்(செந்தமிழ்ச்செல்வன்)
திருவள்ளூர் மண்டலம் – வட சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் (திரு.கொ.பா.இராமசாமி
ஒருங்கிணைப்பாளர் புலவர் சி.பன்னீர்செல்வம்
திருவண்ணாமலை மண்டலம் – திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்கள் (திரு.காமராசு)
கிருட்டிணகிரி மண்டலம் – கிருட்டிணகிரி, தருமபுரி மாவட்டங்கள் (திரு.மலர்வண்ணன்)
தலைமைக் கரண ஆசான் புலவர். அய்யாமோகன்,
விழுப்புரம் மண்டலம் – விழுப்புரம், கல்லக்குறிச்சி மாவட்டங்கள் (திரு.பார்த்தசாரதி)
நாமக்கல் மண்டலம் – நாமக்கல், பெரம்பலூர் மாவட்டங்கள் (திரு.செந்தில் முருகன்)
துணைத் தலைவர் திரு ஆ.நெடுஞ்சேரலாதன்,
விருதுநகர் மண்டலம் – விருதுநகர், இராமநாதபுரம் மாவட்டங்கள் (திரு.அன்பு ஆறுமுகம்)
சிவகங்கை மண்டலம் – சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்கள் (திருமதி சுவேதா சீவானந்தம்)
துணைத் தலைவர் – திரு.தென்னிலை இராம கோவிந்தன்
திருச்சி மண்டலம் – திருச்சி, கரூர் மாவட்டங்கள் (திரு.யோகா வையாபுரி)
தஞ்சை மண்டலம் – தஞ்சை, திருவாரூர் மாவட்டங்கள் (திரு. பனசை அரங்கன்)
துணைத் தலைவர் திரு தா.கோ.சம்பந்தம்
கடலூர் மண்டலம் – கடலூர், அரியலூர் மாவட்டங்கள் (திரு.இராவணன்)
நாகை மண்டலம் – நாகை, மயிலாடுதுறை மாவட்டங்கள் (திரு.முருகு அருணன்)
துணைப்பொதுச்செயலாளர் தமிழ் அரிமா. தா.சம்பத்
காஞ்சி மண்டலம் – காஞ்சி, செங்கல்பட்டு, மாவட்டங்கள் (திரு.குறள்அமுதன்)
வேலூர் மண்டலம் – வேலூர், இராணிப்பேட்டை மாவட்டங்கள் (திரு.தயாளன்)
துணைப்பொதுச்செயலாளர் திருக்குறள் செல்வன்
திண்டுக்கல் மண்டலம் – திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்கள் (திரு.தென்றல் சேகர்)
மதுரை மண்டலம் – மதுரை, தேனி மாவட்டங்கள் (புலவர் ஆறுமுகம்)
14.05.2019 அன்று கன்னியாகுமரியில் நடைபெற்ற முதாலண்டு விழாவிற்குப் பின்னர், கூட்டமைப்பின் சார்பாக களப்பணிகள் எதுவும் நடைபெறாத நிலையில், முடங்கிய நிலையிலுள்ள கூட்டமைப்பின் பணிகளை நெறிபடுத்துவது என ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி, 02.06.2018 அன்று தஞ்சை பாரத் கல்வி நிறுவனங்கள் வளாகத்தில் நடைபெற்றக் கூட்டமைப்பின் தொடக்கவிழா மாநாட்டில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள் முதல் 05.01.2020 அன்று மதுரை எழுமலை திருவள்ளுவர் கல்வி நிறுவனங்கள் வளாகத்தில் நடைபெற்றச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள் வரை, மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தாமல் உள்ள தீர்மானங்களை இனம் கண்டு, அனைத்துத் தலைமை நிருவாகிகளும் தங்களுக்குப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள மாவட்டங்களில் நடைமுறைப்படுத்திட மண்டல, மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு அறிவுறுத்திட வேண்டுமென ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
09.09.2018 அன்று கரூரில் நடைபெற்ற முதல் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானித்தபடி, ஒவ்வொரு மாவட்ட அமைப்பும் தலா ஓர் இலட்சம் புரவலர் வைப்புநிதி திரட்டும் வகையில், தலா 20 புரவலர்கள் பட்டியல் ஆயத்தம் செய்து தலைமையகத்திற்கு அனுப்ப வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. மேற்படி புரவலர் வைப்புநிதி திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கு தலைமை நிருவாகிகள் குழு அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டது.
