உலகத் திருக்குறள் கூட்டமைப்பு

உலகத் திருக்குறள் கூட்டமைப்பு

வாழ்க்கை நெறிக்கூட்டம்

வாராந்திர திருக்குறள் வாழ்வியல் நெறிக்கூட்டம்

(குடும்ப நிகழ்வுகளை தமிழ் மரபுப்படி திருக்குறள் வழியில் நடத்திட விழிப்புணர்வுக் கூட்டம் ஏற்பாடு செய்யும் திருக்குறள் அமைப்புகளுக்கான மாதிரி வழிகாட்டிக் கையேடு)

கூட்ட நிகழ்வு :

திருக்குறள் இசைப் பாடல்கள்: கூட்டத் தொடக்கம் என்பதை நினைவுபடுத்தும் வகையில்15 நிமிடங்களுக்கு முன் பாடகர்குழுத் திருக்குறள் இசைப்பாடல்கள் பாடவேண்டும்.

தலைமை: கூட்டம் நடத்தும் திருக்குறள் அமைப்பின் தலைவர்/மூத்த துணைத்தலைவர்.

முன்னிலை: துணைத் தலைவர்கள், துணைச்செயலாளர்கள், கணக்கர்கள்

தமிழ்த்தாய் வாழ்த்து: பாடகர்க்குழு: (அவையோர் எழுந்து நின்று பாடகர்க்குழுவுடன் பாடலாம்).

உடல் ஊக்கப் பயிற்சி: குறள்நெறி ஆசான்/துணை ஆசான் (எளிய உடற்பயிற்சி)

அவையோரின் பன்முகத்திறன் அரங்கம்: ஆடல், பாடல், குறுநாடகம், கவிதை, நகைச்சுவை உள்ளிட்ட பன்முகத்திறமைகளை வெளிப்படுத்த ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.

சிறப்புப்பாடல்: பாடகர்க் குழு. (அவையோர் அமர்ந்து கொள்ளலாம்).

வாரம் ஒர் அறிவியல் செய்தி: அறிவியல்செய்தி வழங்குபவரை முன்னேற்பாடு செய்தல் வேண்டும்.

சித்த மருத்துவக் குறிப்பு: சித்தமருத்துவக் குறிப்பு வழங்குபவரை முன்னேற்பாடு செய்தல் வேண்டும்.

அவையோரின் அனுபவப் பகிர்வு: ஒரு மாணவர், ஒரு மகளிர், ஒர் ஆடவர். (கடந்த வாரம் அவையோர் எடுத்துக்கொண்ட திருக்குறள் வாழ்வியல் செய்தியைப் பின்பற்றியதன் மூலம் தாங்கள் பெற்ற அனுபவங்களை பகிர்தல்.

திருக்குறள் இறைவணக்கப்பாடல்: அவையோர் எழுந்து நின்று பாடகர்க் குழுவுடன் பாடலாம்.

வரவேற்புரை: துணைத்தலைவர்களில் ஒருவர். (வாரம் ஒரு துணைத்தலைவர்)

கூட்ட அறிமுகவுரை: கூட்டத்தின் தலைவர்.

கடந்த வாரத்திற்கான செயல் அறிக்கை: செயலாளர்/மூத்தத் துணைச்செயலாளர்.

வாராந்திர வரவு செலவு அறிக்கை : பொருளாளர்/மூத்த கணக்கர்.

சிறப்புப்பாடல்: பாடகர்க் குழு (அவையோர் அமர்ந்து கொள்ளலாம்).

பிறந்தநாள், திருமணநாள் மற்றும் சிறப்பு நிகழ்வுகளைப் போற்றுதல்: குறள்நெறிஆசான்/துணைஆசான். இந்தவாரம் விழாக் கொண்டாடும் கதாநாயகர்களை அவைமுன்னே அழைத்து அவையோரைப் பார்த்து வணங்கி நிற்கச் செய்ய வேண்டும். அப்போது பாடகர்குழு வாழ்த்துப் பாடல் படிப்பர். பாடல் முடிந்தவுடன் அவையோர் எழுந்து நின்று கைகளை உயர்த்தி விழாநாயகர்களை 3 முறை வாழ்க! வாழ்க!! வாழ்க!!! என வாழ்த்துதல் வேண்டும்.

அவையோர் திருவள்ளுவர் சிலைக்கு/ படத்திற்கு மலர் தூவி திருக்குறள் முற்றோதல் செய்தல்: அவையோர் வாழ்த்து முடிந்தவுடன் விழாநாயகர்களும், அவையோரும் ஒவ்வொருவராக திருவள்ளுவர் சிலை/படம் முன்பு வந்துதலா ஒரு திருக்குறள் சொல்லி வணங்குதல் வேண்டும். அப்போது அங்கு வைத்திருக்கும் நன்கொடைப் பெட்டியில் திருவள்ளுவர் கூறும் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும்விதமாக 322 குறள் படி தங்களால் இயன்ற நன்கொடையைச் செலுத்தலாம். அவையோர் முற்றோதல் செய்து திரும்பும்போது அங்கு வைக்கபட்டிருக்கும் அடுத்த வாரத்திற்கான வாழ்வியல் திருக்குறள் செய்தி அட்டை ஒன்றை எடுத்து கொள்ள வேண்டும்.

கொள்கைப்பாடல்: திருவள்ளுவரே நம் பேராசான், அவையோர் எழுந்து நிற்க வேண்டும்.

திருக்குறள் வாசித்தல்: ஆண்-1, பெண்-1 என இருவர் – அந்தவாரத் திருக்குறள் செய்திக்கான அதிகாரத்தில் தலா 5 குறள்கள் வீதம் படித்தல்.

திருக்குறள் செய்தி: மேலே வாசிக்கப்பட்ட திருக்குறள்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் சிறப்பு அழைப்பாளர் திருக்குறள் செய்தி வழங்குவார்.

மனஓர்மைப் பயிற்சி: குறள்நெறிஆசான் வழிநடத்த – அவையோர் தவநிலையில் அமர்ந்து அந்த வாரத்தில் தாங்கள் நிறைவேற்றவேண்டிய ஒரு செயலை மனதில் கொண்டு வந்து (அதிகாரம் 27- தவம்) தீர்வுகாண மனதை  ஒருநிலைப்படுத்தி  சிந்தித்தல் வேண்டும்.

சிறப்புப்பாடல்: பாடகர்க் குழுவுடன் சேர்ந்து அவையோர் எழுந்து நின்று பாடல் படிக்கவேண்டும்.

பொது அறிவிப்பு: குறள்நெறி ஆசான். (தலைமை அலுவலகச் செய்தி, மாவட்டங்கள் செய்தி, உறுப்பு அமைப்பினர் செய்தி மற்றும் முக்கிய அறிவிப்புகளை குறள்நெறிஆசான் அறிவித்தல் வேண்டும்.

ஊக்கப்பரிசு வழங்குதல்: பன்முகத்திறன் அரங்கில் கலந்து கொண்டோருக்கு ஊக்கப்பரிசு வழங்கிச் சிறப்பித்தல் வேண்டும்.

நன்றியுரை: துணைக் குறள்நெறி ஆசான்.

தேசிய கீதம்: அவையோர் எழுந்து நின்று தேசியகீதம் பாடவேண்டும்.

திருவள்ளுவர் கூறும் பொருள் வைப்புழி: 226 குறள் படி தேனீர்/சிற்றுண்டி வழங்குதல்.