திருவள்ளுவர் ஆண்டு 2055, தைத் திங்கள் 14 ஆம் நாள் (28.01.2024) ஞாயிற்றுக்கிழமை அன்று தில்லை நகர், திருச்சி. கி. ஆ. பெ விசுவநாதம் தொடக்கப்பள்ளியில் உலகத் திருக்குறள் கூட்டமைப்பின் தலைமை நிருவாகிகள் தேர்வு பதவி ஏற்பு விழா மற்றும் கூட்டமைப்பின் ஐந்தாவது பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது . 2024-2025, 2025-2026 ஆகிய இரண்டு நிதியாண்டுகளுக்கான தலைமை நிருவாகிகள் தேர்தல் காலை 10,30 மணிக்கு நடைபெற்றது. தேர்தல் அலுவலராக திருச்சி மாவட்ட மைய நூலக வாசகர் வட்டத் தலைவர் திருமிகு வீ. கோவிந்தசாமி அவர்களும், துணைத் தேர்தல் அலுவலராக திருச்சி நேசினல் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் மாணிக்கம் அவர்களும், தலைமை நிருவாகிகள் மற்றும் தலைமைத் துறை இயக்குநர்களாக போட்டியிடுவோரிடமிருந்து விருப்ப மனுக்கள் பெற்றுக் கொண்டனர்.
அனைத்து தலைமை நிருவாகிகள் பொறுப்புகளுக்கும் தலா ஒருவர் மட்டுமே விருப்பமனு தாக்கல் செய்திருந்தனர். ஆகவே விருப்பமனு தாக்கல் செய்திருந்த அனைவரையும் தலைமை நிருவாகிகளாகவும், துறை இயக்குநர்களாகவும் தேர்வு செய்யபட்டதாக தேர்தல் அலுவலர்கள் அறிவித்தனர். அதன்படி
கூட்டமைப்பு மற்றும் அறக்கட்டளைப் பொதுச்செயலாளராக குறள்செல்வர் பேராசிரியர் தங்க. ஆதிலிங்கம். (சென்னை மாவட்டம்) கூட்டமைப்புத் தலைவராக அரிமா மு. ஞானமூர்த்தி (கடலூர் மாவட்டம்) அறக்கட்டளைத் தலைவராக தமிழரிமா தா. சம்பத் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) கூட்டமைப்புப் பொருளாளராக நல்லாசிரியர் பெ. சௌந்தரராசன் (அரியலூர் மாவட்டம்) அறக்கட்டளைப் பொருளாளராக திருமிகு ப. முத்துச்செல்வன் (தூத்துக்குடி மாவட்டம்) தலைமை கரண ஆசானாக தென்னிலை இராம. கோவிந்தன் ஆகியோர்களை தேர்தல் அலுவலர்கள் அறிவித்தனர்.
துணைத் தலைவர்களாக திருக்குறள். அ. பெருமாள், எழுமலை (மதுரை மாவட்டம்), பேராசிரியர் க. கருத்தபாண்டி, (தூத்துக்குடி மாவட்டம்) துணைப்பொதுச் செயலாளர்களாக திருமிகு அருணாச்சலம் (நாமக்கல் மாவட்டம்) பொறியாளர் கோ.கார்த்திக்கேயன் (தஞ்சாவூர்- மாவட்டம்) பேராசிரியர் ம. இளையராசா (கோவை மாவட்டம்) திருமிகு. து.இராமேசு (மத்திய சென்னை மாவட்டம்) ஆகியோர்களை தேர்தல் அலுவலர்கள் அறிவித்தனர்.
துறை இயக்குநர்களாக முனைவர் க. சின்னத்துரை (அரியலூர் மாவட்டம்) திருமிகு. எசு.வி.குமார் (மத்திய சென்னை மாவட்டம்) டாக்டர். சுரேசுபாலகிருட்டிணன் (வட சென்னை மாவட்டம்) திருமிகு. சீனு. பழமலை (கடலூர் மாவட்டம்) திருமிகு நீ.த. பழனிவேல் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) ஆகியோர் அறிவிக்கப்ட்டனர். ஓவியத்துறை இயக்குநராக திருமிகு. எசு.வி.குமார், ஓவியத்துறை துணை இயக்குநராக சேலம் கிருஷ்ணமணி, திருமிகு கனகராஜ கங்கன், கோவை மதிநிறைச் செல்வன் ஆகியோர் அறிமுகப் படுத்தபட்டனர்.