அத்துடன், 16.03.2019 அன்று கரூரில் நடைபெற்றச் சிறப்புச் செயற்குழுக் கூட்டத்தில் (முதல் ஆண்டு விழா ஆலோசனைக் கூட்டத்தில்), ஒவ்வொரு மாவட்டமும் தலா 50,000/- ரூபாய் நன்கொடைப் பெறுவது எனவும் ரூபாய் 25,000/- தலைமையகச் செலவினங்களுக்கும், ரூபாய் 25,000/- மாவட்ட அமைப்புகளின் செலவினங்களுக்கும் பயன்படுத்திக் கொள்வது என தீர்மானிக்கப்பட்டு, அந்த கூட்டத்திலேயே மேற்படி நன்கொடைத் திரட்டுவதற்கான இரசீது புத்தகங்கள் வழங்கபட்டன. கூட்டத்தில் கலந்த கொள்ளாத மாவட்டப் பொறுப்பாளர்களுக்குக் கூரியர் மூலம் ரசீது புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
ஆனால், மேற்படிச் செயற்குழுக் கூட்டங்களில் தீர்மானித்தபடி, ஒரு சில தலைமை நிருவாகிகள் தங்களுக்குப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள மாவட்டங்களில் நன்கொடைச் சேர்க்கை மற்றும் புரவலர் வைப்புநிதி திட்டங்களை நடைமுறைபடுத்தவில்லை. ஏற்கெனவே திட்டமிட்டபடி பணிகளை நடைமுறைப்படுத்தவில்லை எனில் கூட்டமைப்பிற்கு அவப்பெயர் ஏற்பட்டுவிடும் எனக்
கருதி, அடிப்படைச் செலவினங்களுக்காக பொருளாளர் கவிஞர் செவ்வியன், பொதுச்செயலாளர் குறள்செல்வர் ஆதிலிங்கம், அமைப்புச்செயலாளர் புலவர் மு.கோ.ஏழுமலை ஆகியோரிடமிருந்து (பொருளாளர் கவிஞர் செவ்வியன் ரூபாய் 1,20,000+ 75,000= 1,95,500/-, பொதுச்செயலாளர் குறள்செல்வர் ஆதிலிங்கம் ரூபாய் 65,500+ 12,80,78= 1,93,578/-, அமைப்புச்செயலாளர் புலவர் மு.கோ.ஏழுமலை ரூபாய் ரூபாய் 52,000+ 30,926= 82,926/-) முன் கடன்கள் பெறப்பட்டுள்ளன.
கூட்டமைப்பின் பொருளாளர் கவிஞர் செவ்வியன், பொதுச்செயலாளர் குறள்செல்வர் ஆதிலிங்கம், அமைப்புச்செயலாளர் புலவர் மு.கோ.ஏழுமலை ஆகியோரிடமிருந்து பெறப்பட்ட முன்கடன்களைக் கூட்டமைப்பினால் திருப்பித்தர இயலாத நிலையில், மேற்படி முன்கடன்களை நன்கொடைகளாக கூட்டமைப்பிற்கு வழங்க, தலைமை நிருவாகிகள் குழுக் கேட்டுக் கொண்டது. தலைமை நிருவாகிகளின் வேண்டுகோளை ஏற்று, மேற்படிப் பொறுப்பாளர்கள் தாங்கள் வழங்கிய முன்கடன்களை கூட்டமைப்பிற்கு நன்கொடைகளாக வழங்க முன்வந்தனர்.
