1. மாணவர்கள், இளைஞர்கள், மகளிர், ஆடவர் என அனைவருக்கும் திருக்குறள் வாழ்வியல் பயிற்சி வழங்கும் வகையில் ஊர்தோறும் திருக்குறள் பள்ளிகள் அமைத்தல்.
2. திருக்குறள் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்குதற்கென மாவட்டதோறும் திருக்குறள் பயிற்சிக்
கல்லூரிகள் அமைத்தல்.
3. திருக்குறள் ஆசிரியர்களும், பொதுமக்களும் ஆய்வுகள் மேற்கொள்ள அனைத்துத் திருக்குறள் பயிற்சிக் கல்லூரிகளையும் ஒருங்கிணைத்து திருக்குறள் சித்தாந்தப் பல்கலைக்கழகம் அமைத்தல். திருக்குறள் ஆசிரியர்களும், பொதுமக்களும் ஆய்வுகள் மேற்கொள்ள இப்பல்கலைக்கழகத்தில் வழிவகை செய்யப்படும்.
4. தமிழ்மரபுப்படி திருக்குறள் நெறியில் குடும்ப விழாக்களை நடத்த 1330 தன்னார்வலர்களுக்குப் பயிற்சி வழங்கி அரங்கேற்றம் செய்யப்படும்.
5. உலகெங்கும் திருக்குறள் பணியாற்றி மறைந்துள்ள சான்றோர்களுக்கு நினைவு மண்டபம் ஏற்படுத்தப்படும்.
6. திருக்குறள் கரண ஆசான்களுக்கானப் பயிற்சி வழங்கி திருக்குறளை வாழ்வியலாக்கத் திட்டங்கள் வகுத்துச் செயல்படுதல்.
7. குடும்ப நிகழ்வுகளை தமிழ்மரபுப் படி திருக்குறள் அடிப்படையில் நடத்துவதன் தேவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
8. தமிழ் பண்பாட்டைப் பாதுகாத்து வரும் ஊர்கள் மற்றும் குடும்பங்களின் வரலாற்றை தொகுத்து வெளியி டுவதன் தேவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.