அத்துடன் கடலூர் மாவட்ட நிருவாகிகளை கூட்டமைப்புத் தலைவராக அரிமா மு. ஞானமூர்த்தி அறிமுகப் படுத்தினார். திருவண்ணாமலை, விழுப்புரம், கல்லக்குறிச்சி மாவட்டங்களின் நிருவாகிகளை அறக்கட்டளைத் தலைவராக தமிழரிமா தா. சம்பத் அறிமுகப் படுத்தினார்.
அரியலூர், பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களின் நிருவாகிகளை கூட்டமைப்பின் பொருளாளர் நல்லாசிரியர் பெ. சௌந்தரராசன் அறிமுகப் படுத்தினார். மதுரை மாவட்ட நிருவாகிகளை துணைத் தலைவர் திருக்குறள். எழுமலை அ. பெருமாள் அறிமுகப் படுத்தினார்.
தஞ்சை மாவட்ட நிருவாகிகளை துணைப்பொதுச் செயலாளர் பொறியாளர் கோ.கார்த்திக்கேயன் அறிமுகப் படுத்தினார்.
சென்னை மாவட்ட நிருவாகிகளை மாவட்டத் தலைவர் திருமிகு கோ. வெங்கடேசன் அறிமுகப் படுத்தினார்.
மகளிரணி மாவட்ட நிருவாகிகளை மகளிரணி தலைமை ஒருங்கிணைப்பாளர் குறள்செல்வி பிச்சி ஆதிலிங்கம் அறிமுகப் படுத்தினார்.நிருவாகிகளாகத் தேர்ந்தெடுக்கபட்ட அனைவருக்கும் தேர்தல் அலுவலகைள் சால்வை அணிவித்து பதவி பிரமாணம் செய்து வைத்தனர்.
பின்னர் பொதுச்செயலாளர் குறள்செல்வர் பேராசிரியர் தங்க. ஆதிலிங்கம். உறுதி மொழி வாசிக்க அனைத்துப் பொறுப்பார்களும் எழுந்து நின்று உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
புதியப் பொறுப்பாளர்கள் சார்பாக கூட்டமைப்புத் தலைவராக அரிமா மு. ஞானமூர்த்தி ஏற்புரையின் போது முன்னாள் நிருவாகிகள் அனைவரையும் நினைவு கூர்ந்து நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
பின்னர் கூட்டமைப்புத் தலைவராகப் பொறுப்பேற்று கொண்ட அரிமா மு. ஞானமூர்த்தி தலைமையில் ஐந்தாவது பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. மகளிரணி தலைமை ஒருங்கிணைப்பாளர் குறள்செல்வி பிச்சி ஆதிலிங்கம் திருக்குறள் கடவுள் வாழ்த்து பாடினார்.
பொதுச்செயலாளராக குறள்செல்வர் பேராசிரியர் தங்க. ஆதிலிங்கம். வரவேற்புரை ஆற்றினார். அறக்கட்டளைத் தலைவர் தமிழரிமா தா. சம்பத் 2023-2024 ஆம் ஆண்டுக்கான அறக்கட்டளை வரவு செலவு அறிக்கையினை வாசித்து வழங்கி ஒப்புதல் பெற்றார்.
கூட்டமைப்புப் பொருளாளராக நல்லாசிரியர் பெ. சௌந்தரராசன் 2024-2025 ஆம் ஆண்டுக்கான உத்தேச வரவு செலவு அறிக்கையினை வாசித்து ஒப்புதல் பெற்றார்.
அறக்கட்டளைப் பொருளாளராக திருமிகு ப. முத்துச்செல்வன் 2024-2025 ஆம் ஆண்டுக்கான உத்தேச வரவு செலவு அறிக்கையினை வாசித்து ஒப்புதல் பெற்றார்.