தலைமை நிருவாகிகளின் வேண்டுகோளை ஏற்று, பொருளாளர் கவிஞர் செவ்வியன் 1,95,500/- ரூபாயும், பொதுச்செயலாளர் குறள்செல்வர் ஆதிலிங்கம் 1,93,578/- ரூபாயும், அமைப்புச்செயலாளர் புலவர் மு.கோ.ஏழுமலை 82,926/- ரூபாயும் நன்கொடையாக வழங்க முன்வந்தமைக்குக் கூட்டமைப்பின் சார்பில் நன்றி தெரிவித்து ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
14.05.2019 தேதி கன்னியாகுமரியில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்ட முதலாண்டு மலர் அச்சிட்ட சிவகாசி திரு. சிவநாதபாபு அவர்களிடம் இன்னும் 250 விழா மலர்கள் நிலுவையிலுள்ளது. அவர்களுக்கு வழங்கவேண்டிய ரூபாய் 7,000/- நிலுவைத்தொகையினை வழங்கி நிலுவையிலுள்ள விழா மலர்களைப் பெறுவது என ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
14.05.2019 அன்று கன்னியாகுமரியில் நடைபெற்ற முதலாண்டு விழாவில் ஜிலீவீக்ஷீuளீளீuக்ஷீணீறீயீமீபீணீtவீஷீஸீ@. ஷீக்ஷீரீ என்னும் பெயரில் இணையதளம் உருவாக்கப்பட்டு, கரூர் திரு தங்கராசு அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. மேற்படி இணையதளம் உருவாக்கித் தந்த ஈக்காட்டுக்தாங்கல் இன்போடெக் நிறுவனத்திற்கு வழங்கவேண்டிய வடிவமைப்புக்கானக் கட்டணம் ரூபாய் 5,000/-செலுத்தி, இணையதளம் தொடர்ந்து இயங்க ஏற்பாடு செய்வது என ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தணிக்கையாளர் திரு.இராசரெத்தினம் அவர்களுக்கு 2019 -2020 ஆம் நிதியாண்டிற்கான தணிக்கைக் கட்டணம் ரூபாய் 10,000/- ம் (கூட்டமைப்புத் தணிக்கைக் கட்டணம் ரூபாய் 5,000/-, அறக்கட்டளைத் தணிக்கைக் கட்டணம் ரூபாய் 5,000/-) செலுத்தாமல் உள்ளதால் கூட்டமைப்பிற்கு வருமானவரி விலக்கு சான்றிதழ் பெற விண்ணப்பிக்க இயலாத நிலை தொடர்கிறது. ஆகவே, கூட்டமைப்பின் நாட்காட்டி விற்பனை வருவாயிலிருந்து தலைவர் வெ.சேகர் அவர்கள் செலுத்த வேண்டுமென என ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அத்துடன், கூட்டமைப்பிற்கு வருமான வரிவிலக்குச் சான்றிதழ் (80 நி, 12கி) பெறுவதற்கு விண்ணப்பம் செய்யவேண்டுமென ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
14.05.2019 அன்று கன்னியாகுமரியில் நடைபெறும் முதலாமாண்டு விழாவில் கூட்டமைப்பின் கொள்கை விளக்கக் கையேடு, குறள்நெறிக் கரண ஆசான் பயிற்சிக் கையேடு, உறுப்பு அமைப்பினர் கையேடு ஆகியவை வெளியிட வேண்டுமென கரூரில் 16.03.2019 அன்று நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. மேற்படி நூல்களை ஆயத்தம் செய்ய முறையே தலைவர் வெ.சேகர், தலைமைக் கரண ஆசான் புலவர் அய்யா.மோகன், ஒருங்கிணைப்பாளர் புலவர் சி.பன்னீர்செல்வம் ஆகியோருக்குப் பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனால் பொறுப்பு வழங்கப் பட்ட மேற்படி மூவரும் உரிய காலத்தில் பணிகளை முடிக்காத நிலையில் ஒரே ஒரு மாதிரி நூல் மட்டும் வெளியிடப் பட்டுள்ளது.
ஆகவே, மேற்படி செயற்குழுக் கூட்டத்தில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள படி தலைவர் கூட்டமைப்பின் கொள்கை விளக்கக் கையேட்டினையும், ஒருங்கிணைப்பாளர் உறுப்பு அமைப்பினர் கையேட்டினையும், தலைமைக் கரணஆசான் குறள்நெறிக் கரண ஆசான் புத்தகத்தையும், ஆயத்தம் செய்து, தலைமை அலுவலகத்திற்கு நகல் ஒன்று அனுப்பி வைக்கும் படி கேட்டு ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேற்படி நூல்களின் நகல்கள் தலைமையகத்தில் கிடைத்தவுடன் அவற்றை இறுதிப்படுத்துவதற்கான ஆய்வுக் கூட்டம் நடத்தப்படும்.
