உலகத் திருக்குறள் கூட்டமைப்பு

உலகத் திருக்குறள் கூட்டமைப்பு

செயல்பாடுகள் - 2019

2019 ஆம் ஆண்டு நிகழ்வுகள்:

தெலுங்கானா மாநிலம் அமைப்பு கூட்டம் - 18-02-2019 ஹைதராபாத்

உலகத் திருக்குறள் கூட்டமைப்பின் தெலுங்கானா மாநில அமைப்பு கூட்டம் கூட்டமைப்பின் தலைவர், வெ.சேகர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திருக்குறள் சி. பன்னீர் செல்வம், பொதுச்செயலாளர் திருக்குறள் செல்வர் ஆதிலிங்கம், துணைத் தலைவர் மு.கோ ஏழுமலை, துணைப்பொதுச் செயலாளர் திரு சம்பத், கரண ஆசான் அய்யா மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தெலுங்கானாவில் 7 பேர் கொண்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப் பட்டார்கள். தலைவராக திரு இராசமாணிக்கம், செயலாளராக திரு. நடராச கணபதி, பொருளாளராக திரு மு. சந்திரசேகர் துணைத்தலைவராக திரு ஆர். இராசா, ப.முத்துசாமி, பொதுச்செயலாளர்கள் த.சண்முகம், கோ. கண்ணன் ஆகியயோர் தேர்ந்தெடுக்கபட்டார்கள்.

இரண்டாவது ஆட்சிமன்றக்குழுக் கூட்டம் - 24.02.2019 திருச்சி

திருச்சி, பாரதி பதின்மப் பள்ளி வளாகத்தில் வைத்து இரண்டாவது ஆட்சிமன்றக்குழுக் கூட்டம் 24.02.2019 ஞாயிற்றுக்கிழமை, காலை 11.00 மணிக்கு கூட்டமைப்பின் தலைவர் திரைப்பட இயக்குநர் வே.சேகர், தலைமையில் நடைபெற்றது.

பொதுச்செயலாளர், திருக்குறள் செல்வர் ஆதிலிங்கம் செயல் அறிக்கை வாசித்தார். பொருளாளர் பாவலர் செவ்வியன் ஆகியோர் பொருள்நிலை அறிக்கை வாசித்தார். கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் புலவர் சி.பன்னீர் செல்வம் ஒருங்கிணைப்பு பணி அறிக்கை வாசித்தார்.

பணிஅறிக்கையை துணைத் தலைவர் மு.கோ.ஏழுமலை அவர்களும், திரு. காவடியூர் சிவநாராயணபெருமாள், முனைவர் அர.விவேகானந்தன் திரு. பனசை அரங்கன் திரு கொ.ப.இராமசாமி, திரு தா.கோ.சம்பந்தம், திரு ம.இராவணன், திருக்குறள் கூ.மாரிமுத்து, தென்னிலை இராம.கோவிந்தன், புலவர் அய்யாமோகன் கூட்டத்தில் திரு இராச வையாபுரி, திரு நாகேந்திர கிருட்டிணன், திரு ஆ.பழனியாண்டி, திரு சிறிதர், இரா மாறன், தஞ்சை பத்மா, திரு முத்துசெயராமன், திரு சுந்தர மகாலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டமைப்பின் மூன்றாம் செயற் குழுக் கூட்டம் - 16.03.2019 கரூர்

உலகத் திருக்குறள் கூட்டமைப்பின் மூன்றாவது செயற்குழுக் கூட்டம் கரூர் வள்ளுவர் கலை மற்றும் மேலாண்மையியல் கல்லூரியில் உள்ள வள்ளுவர் அரங்கில் – திருவள்ளுவர் ஆண்டு 2050 பங்குனி 2 ஆம் நாள் (16.03.2018) ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு கூட்டமைப்பின் தலைவர் திரைப்பட இயக்குநர் வே.சேகர், தலைமையில் நடைபெற்றது.

கூட்டமைப்பின் சிறப்புத் தலைவரும், வள்ளுவர் கேட்ரிங் கல்லூரியின் தாளாளருமான க. செங்குட்டுவன் அவர்கள் செயற்குழுக்கூட்டத்தை தொடங்கி வைத்தார். மதிப்புறுத் தலைவர் திரு தங்கராசு முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர், திருக்குறள் செல்வர் ஆதிலிங்கம் செயல் அறிக்கை வாசித்தார். பொருளாளர் பாவலர் செவ்வியன் ஆகியோர் பொருள் நிலை அறிக்கை வாசித்தார்.

கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் புலவர் சி.பன்னீர் செல்வம் துணைத் தலைவர் மு.கோ.ஏழுமலை, தமிழரிமா தா.சம்பத், திருக்குறள் கூ.மாரிமுத்து, தென்னிலை இராம.கோவிந்தன் புலவர் அய்யாமோகன் தலைமை கரண ஆசான், புலவர் குறளகன், திரு இராச வையாபுரி, திரு.இரா. திருமூர்த்தி, திரு. நாகேந்திர கிருட்டிணன், திரு இராமசாமி,பாலவர்.மலரடியான், திரு மு.கவியரசு, இராசெல்வதுரை, திரு.ம.குப்புசாமி, திருக்குறள் காமராசு, திரு.செந்தில் முருகன், திரு சத்தியநாராயணன், பாவலர் எழில்வாணன், திரு. இராம்கம்பர், திரு முத்துபரமசிவம், திருக்குறள் கோபிசிங், திரு.வீரபாலன், திரு காப்பித்துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் 1330 குறள்நெறிக் கரண ஆசான்கள் உருவாக்குவதற்கான கருத்தரங்கு - 30.03.2019

30.03.2019 ஆம் தேதி நீலாங்கரை திருவள்ளுவர் வாழ்வியல் மன்றம் அலுவலகத்தில் வைத்து தலைவர் திரைப்பட இயக்குநர் வெ.சேகர் தலைமையில், கூட்டமைப்பின் துணைத்தலைவர் மு.கோ.ஏழுமலை அவர்கள் முன்னிலையில் கூட்டமைப்பின் பொருளாளர் செவ்வியன் அவர்கள் கரண பயிற்சியை தொடங்கி வைத்தார்கள்.

கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் குறட்செல்வர் ஆதிலிங்கம் அவர்கள் ஓருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டார். தலைமை கரண ஆசான் அய்யாமோகன் கரணபயிற்சி வழங்கினார். கூட்டமைப்பின் முதல் செயல்திட்டமாக உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் குடும்பங்களில் நடைபெறும் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளைத் தமிழ் மரபுப் படி திருக்குறள் வழியில் நடத்திட 1000 குறள்நெறிக் கரண ஆசான்கள் உருவாக்குவதற்கானச் சிறப்புத் திட்டம் ஒன்று வடிவமைக்கப்பட்டு, 01.12.2018 முதல் விருதுநகர், சென்னை, விழுப்புரம், தஞ்சாவூர், கரூர், நாமக்கல், தருமபுரி, கிருட்டிணகிரி, அரியலூர், திருவண்ணாமலை வடக்கு, திண்டுக்கல், திருப்பூர், காஞ் சிபுரம், கடலூர், தூத்துக்குடி, பெரம்பலூர், மதுரை, திருச்சி, கோவை, நீலகிரி ஆகிய 20 மாவட்டங்களில் குறள்நெறிக் கரண ஆசான்கள் உருவாக்குவதற்கான பயிற்சித் தொடக்கவிழா நடைபெற்றுள்ளது.

மீதமுள்ள மாவட்டங்களில் 2019 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தொடக்கவிழா நடத்துவது என திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 30 குறள்நெறிக் கரண ஆசான்கள் உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இச்சிறப்புத் திட்டத்தின் மூலம் தமிழகத்தில் 1330 குறள்நெறிக் கரண ஆசான்கள் உருவாக்கி, ஒரே மேடையில் அறிமுகவிழா மற்றும் பட்டமளிப்பு விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கரண ஆசான் பயிற்சிக் கூட்டங்கள்
குறள்நெறிக் கரணஆசான் பயிற்சிபெற விரும்புவோருக்கான தகுதிகள்

  1. பத்தாம் வகுப்பு வரை படித்தவராகவும் தமிழில் எழுத படிக்க தெரிந்தவராகவும் இருத்தல் வேண்டும்.

  2. திருக்குறளில் ஈடுபாடு உள்ளவராகவும், பேச்சாற்றல் மிக்கவராகவும் இருத்தல் வேண்டும்.

  3. கூட்டமைப்பு வழங்கும் பாடப்பயிற்சி, செய்முறைப்பயிற்சி, களப்பயிற்சி இவற்றில் முழுமையாக ஈடுபட வேண்டும்.

  4. திருமணமானவராகவும் வாழ்வியல் நெறிமுறைகளை ஒழுக்கத்துடன் கடைபிடிப்பவராகவும் இருத்தல் வேண்டும்.

  5. புகைப்பிடித்தல், போதைப்பொருள்கள் பயன்படுத்தும் பழக்கம் இல்லாதவராக இருத்தல் வேண்டும்.

  6. மக்கள் நல ஆர்வலராகவும் பொதுநல அமைப்புகளில் பங்கேற்று தொண்டாற்றிய பட்டறிவு மிக்கவராகவும் இருத்தல் வேண்டும்.

  7. பயிற்சி நிறைவுபெற்று சான்றிதழ் பெற்றபின் கூட்டமைப்பின் தன்னார்வத் தொண்டராக செயலாற்ற உறுதியளித்தல் வேண்டும்.