தலைமை கரண ஆசானாக தென்னிலை இராம. கோவிந்தன் கூட்டமைப்பின் சார்பாக முன்னெடுக்கப்டும் கரண ஆசான் திட்டத்தின் தேவை குறித்து விளக்கினார். கொடியின் சிவப்பு நிறம் அறத்துபாலின் அடையாளமாகவும் பச்சை நிறம் பொருள் அதிகாரத்தின் அடையாளமாகவும், மஞ்சள் நிறம் மங்களகரமான இன்பத்துப் பாலின் அடையாளமாகவும் திருவள்ளுவர் திருவுருவத்தின் பின்புறம் அமைந்துள்ள நீலநிறம் தமிழ் இனத்தின் அடையாளமாகவும் அமைக்கபட்டுள்ளது என விளக்கினார்.
அத்துடன், துறை இயக்குநர்கள் 2024 பிப்ரவரி மாதம் இறுதிக்குள் தாங்கள் தேர்ந்தெடுத்துள்ளத் துறைத் தொடர்பாக அடுத்த ஓராண்டுக்கான உத்தேசச் செயல்திட்டம் வழங்க வேண்டும் எனவும் மாவட்ட வட்டார நிருவாகிகள் மற்றும் கிளை அமைப்பினரின் முதற்கட்டபணி கூட்டமைப்பு வகுத்து வழங்கியுள்ள 10 அம்சத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியது ஆகும் எனவும் கரண ஆசான்கள் பயிற்சி வழங்குவதற்கு தமிழ்நாடு ஐந்து அல்லது ஆறு மண்டலங்களாக பிரிக்கபட்டு ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு கரண ஆசான் நியமித்து கரண ஆசான் பயிற்சியினை விரிவு படுத்தபடும் எனவும் தெரிவித்தார்.
அறக்கட்டளைத் தலைவர் தமிழரிமா தா. சம்பத் வழிகாட்டுதலின் படி துணைத்தலைவர்கள் திருக்குறள். அ. பெருமாள், பேராசிரியர் க. கருத்தபாண்டி, பொறியாளர் கோ.கார்த்திக்கேயன் திருமிகு. து.இராமேசு.
துறை இயக்குநர் டாக்டர். சுரேசுபாலகிருட்டிணன் மற்றும் மாவட்ட நிருவாகிகள் 25 தீர்மானங்கள் வாசித்து நிறைவேற்றினார். பேராசிரியர் க. கருத்தபாண்டி நன்றி உரையாற்றினார்.
நிறைவாக குறள்செல்வி பிச்சி ஆதிலிங்கம் திருக்குறள் பண் பாட கூட்டமைப்பின் ஐந்தாவது பொதுக்குழுக் கூட்டம் இனிதே நிறைவுற்றது.
கூட்டத்தில் திருமிகு சின்னவேல்சாமி (சென்னை) திருமிகு மத்தூரான் (மதுரை) திருமிகு க. சிவமணி (மதுரை) பேராசிரியர் இராஜா (திருச்சி) மகளிரணித் தலைவர்கள் வழக்கறிஞர் எஸ்.வி.சாந்தி (அரியலூர்) திருமதி வைகைமாலா (பெரம்பலூர்) திருமதி ஐனசக்தி (விழுப்புரம்) திருமதி பாவலர் நிறைமதி நீலமேகம் (கடலூர்) முனைவர் மும்தாஜ் (திருச்சி மேற்கு) திருமதி மல்லிகா (திருச்சி கிழக்கு) திருமதி வளர் செல்வி (கள்ளக்குறிச்சி) திருமதி ஜோதிலெட்சுமி (திருவண்ணாமலை) செல்வி இனியா (தென் சென்னை) திருமிகு அருள்முருகன் (கடலூர்) திருமிகு அருள்முருகன் (கடலூர்) திருமிகு செல்வராசு (கடலூர்) திருமிகு நீலமேகம் (கடலூர்)திருமிகு சக்திவேல் (கடலூர்) திருமிகு இரவிச்சந்திரன் (கடலூர்) திருமிகு அகத்தியர் (கடலூர்) திருமிகு செல்வமணி (கடலூர்) திருமிகு அழகு (கடலூர்) வழக்கறிஞர் ஆனந்த்ராஜ் (கடலூர்)திருமிகு அஜித் (கடலூர்) திருமிகு கதிரவன்