மேற்படி நூல்களை மதுரையில் உலகப்பொதுமறை திருக்குறளை திருவள்ளுவர் அரங்கேற்றம் செய்த நாளில் நடைபெறவுள்ள கூட்டமைப்பின் 2 ஆவது மாநில மாநாட்டில் வெளியிடுவது என ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டமைப்பின் பொருளாளர் கவிஞர் செவ்வியன் அவர்கள் வயது முதிர்வின் காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவினால் பொருளாளர் பொறுப்பினைத் தொடர்ந்து ஆற்ற இயலாத நிலையில் உள்ளதால் பதவி விலகல் விண்ணப்பம் கொடுத்துள்ளார். தலைமை நிருவாகிகளின் தீவிர ஆய்விற்குப் பின், பொருளாளர் கவிஞர் செவ்வியன் அவர்களின் உடல்நலன் கருதி, அவர்கள் கொடுத்துள்ள பதவி விலகல் விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்வது என ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கவிஞர் செவ்வியன் அவர்கள் கூட்டமைப்பினைத் தொடங்குவதற்கும், தொடர்ந்து கூட்டமைப்பு வளர்ச்சி பெறவும் ஆற்றியப் பணிகளுக்குக் கூட்டமைப்பின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்வது எனவும் கவிஞர் செவ்வியன் அவர்களின் ஒத்துழைப்புக் கூட்டமைப்பிற்குத் தேவைப்படுவதால், கூட்டமைப்பின் சிறப்புத் தலைவராகத் தேர்வு செய்வது எனவும் இத்தீர்மானத்தை அடுத்து நடைபெறும் செயற்குழுக் கூட்டத்தில் ஒப்புதல் பெற்றுக் கொள்வது எனவும் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டமைப்பின் பொருளாளாராகச் செயல்பட்டு வந்த கவிஞர் செவ்வியன் அவர்கள் வயது முதிர்வின் காரணமாக பதவி விலகல் கடிதம் கொடுத்துள்ளதைத் தலைமை நிருவாகிகள்குழு ஏற்றுக் கொண்டதால் ஏற்பட்டுள்ள காலி இடத்தை நிரப்ப புதிய பொருளாளர் தேர்வு செய்வது என ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி, தற்போது அமைப்புச் செயலாளராகச் செயல்பட்டு வரும் புலவர் மு.கோ.ஏழுமலை அவர்களை புதிய பொருளாளராகத் தேர்வு செய்து ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அடுத்து வரும் செயற்குழுக்கூட்டத்தில் புதிய பொருளாளர் தேர்வினை ஒப்புதல் பெற்றுக் கொள்வது என ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ட்டமைப்பின் முதல் செயற் குழுக் கூட்டம் – 09.09.2018 – கரூர்
ஆட்சிமன்றக் குழுக்கூட்டம் – 10.11.2018 – மதுராந்தகம்
மாநில அளவிலான கரணப்பயிற்சி முகாம் – 01-12-2018 – இராசபாளையம்
இரண்டாவது செயற் குழுக் கூட்டம் – 02-12-2018 – இராசபாளையம்
இரண்டாவது ஆட்சிமன்றக்குழுக் கூட்டம் – 24.02.2019 – திருச்சி
கூட்டமைப்பின் மூன்றாம் செயற் குழுக் கூட்டம் – 16.03.2019 – கரூர்
கரண ஆசான்கள் உருவாக்குவதற்கான கருத்தரங்கு – 30.03.2019 – 31.03.2019 – நீலாங்கரை
நான்காவது செயற் குழுக் கூட்டம் – 13.07.2019 – 14.07.2019 – கோவை
கூட்டமைப்பின் உறுப்பு அமைப்பு ஒவ்வொன்றும் ஆண்டுதோறும் ரூபாய் 100 புதுப்பித்தல் கட்டணம் செலுத்தி, கூட்டமைப்பின் உறுப்பு அமைப்பாகத் தொடர்வதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும் என கூட்டமைப்பின் சட்டவிதிகள் கூறுகின்றன.