திருக்குறள்நெறிக் கரண ஆசான்கள் களப்பயிற்சி விதிமுறைகள்

கரணஆசான் பயிற்சி பெறுபவர் முதல் பாடப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் போது குறள் பணி/ கரணப்பணி செய்திட 500 குடும்பங்கள்/ வீடுகள் உள்ள ஒரு பகுதியைத் தேர்வு செய்து தங்கள் மாவட்டத்திலுள்ள ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்/மண்டலத் தலைவரிடம் பரிந்துரைப் படிவம் பெற்றுத்தர வேண்டும்.

கரணஆசான் பயிற்சி பெறுபவர் முதல் செய்முறைப்பயிற்சி (மே) மற்றும் இரண்டாவது பாடப்ப- யிற்சியில் கலந்து கொள்ளும் போது தாங்கள் தேர்வு செய்துள்ள பகுதியில் சமூக ஊடகங்கள் (வலைதளம், முகநூல்), துண்டறிக்கை, சுவரொட்டி, விளம்பரத்தட்டி மற்றும் வழிமுறைகளைக் கடைப்பிடித்து திருக்குறள்நெறி அடிப்படையில் குடும்ப நிகழ்வுகளை நடத்துவதன் நோக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்கான சான்று படி ஒப்படைக்க வேண்டும்.

கரணஆசான் பயிற்சி பெறுபவர் இரண்டாவது செய்முறைப்பயிற்சி (சூலை) மற்றும் மூன்றாவது பாடப்பயிற்சியில் (ஆகத்து) கலந்து கொள்ளும் போது குடும்ப நிகழ்வுகளைக் குறள்நெறி அடிப்டையில் நடத்திட தலா 25 குடும்பங்களிடம் ஒப்புதல் படிவம் பெற்று ஒப்படைக்க வேண்டும்.

கரணஆசான் பயிற்சி பெறுபவர் மூன்றாவது செய்முறைப்பயிற்சியில்(செப்டம்பர்) கலந்து கொள்ளும் போது தாங்கள் தேர்வு செய்துள்ள பகுதியில் 100 குடும்பத் தலைவர்/ தலைவியரிடம் தலைமையகம் சார்பில் மாநிலஅரசு/ நடுவன்அரசு/பன்னாட்டு அவை ஆகியவற்றிற்கு கொடுக்க உள்ள வேண்டுகோள் விண்ணப்பத்தில் கையொப்பம் பெற்றுத் தர வேண்டும்.

கரணஆசான் பயிற்சிபெறுபவர் நான்காவது பாடப்பயிற்சியில் (அக்டோபர்) கலந்து கொள்ளும் போது தங்கள் பணியிடப் பகுதியில் இருபாலர் அடங்கிய பொதுமக்கள் கூட்டம் நடத்தி, இருபத்தைந்து (25) திருக்குறள் பற்றாளர்கள் அடங்கிய குறள்நெறிச் செயல்பாட்டுக்குழு ஒன்று ஏற்படுத்தி பட்டியல் ஒப்படைக்க வேண்டும்.

கரணஆசான் பயிற்சிபெறுபவர் செய்முறைப்பயிற்சியில் கலந்து கொள்ளும் போது இருபாலர் அடங்கிய எழுவர் குழு (தலைவர்-1, துணைத் தலைவர்-2, செயலாளர்-1, துணைச்செயலாளர்-2, பொருளாளர்-1) மேலாண்மைக்குழுவினர் பட்டியல் ஒப்படைக்க வேண்டும்.

கரணஆசான் பயிற்சிபெறுபவர் ஐந்தாவது பாடப்பயிற்சி, ஐந்தாவது செய்முறைப்பயிற்சி, ஆறாவது பாடப்பயிற்சி, ஆறாவது செய்முறைப்பயிற்சி ஆகியவற்றில் கலந்து கொள்ளும் போது தங்கள் பணியிடப் பகுதியில் மாதம் ஒரு மக்கள் கூட்டம் நடத்தி மூத்த குறள்நெறி ஆசானின் உதவியுடன் குறைந்தது இரண்டு முன்நிகழ்வு (மாதிரி) கரண நிகழ்வுகளை நடத்தி சான்று ஒப்படைக்க வேண்டும்.

குறள்நெறிக் கரண ஆசான்கள் பயிற்சி தொடங்கிய நாளிலிருந்து ஓராண்டில் முப்பது (25) குறள்நெறிக் கரணங்களில் பத்து (10) கரணங்களையாவது கையேட்டின்படி நடத்தி அறிக்கை தரும் குறள்நெறிக் கரண ஆசான்கள் கூட்டமைப்பில் பகுதிகாலத் தன்னார்வத் தொண்டராக பணியமர்த்தப்பட்டு திங்கள்முறை ஊக்கத்தொகை வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பயிற்சிக்கான முன்னேற்பாடுகள்

  1. ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஒரு மாவட்டக் குறள்நெறி ஆசான் தேர்வுச் செய்யப்பட வேண்டும். மண்டலக் குறள்நெறி ஆசான் 50 வயதிற்கு மேற்பட்டவராகவும் திருமணமானவராகவும் இருத்தல் வேண்டும். மாவட்டக் குறள்நெறிஆசான்கள் அவரவர் மாவட்டத்தில் பயிற்சி வழங்க வேண்டும்.