(கடலூர்) திருமிகு தமிழ்வேந்தன் (மதுரை) திருமிகு நெடுஞ்செழியன் (கள்ளக்குறிச்சி) திருமிகு தாமோதரன் (தியாக துருவம்) திருமிகு வெற்றிவேல் இராஜலிங்கம் (தியாகதுருவம்) சண்முக பாவலர் பிச்சப்பிள்ளை (கள்ளக்குறிச்சி) திருமிகு மொ. நடராஜன் (மணலூர் பேட்டை) திருமிகு பொன். முருகையன் (திருவண்ணாமலை) திருமிகு தங்கராசு (கள்ளக்குறிச்சி) திருமிகு மா.பா£த்தசாரதி, செ.வ.மதிவாணன் (கள்ளக்குறிச்சி) திருமிகு புருசோத்தமன் (சென்னை)திருமிகு சத்தியமூர்த்தி (திருவண்ணாமலை) திருமிகு குப்பு முத்து ராஜா (மயிலம்) திருமிகு வாசு புருஷேத்தமன் (விழுப்புரம்) திருமிகு கண்ணன் (அரியலூர்) திருமிகு நாகமுத்து (அரியலூர்) உழவர் புலவர் இளங்கோ (அரியலூர்) திருமிகு துரை பாண்டியன் (அரியலூர்) திருமதி மங்கையர்கரசி (அரியலூர்) திருமிகு வாசுதோவன் (பெரம்பலூர்) திருமிகு சுந்தர்ராஜ் (கும்பகோணம்) திருமிகு தங்கராசு (தஞ்சை) திருமிகு ஜெ.எம். ஆனந்த் (கும்பகோணம்) திருமிகு அகத்தியர் (கோட்டைகாடு) திருமிகு ராமச்சந்திரன் (வசிஷ்டபுரி) திருமிகு இராஜங்கம் (ஆலத்தியூர்) திருமிகு கருணாமூர்த்தி (திருச்சி) முனைவர் தங்கவேலு (திருச்சி) திருமிகு காசிநாதன் (திருச்சி) திருமிகு இராமசாமி (கரூர்) திருமிகு ஜெய்சங்கர் (அரியலூர்) திருமிகு திருமூர்த்தி (அரியலூர்) திருமிகு பிரகாஷ் (அரியலூர்) திருமிகு இராசாங்கம் (அரியலூர்) உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
மாலையில் கி. ஆ. பெ விசுவநாதம் தொடக்கப்பள்ளியில் அமைந்துள்ள திருவள்ளுவர், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி, தமிழறிஞர் கி. ஆ. பெ விசுவநாதம் திருவுருவச்சிலைகளுக்கு நிருவாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இடம்: மணிமொழி காந்தன் திருமண மண்டபம், சித்தலிங்கமடம், விழுப்புரம் மாவட்டம்-605 803.
நாள்: திருவள்ளுவர் ஆண்டு 2055 ஆடி 12, 28.07.2024, ஞாயிற்றுக்கிழமை காலை 09.30 மணி
வாசித்து வழங்கியவர் : பேராசிரியர் தங்க. ஆதிலிங்கம், பொதுச்செயலாளர் கூட்டமைப்பு மற்றும் அறக்கட்டளை.
அன்புடையீர், வணக்கம்.