ஆகவே, தலைமை நிருவாகிகளுக்குப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களிலும், கடந்த 2 ஆண்டுகளாக புதுப்பித்தல் கட்டணம் செலுத்தாத உறுப்பு அமைப்புகளிடம் புதுப்பித்தல் கட்டணம் பெறவும் இதுநாள்வரை கூட்டமைப்பின் உறுப்பு அமைப்பாக இணையாத திருக்குறள் அமைப்பினை உறுப்பு அமைப்பாக இணைக்கவும் தலைமை நிருவாகிகள் தங்கள் பொறுப்பு மாவட்ட அமைப்புகளை அறிவுறுத்த வேண்டுமென கேட்டு ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டமைப்பின் சார்பாக ஆண்டுதோறும் வெளியிடப்படும் நாள்காட்டியில் திருவள்ளுவர் ஆண்டு சேர்க்கப்படவில்லை. அத்துடன் நாள்காட்டியில் உள்ள செய்திகளை ஆட்சிமன்றக்குழுவினரில் ஒருசிலர் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆகவே, இனிவரும் காலங்களில் கூட்டமைப்பின் பெயரில் எவரும் தன்னிச்சையாக நாட்காட்டி வெளியிடக்கூடாது எனவும் கூட்டமைப்பின் சார்பில் நாட்காட்டிக் குழு ஒன்று அமைத்து அக்குழுவினால் மட்டுமே நாட்காட்டி வெளியிட வேண்டுமெனவும் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி அக்குழுவில் தலைவர் இயக்குநர் வெ.சேகர், பொதுச்செயலாளர் குறள்செல்வர் ஆதிலிங்கம், பொருளாளர் புலவர் மு.கோ.ஏழுமலை, தலைமைக் கரண ஆசான் புலவர் அய்யா.மோகன் மற்றும் துணைத் தலைவர்கள், திரு ஆ.நெடுஞ்சேரலாதன், திரு.தென்னிலை இராம. கோவிந்தன், துணைப்பொதுச்செயலாளர் திருக்குறள் செல்வன் ஆகியோர் இடம பெறவேண்டுமென ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கடந்த காலங்களில் கூட்டமைப்பின் வரவு செலவு கணக்குகள் வங்கிக் கணக்கு மூலமாக செயல்படுத்தாத நிலை தொடர்கிறது. ஆகவே, இனிவரும் காலங்களில் எந்த நிலையிலும் தனிநபர் வங்கிக் கணக்கில் கூட்டமைப்பின் கணக்குகள் பராமரிக்க கூடாது எனவும், கூட்டமைப்பின் வங்கி கணக்குகள் மூலம் மட்டுமே அனைத்து வரவு செலவுகளும் செய்யப்பட வேண்டுமெனவும் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டமைப்பின் செய்தி ஏடான திருக்குறள் அரசுத் திங்களிதழினைத் தொடர்ந்து வெளியிடுவதற்கு ஒவ்வொரு மாவட்டமும் தலா 25 ஆண்டு சந்தா தொகைப் பெற்றுத் தருவது என ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன் திருக்குறள் அரசுத் திங்களிதழின் ஆசிரியர் குழுவில் ஆட்சிமன்றக்குழுவினர் அனைவரும் இடம் பெறுவது எனவும் முதல் 6 மாதங்களுக்கான திருக்குறள் அரசுத் திங்களிதழ் வெளியிடும் பொறுப்பினை ஆட்சிமன்றக்குழுவினர் ஏற்றுக் கொள்வது எனவும் ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி, மார்ச் மாதம் துணைத் தலைவர். திரு தா.கோ.சம்பந்தம் அவர்களும், ஏப்ரல் மாதம் தலைவர் திரு வெ.சேகர் அவர்களும், மே மாதம் துணைத் தலைவர். திரு தென்னிலை இராம கோவிந்தன் அவர்களும், ஜுன் மாதம் ஒருங்கிணைப்பாளர். புலவர் சி.பன்னீர் செல்வம் அவர்களும், ஜுலை மாதம் பொருளாளர் புலவர் மு.கோ.ஏழுமலை அவர்களும், ஆகத்து மாதம் துணைப்பொதுச்செயலளார். திரு செல்வம் அவர்களும் பொறுப்பெடுத்துக் கொள்வது எனவும் மற்றஆட்சிமன்றக்குழுவினரும் தலா ஒரு மாதத்திற்கான இதழ்ச் செலவினை ஏற்றுக் கொள்ள முன் வர வேண்டுமெனவும் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தினமணிக்கு எதிரான நடவடிக்கை : பின்னர், திருக்குறளை மநுநூலுக்கு ஒப்பிட்டுத் திருக்குறளும் தடைச்செய்யப்படவேண்டியதே என கட்டுரை வெளியிட்ட தினமணி நாளிதழுக்கு எதிராக வழக்குத் தொடருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் வழக்கறிஞர் சிவகுமார் கலந்து கொண்டார். தினமணி நாளிதழுக்கு எதிராக 100 திருக்குறள் அமைப்புகள் வெவ்வேறுப் பகுதிகளில் வழக்குத் தொடருவது என தீர்மானிக்கபட்டது. அதற்கான வழிகாட்டுதலை வழக்கறிஞர் சிவகுமார் வழங்க ஒப்புக்கொண்டார்.
கூட்டத்தின் நிறைவாக புதிய பொருளாளராகப் பொறுப்பேற்றுள்ள புலவர் மு.கோ. ஏழுமலை அவர்கள் நன்றி தெரிவிக்க கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.
நன்றி!!
அன்புடன்
(குறள்செல்வர் ஆதிலிங்கம்)
லகத்திருக்குறள் கூட்டமைப்பின் பொதுக்குழுக் கூட்டம் திருவள்ளுவராண்டு 2052 புரட்டாசி மாதம் மூன்றாம் நாள் (09.09.2021) ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு அரியலூர் மாவட்டம் தத்தனூர் மீனாட்சி இராமசாமி கலை அறிவியல் கல்லூரியில் கூட்டமைப்பின் தலைவர் திரைப்பட இயக்குனர் வெ.சேகர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தத்தனூர் மீனாட்சி இராமசாமி கலை அறிவியல் கல்லூரி தாளாளர் முனைவர் மீ.இரா. இரகுநாதன் அவர்கள் முன்னிலை வகித்தார்.
கொரோனா பெருந்தொற்றினால் நடைமுறையில் இருந்த பொதுமுடக்கம் காரணமாக 2019-2020 ஆம் நிதியாண்டிற்கானப் பொதுக்குழுக் கூட்டம் நடத்த இயலாததால், 2019-2020 மற்றும் 2020-2021 ஆம் நிதியாண்டுகளுக்கான பொதுக்குழுக் கூட்டம் இணைத்து நடத்தப்பட்டது.
கூட்டத்தில் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர், பொருளாளர், (பொறுப்பு) ஒருங்கிணைப்பாளர், தலைமை கரண ஆசான், துணைத்தலைவர்கள், துணைப் பொதுச்செயலாளர்கள், மண்டல ஒருங்கிணைப்பாளர்கள், மாவட்டப் பொறுப்பாளர்கள், உறுப்பு அமைப்பினர் என 106 பேர் கலந்து கொண்டனர்.
தொடக்க நிகழ்வாக குறள்செல்வி பிச்சிஆதிலிங்கம் திருக்குறள் இறைவாழ்த்து பாடினர். குறள்அரசி மினர்வா ஆட்லின் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார். கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் புலவர் சி .பன்னீர்செல்வம் அனைவரையும் வரவேற்றார்.
பின்னர், கூட்டமைப்பின் மதிப்புறு தலைவர் முனைவர் இளங்குமரனார், நாகை மாவட்டத் தலைவர் திரு. முருகு அருணன், கிருட்டிணகிரி மண்டல ஒருங்கிணைப்பாளர் தமிழ்ச்செம்மல் நாகராசன், சாகித்ய அகாடமி விருது பெற்ற கி. இராசநாராயணன், திரைப்பட பாடலாசிரியர் புலவர் புலமைப்பித்தன், நவீனகவிஞர் பிரான்சிசு கிருபா, தந்தை பெரியாரின் தொண்டர் திருச்சி ஆனைமுத்து ஆகியோரின் மறைவுக்கு நினைவஞ்சலிச் செலுத்தப்பட்டது.
தலைவர் கூட்டமைப்பின் தலைவர் திரைப்பட இயக்குனர் வெ.சேகர் தலைமை உரையாற்றினார்.