“உலகத் திருக்குறள் கூட்டமைப்பு” என்னும் மாபெரும் வரலாற்றுச் சிறப்பு மிக்க திருக்குறள் மக்கள் இயக்கத்தைச் சிறப்பாக வழிநடத்தி வரும் கூட்டமைப்புத் தலைவர், அறக்கட்டளைத் தலைவர், கூட்டமைப்புப் பொருளாளர், அறக்கட்டளைப் பொருளாளர், அமைப்புச் செயலாளர், தலைமைக் கரண ஆசான், மகளிர் அணித்தலைவர், துணைத்தலைவர்கள், துணைப்பொதுச்செயலாளர்கள், துறை இயக்குநர்கள் மாவட்டத் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள், கரண ஆசான்கள், மகளிரணித் தலைவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பொதுச்செயலாளர் என்ற முறையில் எமது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், செயற்குழுக் கூட்டத்தைச் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ள அறக்கட்டளைத் தலைவருக்கும் இம்மண்டபத்தையும் மதிய உணவையும் தந்துதவியத் தலைமைத் துறை இயக்குனரும் புரவலருமான திருமிகு குரு.ஜெயபிரகாஷ் அவர்களுக்கும் கூட்டமைப்பின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்த்தாயின் தலைமகன், முப்பால் முதல்வன், தமிழ்ப்பேராசான் ஐயன் திருவள்ளுவர் வகுத்துத் தந்துள்ள உலகப்பொதுமறையாம் திருக்குறள் வழிநின்று சாதிபாகுபாடற்ற, மதச் சார்பு இல்லாத, மூடப்பழக்க வழக்கங்கள் மற்றும் மதுபோதைக்கு இடம் கொடுக்காத, Ôபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்Õ என்னும் படியான, Ôபகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும்Õ பொருளாதார சமன்மையுடைய, இயற்கையோடி இயைந்த, அறிவியல் அறிவு பெற்ற, பகுத்தறிவு சிந்தனை கொண்ட, நீதியுடன் கூடிய, சுரண்டலற்ற, சமத்துவ சமவுடைமைத் திருக்குறள் சமுதாயம் அமைத்தல் என்னும் உயரிய நோக்கினை முன்வைத்து நம் உலகத் திருக்குறள் கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது என்பதை செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் அறிவீர்கள்.
உலகத் திருக்குறள் கூட்டமைப்பு 2017 ஆம் ஆண்டு 20 திருக்குறள் அமைப்புகள் ஒன்றிணைந்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் முறையாகத் தொடங்கப்பட்டு, 02.06.2018 அன்று தஞ்சையில் 150 திருக்குறள் அமைப்புகளின் ஒருங்கிணைப்பு மாநாடு மூலம் வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தப் பட்டது.
கூட்டமைப்பு தமிழ்நாடு சங்கங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட்டுள்ளது. பதிவு எண் 318/2018 ஆகும். கூட்டமைப்பின் நோக்கம் மற்றும் குறிக்கோள்களை நடைமுறைப் படுத்துவதற்குத் தேவையான நிதியாதாரத்தைப் பெருக்குவதற்கு இந்திய அறக்கட்டளைச் சட்டப்படி உலகத் திருக்குறள் கூட்டமைப்பு அறக்கட்டளை பதிவு செய்யப் பட்டுள்ளது. பதிவு எண் 227/2018 ஆகும்.
கூட்டமைப்புப் பதிவு செய்யப்பட்ட நாள் முதல் 3 மாதங்களுக்கு ஒருமுறை செயற்குழுக் கூட்டங்களும் ஆண்டுக்கு ஒரு முறைப் பொதுக்குழுக் கூட்டங்களும் தேவையின் அடிப்படையில் ஆட்சிமன்றக்குழுக் கூட்டங்களும் நடத்தப்பட்டு திட்டப்பணிகள் செயல்படுத்தப் பட்டு வருகின்றன. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிருவாகிகள் தேர்தல் நடத்தவேண்டும் என்ற கூட்டமைப்பின் சட்டவிதிகள்படி 2021 ஆம் ஆண்டு நிருவாகிகள் தேர்தல் நடத்தப்பட்டன.