பொதுச்செயலாளர் குறள்செல்வர் ஆதிலிங்கம் 2018 -2019, 2019 -2020, 2020 -2021 ஆகிய நிதியாண்டுகளுக்கான நிருவாக அறிக்கை வாசித்து வழங்கினார். அறிக்கைத் தொடர்பாக பொதுக்குழு உறுப்பினர்கள் எழுப்பிய வினாக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்ட பின் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
பொருளாளர்,(பொறுப்பு) மு.கோ.ஏழுமலை 2019 -2020, 2020 – 2021 ஆகிய நிதியாண்டுகளுக்கான தணிக்கையாளர் அறிக்கையினை வாசித்து வழங்கினார். தணிக்கையாளர் அறிக்கைத் தொடர்பாக பொதுக்குழு உறுப்பினர்கள் எழுப்பிய வினாக்களுக்கு, பொருளாளரால் விளக்கம் அளிக்கபட்ட பின் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
பின்னர், தத்தனூர் மீனாட்சி இராமசாமி கலை அறிவியல் கல்லூரி தாளாளர் முனைவர் மீ.இரா. இரகுநாதன் அவர்கள் முன்னிலையில் 2021 அக்டோபர் முதல் 2014 செப்டம்பர் ஆண்டுகளுக்கான ஆட்சிமன்றக்குழுத் தேர்தல் நடைபெற்றது. கூட்டமைப்பின் தலைவராக திரைப்பட இயக்குனர் வெ.சேகர், பொதுச் செயலாளராக குறள்செல்வர் ஆதிலிங்கம், பொருளாளராக மு.கோ.ஏழுமலை, ஒருங் கிணைப்பாளராக புலவர் சி. பன்னீர் செல்வம், தலைமை கரண ஆசானாக புலவர் அய்யா.மோகன் ஆகியோரும், துணைத்தலைவர்களாக தென்னிலை இராம.கோவிந்தன் (கரூர்), திருமிகு தா.கோ. சம்பந்தம் (கடலூர்), தமிழரிமா தா.சம்பத் (திருக்கோவிலூர்), திருக்குறள் அ.பெருமாள் (மதுரை எழுமலை), முனைவர் மு.க.அன்வர்பாட்சா (கோவை), பேராசிரியர் க.கருத்தபாண்டி (கோவில்பட்டி) ஆகியோரும் துணைப் பொதுச்செயலாளர்களாக திருமிகு ம.இராவணன் (அரியலூர்), தென்றல் ஆ.சேகர் (உடுமலைப்பேட்டை) திருமிகு அன்புஆறுமுகம் (சாத்தூர்), ஓட்டெச்சு மா.அ இளங்கோவன் (சேலம்), திருமிகு காசி.சாந்தகுமார் (கன்னியாகுமரி), திருமிகு தயாளன் (இராணிப்பேட்டை) ஆகியோரும் ஒருமனதாகத் தேர்வுச் செய்யப்பட்டனர்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆட்சிமன்றக்குழுவினர் அனைவரையும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு பொதுச் செயலாளர் குறள்செல்வர் ஆதிலிங்கம் அறிமுகம் செய்து வைத்தார். தலைவர் இயக்குநர் வெ.சேகர் அனைத்துப் பொறுப் பாளர்களுக்கும் கதராடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரும் பொதுக்குழு உறுப்பினர் முன்னிலையில் கூட்டமைப்பின் வளர்ச்சிக்கு தன்னலம் கருதாது உழைப்போம் என உறுதிமொழி எடுத்து 2021 அக்டோபர் முதல் 2024 செப்டம்பர் வரையிலான மூன்றாண்டுகளுக்கான தலைமையக நிருவாகிகளாகப் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
தத்தனூர் மீனாட்சி இராமசாமி கலை அறிவியல் கல்லூரி தாளாளர் முனைவர் மீ.இரா. இரகுநாதன் அவர்கள் எழுதிய திருக்குறள் விளக்கஉரை மற்றும் சுருக்கஉரை நூலை தலைவர் திரைப்பட இயக்குனர் வெ.சேகர், தலைமை கரண ஆசான் புலவர் அய்யா.மோகன் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் நூலாசிரியர் திருக்குறள் உரைநூல் வழங்கிச் சிறப்பித்தார்கள். (பொதுச்குழுக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. தீர்மான விவரங்கள் தனியாக கொடுக்கப்பட்டுள்ளது).
நிறைவாக கூட்டமைப்பின் துணைப் பொதுச்செயலாளர் திரு ம.இராவணன் அவர்கள் நன்றி கூற நாட்டுப்பண்ணுடன் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.