இந்நிலையில், 2023 மே மாதம் விழுப்புரத்தில் நடைபெற்ற எட்டாவது (8) செயற்குழுக் கூட்டத்தில் கடந்த ஐந்தாண்டுகளுக்கானச் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, இனிவரும் காலங்களில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை கூட்டமைப்பின் நிருவாகிகள் தேர்தல் நடத்துவது எனவும், கூட்டமைப்பின் நிருவாகக் கட்டமைப்பு மறுசீரமைப்புச் செய்யப்பட வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டு முதற்கட்டமாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 4 வட்டார அமைப்புகள் ஏற்படுத்த வேண்டும் எனவும்ஒவ்வொரு வட்டாரத்திற்கும் தலா 10 கிளை அமைப்புகள் ஏற்படுத்த வேண்டுமெனவும் திட்டப்பணிகளைச் சிறப்பாக நடைமுறைப்படுத்த ஒவ்வொரு மாவட்டத்- திலிருந்தும் தலா ஒரு துறை இயக்குநர் தேர்வு செய்வது எனவும் ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.
மேற்படித் தீர்மானங்கள் அடிப்படையில் 28.01.2024 அன்று திருச்சி கி.அ.பெ.விஸ்வநாதன்
பள்ளியில் நடைபெற்ற 5 ஆவது பொதுக்குழுக் கூட்டத்தில் கூட்டமைப்பின் தலைமையக, மாவட்ட, வட்டார, கிளை அமைப்புகளின் புதிய நிருவாகிகளுக்கானத் தேர்தல் நடைபெற்றது. புதிய நிருவாகிகள் பதவி காலம் 2025 டிசம்பர் வரை ஆகும்.
மேற்படித் தேர்தலில் அரிமா மு. ஞானமூர்த்தி (கடலூர்) கூட்டமைப்புத் தலைவராகவும் தமிழரிமா தா. சம்பத் (கள்ளக்குறிச்சி) அறக்கட்டளைத் தலைவராகவும் பேராசிரியர் தங்க. ஆதிலிங்கம் (மத்திய சென்னை) கூட்டமைப்பு மற்றும் அறக்கட்டளைப் பொதுச்செயலாளராகவும் நல்லாசிரியர். பெ.சௌந்தரராசன் (அரியலூர்) கூட்டமைப்புப் பொருளாளராகவும் திருமிகு ப. முத்துச்செல்வன் (தூத்துக்குடி) அறக்கட்டளைப் பொருளாளராகவும் திருக்குறள் மாமணி இராம கோவிந்தன் (கரூர்) தலைமைக் கரண ஆசானாகவும் குறள்செல்வி பிச்சி ஆதிலிங்கம் (மத்திய சென்னை) மகளிரணித் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
துணைத்தலைவர்களாக தமிழாசிரியர் ஆ.நெடுஞ்சேரலாதன் (விருதுநகர்), திருக்குறள் அ.பெருமாள் (மதுரை), பேராசிரியர் க.கருத்தபாண்டி (தூத்துக்குடி), தமிழ்ச்செம்மல் ஆறு.மெ.மெய்யாண்டவர் (சிவகங்கை), திருமிகு. வ. தசரதன் (திருப்பத்தூர்), மருத்துவர் த.கணேசன் (வேலூர்), திருமிகு சீனு. பழமலை (கடலூர்) ஆகியோரும்.
துணைப் பொதுச்செயலாளர்களாக திருமிகு கோ. வெங்கடேசன் (மத்திய சென்னை), முனைவர் ம. இளையராஜன் (கோயம்புத்தூர்), திருமிகு த. பழனிவேல் (கள்ளக்குறிச்சி), பொறியாளர் கோ. கார்த்திக்கேயன் (தஞ்சை), வழக்கறிஞர் எஸ்.வி.சாந்தி (அரியலூர்), திருமிகு து.இரமேஷ் (காஞ் சிபுரம் தெற்கு), திருமிகு.நோ. ஆல்ஃபி (தென்சென்னை) ஆகியோரும்.
துறை இயக்குநர்களாக முனைவர். இரா.வனிதா (சிவகங்கை) திருமிகு. குரு.ஜெயப்பிரகாஷ் (கள்ளக்குறிச்சி), திருமிகு. ப.குப்புசாமி (விழுப்புரம்), திருமிகு எஸ்.வி.குமார் (மத்திய சென்னை), திருமதி. உலக. தேன்மொழி (திருப்பத்தூர்), முனைவர்.க. சின்னத்துரை (அரியலூர்), திருமிகு இரச.வையாபுரி (கரூர்), திருமிகு ஜெ.எம். திருஞானசம்பந்தம் (கடலூர்), திருமிகு ஜெ.மு. ஆனந்த் (கும்பகோணம்) ஆகியோரும் மாவட்டத் துறை இயக்குநர்களாக திருமிகு சொ. கிருஷ்ணமணி (சேலம்), திருமிகு ப.க. கங்கன் (கன்னியாகுமரி) தேர்ந்தெடுக்கப்பட்டுச் செயல்பட்டு வருகின்றனர்.
மேலும் கடலூர் மேற்கு, அரியலூர், மத்தியச் சென்னை, தூத்துக்குடி, மதுரை, சிவகங்கை கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்ங்களில் தலா ஒரு மாவட்டத் தலைவர் செயலாளர், பொருளாளர், கரணஆசான், மகளிர் அணித்தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டுச் செயல்பட்டு வருகின்றனர்.
தற்போது அமைப்புச் செயலாளராக திருமிகு வ. காசிநாதன் (திருச்சி) அவர்கள் தலைமை நிருவாகிகளால் தேர்வு செய்யபட்டுள்ளார்.
விடுபட்டுள்ள மாவட்டங்களுக்கானத் துறை இயக்குநர்கள், மாவட்ட, வட்டார, கிளை அமைப்பு களின் நிருவாகிகள் தேர்வு செய்வதற்கு மாவட்டவாரியாக கூட்டங்கள் கூட்டுவதற்கு இச்செயற் குழுக் கூட்டம் முடிவெடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.
1) உலகத் திருக்குறள் கூட்டமைப்பின் பொறுப்பாளர்களாக செயல்பட விரும்புவோர் தாங்கள் விரும்பும் பொறுப்புக்கு விருப்பமனு பூர்த்தி செய்து தலைமையகத்திற்கு அனுப்பி ஒப்புதல் பெறுதல் வேண்டும்.
2) தாங்கள் வசிக்கும் ஊராட்சி/பேரூராட்சி/நகராட்சி வட்டம்/மாநகராட்சி வட்டத்தில் தங்கள் பொறுப்பில் உலகத் திருக்குறள் கூட்டமைப்பின் கிளை அமைப்பு ஒன்று உருவாக்குதல் வேண்டும்,
3) தங்கள் பொறுப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள கிளை அமைப்பில் கூட்டமைப்பின் 10 அம்ச சமூக செயல்பாட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் வேண்டும்.
4) கூட்டமைப்பின் ஆட்சிமன்றக்குழு/உயர்நிலைக்குழு/செயற்குழு/பொதுக்குழுக் கூட்டங்களில் நிறைவேற்றப் படும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துதல் வேண்டும்.5) கூட்டமைப்பு/அறக்கட்டளை வங்கி கணக்குகளில் விருப்பமனு கட்டணம், உறுப்பினர் கட்டணம், நன்கொடைகள் மற்றும் புரவலர் தொகைச் செலுத்தியதற்கான இரசீதை நேரில்/கடிதம்/புலனத்தில் அனுப்பி வைக்க வேண்டும்.
6) தலைமை நிருவாகிகள் தாங்கள் நெறிப்படுத்த வேண்டியத் திட்டப்பணிகள் குறித்து துணைத் தலைவர்கள்/துணைப் பொதுச்செயலாளர்களிடம் தினம் ஒருமுறையாவது (ஒரு நிமிடம்) பேச நேரம் ஒதுக்க வேண்டும்.
7) துணைத் தலைவர்கள்/துணைப் பொதுச்செயலாளர்கள் தங்களுக்குப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள மாவட்டங்களின் தலைமைத் துறை இயக்குநர்களிடம் தாங்கள் நெறிப்படுத்த வேண்டியத் திட்டப்பணிகள் குறித்து தினம் ஒருமுறையாவது (ஒரு நிமிடம்) பேச நேரம் ஒதுக்க வேண்டும்.
8) தலைமைத் துறை இயக்குநர்கள் தங்களுக்குப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள துறைசார்ந்த மாவட்டத் துறை இயக்குநர்களிடம் தாங்கள் நெறிப்படுத்த வேண்டியத் திட்டப்பணிகள் குறித்து தினம் ஒருமுறையாவது(ஒரு நிமிடம்) பேச நேரம் ஒதுக்க வேண்டும்.