2021 அக்டோபர் முதல் 2024 செப்படம்பர் வரையிலான மூன்றாண்டுகளுக்கான ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமை நிருவாகிகள், துணைத்தலைவர்கள், துணைப் பொதுச்செயலாளர்கள் பட்டியலைப் பொதுக்குழு ஏற்று, ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆட்சிமன்றக் குழுவினரின் பணிகளில் ஒத்துழைப்பு வழங்கத் தேவையான மண்டலச் செயலாளர்கள் மற்றும் அமைப்புச்செயலாளர்கள் தேர்வு செய்து கொள்வதற்கு தலைமை நிருவாகிகளுக்கு அனுமதி வழங்கி, பொதுக்குழுவில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அமைப்புச்செயலாளர்கள் பட்டியல் இதழின் 4, 5 ஆம் பக்கங்களில் உள்ளது.
ஆட்சிமன்றக் குழுவினால் நியமனம் செய்யப்பட்டுள்ள வழிகாட்டுதல் குழு உறுப்பினர்களாக அய்யா. பழ.நெடுமாறன் (சென்னை), தவத்திரு குன்றக்குடி அடிகளார் (குன்றக்குடி), தவத்திரு மருதாச்சல அடிகளார் (கோவை), தவத்திரு குமரகுருபர சுவாமிகள் (கோவை), தவத்திரு குருபழனி அடிகளார் (மதுராந்தகம்), முனைவர் பொற்கோ (சென்னை), திருமிகு. சைதை துரைசாமி (சென்னை), கவிஞர் செவ்வியன் (சென்னை), திருமிகு க.செங்குட்டுவன் (கரூர்), திருமதி புனிதா கணேசன் (தஞ்சை), முதுமுனைவர் பா.வளன்அரசு (நெல்லை), முதுமுனைவர் ச.பத்மநாபன் (கன்னியா குமரி), திருமிகு சி. இராசேந்திரன், ஐ.ஆர். எசு. (சென்னை), திருமிகு டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் (சென்னை), திருக்குறள் ப.தங்கராசு (கரூர்), தமிழாசிரியர் ஆ.நெடுஞ் சேரலாதன், (விருதுநகர்), வழக்கறிஞர் மீ.இரா.இரகுநாதன் (தத்தனூர்), முனைவர் கொ.வி.புகழேந்தி (அரியலூர்), திருமிகு ச.இராமன் சாத்தைய்யா (காரைக்குடி), புலவர் சுந்தரராசன் (கன்னியாகுமரி) புலவர் ஆறுமுகம் (மதுரை) திருமிகு த.ஞானசேகரன் (மேற்கு வங்க மாநிலம்) ஆகியோரும், நெறியாளாராக திருமிகு தமிழடியான் (சேலம்) அவர்களையும் ஏற்று, பொதுக்குழுவில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆட்சிமன்றக் குழுவினரால் நியமனம் செய்யப்பட்டுள்ள அயல் மாநிலங்கள் மற்றும் அயல்நாடுகளின் தலைவர்களாக கலைமாமணி வி.முத்து (புதுச்சேரி), திருமிகு கி.சு.இளங்கோவன் (கருநாடகம்) திருமிகு த.ஞானசேகரன் (மேற்கு வங்கம்), முனைவர் இராசமாணிக்கம் (தெலுங்கானா), திருமிகு செ.துரைசாமி (ஒடிசா), திருமிகு என்.வி. அசரப் (டெல்லி), திருமிகு ச.பெருமாள்சாமி (மராட்டியம் முனைவர் முனுசாமி (ஆந்திரா), திருமிகு மணி (கேரளா), டாக்டர் ஆர். நவீரார் (கொல்கொத்தா), திருமிகு சாந்திவாரித் தம்பி சாந்தலிங்கம் (இங்கிலாந்து), திருமிகு மா.உத்திராபதி (சிங்கப்பூர்), திருமிகு சங்கா சின்னைய்யா (மலேசியா), திருமதி சமந்தா செம்மலர், (செயின்ட் லுசியானா), செல்வி ஆ.பி.மினர்வா ஆட்லின் (ஜார்ஜியா) ஆகியோரின் நியமனத்தைப் பொதுக்குழு ஏற்று, ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அயல்மாநிலங்கள் மற்றும் அயல்நாடுகளின் தலைவர்கள் தங்கள் பகுதியில் நிருவாக வசதிக்காக செயலாளர் -1, பொருளாளர்-1, துணைத்தலைவர்கள்-2, துணைச்செயலாளர்கள்-2 தேர்வு செய்து தலைமையகத்திற்கு பட்டியல் அனுப்பும் படி கேட்டுக் கொள்ளப்பட்டது.