9) மாவட்டத் தலைவர்கள்/செயலாளர்கள்/பொருளார்கள்/கரண ஆசான்கள்/மகளிரணி தலைவர்கள் தாங்கள் நெறிப்படுத்த வேண்டியத் திட்டப்பணிகள் குறித்து வட்டாரத் தலைவர்கள் செயலாளர்கள்,பொருளார்கள்/கரண ஆசான்கள்/மகளிரணி தலைவர்களிடம் தினம் ஒருமுறையாவது (ஒரு நிமிடம்) பேச நேரம் ஒதுக்க வேண்டும்.
10) வட்டாரத் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள், கரண ஆசான், வட்டார மகளிரணி தலைவர்கள் தாங்கள் நெறிப்படுத்த வேண்டியத் திட்டப்பணிகள் குறித்து கிளை அமைப்புகளின் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர் கரண ஆசான்கள், மகளிரணி தலைவர்களிடம் தினம் ஒருமுறையாவது (ஒரு நிமிடம்) பேச நேரம் ஒதுக்க வேண்டும்.
11) மாவட்டத் துறை இயக்குநர்கள் தங்கள் துறை சார்ந்த வட்டாரத்துறை ஒருங்கிணைப்பாளர்களிடம் தாங்கள் நெறிப்படுத்த வேண்டியத் திட்டப்பணிகள் குறித்து தினம் ஒருமுறையாவது (ஒரு நிமிடம்) பேச நேரம் ஒதுக்க வேண்டும்.
12) வட்டாரத் துறை ஒருங்கிணைப்பாளர்கள் தங்கள் துறை சார்ந்த கிளை அமைப்பாளர்களிடம் தாங்கள் நெறிப்படுத்த வேண்டியத் திட்டப்பணிகள் குறித்து தினம் ஒருமுறையாவது (ஒரு நிமிடம்) பேச நேரம் ஒதுக்க வேண்டும்.
13) கிளைத் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள், கரண ஆசான், மகளிரணி தலைவர்கள் கிளை அமைப்பாளர்கள் தாங்கள் நெறிப்படுத்த வேண்டியத் திட்டப்பணிகள் குறித்து மகளிர், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பல்துறை சார்ந்த சமூகஆர்வலர்களிடம் தினம் ஒருமுறையாவது (ஒரு நிமிடம்) பேச நேரம் ஒதுக்க வேண்டும்.
14) கிளை அமைப்புக் கூட்டம் வாரம் முறையும், வாட்டார அமைப்புக் கூட்டம் 15 தினங்களுக்கு ஒருமுறையும், மாவட்ட அமைப்புக் கூட்டம் மாதம் ஒருமுறையும் கூட்டப்பட்டு திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு தலைமையகத்திற்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.
15) கூட்டமைப்பின் தலைமையகப் பொறுப்பாளர்கள், துணைத்தலைவர்கள், துணைப் பொதுச் செயலாளர்கள், தலைமைத் துறைஇயக்குநர்கள், மாவட்ட, வட்டார, கிளைப் பொறுப்பாளர்கள் 24 மணி நேரத்தில் குறைந்தது ஒருநிமிடமாவது கூட்டமைப்பின் வளர்ச்சிக்காகச் செலவுசெய்து, 2024 செப்டம்பர் மாதம் நடைபெறவிருக்கும் பொதுக் குழுக் கூட்டத்தில் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் பொறுப்பாளர்களைத் தேர்வு செய்து அழைத்து வந்து, திருவள்ளுவர் காண விழையும் சமத்துவ சமவுடைமை சமுதாயம் மலர ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
பொதுக்குழுக் கூட்டம் – 29.09.2024 திருச்சி
ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் – 24.11.2024 பெரம்பலூர்
செயற்குழுக் கூட்டம் – 31.12.2024 கன்னியாகுமரி
செயற்குழுக் கூட்டம் – 20.04.2025 திருவண்ணாமலை