  2. ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திலும் தலா முப்பது (30) திருக்குறள் பற்றாளர்கள் தேர்ந்தெடுத்து குறள்நெறி ஆசான் பயிற்சி வழங்கப்படவுள்ளது. அவர்கள் திருமணமானவர்களாகவும், 30 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.

  3. 31.10.2022 -க்குள் குறள்நெறிஆசான் பயிற்சி பெற விரும்புவோரிடம் விண்ணப்படிவம் நிறைவு செய்து பெறப்படவேண்டும். ஜி«t£ பெற விரும்புவோர் விண்ணப்பப்படிவம் நிறைவு செய்து வழங்கும்போது நுழைவுக் கட்டணமாக ட.100/- செலுத்திப் பதிவு செய்து கொள்ள ஸசீவீÓனீ.

  4. சனவரி 2023 முதல் மார்ச் 2023 வரை அவரவர் குறள் மாவட்டத்தில் ஹிலஸினீ யிறூ சீரூறீவூ என ஐந்து (5) சீரூறீவூலிs நடைபெறும். ஆறாவது பயிற்சி செயல்முறைத்தேர்வு (ஒத்திகை) ஆகும்.

  5. யிஹீனசீலறூ ஹிலஸிழூனீ சிகீவீறிலசீÕ ழிசுபீன்ஞீஷஹி/ ளில«tஈபீன்ஞீஷஹி லிலஷஙீ 10.00 ஹி¦ ழூஸிஜீ ஹிலஷஙீ 4.00 ஹி¦சீஷகீ ஜி«t£ ஷிஷறினஜிஈனீ.

  6. குறள் நெறிஆசான் பயிற்சிபெறுவோர் தங்களுக்கென ஒரு ஊராட்சி/பேரூராட்சி.நகராட்சி வட்டம்/ மாநகராட்சி வட்டம் தேர்வு செய்துகொள்ள வேண்டும். அப்பகுதியில் மாதம்தோறும் தலைமையகம் வழங்கும் களப்பணியாற்றி வட்டாரத் தலைவர்களிடம் அறிக்கை வழங்க வேண்டும்.

  7. பயிற்சி நிறைவு பெற்றபின் திருக்குறள் அரங்கேற்றம் பெற்ற மதுரை மாநகரில் 2024 மே மாதம் 15இல் ஒரே மேடையில் 1330 ரூ\sனஷிஙுக் லிகீனி ஙிழிலu அரங்கேற்றம் நடைபெற உள்ளது.

  8. அத்துடன் மதுரை மாநகரில் 2024 சனவரி மாதம் 15இல் நடைபெறும் விழாவில் குறள்நெறிக்கரண ஆசான் பட்டயச் சான்று வழங்கிப் பகுதி நேரப் பணியாளராகப் பணியமர்த்தப்படுவர்.

  9. குறள் நெறி ஆசானாக தலைமையகத்தால் சான்றளிக்கப் பட்டவர்களுக்கு மாதந்தோறும் ரூபாய் 1000/- மதிப்பூதியம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

  10. ஒவ்வொரு குறள்நெறி ஆசானுக்கும் ஒரு திருக்குறள் அமைப்பு பொறுப்பு வழங்கப்படும். அப்பகுதியில் திருக்குறள் அமைப்பு இல்லைஎனில் புதிய அமைப்புத் தொடங்க ஏற்பாடு செய்யப்படும்.

  11. குறள்நெறி ஆசான்கள் வாரம் ஒருநாள் ஒருமணிநேரம் தலைமையகம் வழங்கும் செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.

கன்னியாகுமரியில் (14.05.2019-15.05.2019) 2050 ஆம் முதலாம் திருவள்ளுவர் ஆண்டுவிழா - கூட்டமைப்பின் ஓராண்டு நிறைவுவிழா

உலகப் பொதுமறை தந்த தமிழன் திருவள்ளுவர் பிறந்த 2050 ஆம் ஆண்டுவிழா –மற்றும் திருக்குறள் சான்றோர்களுக்கு விருது வழங்கும் விழா, கூட்டமைப்பின் முதலாண்டு நிறைவு விழா மற்றும் விழா மலர் – நூல்கள் வெளியீட்டு விழா – பொறுப்பாளர்கள் அறிமுக விழா -இணையதளம் தொடக்க விழா – உறுப்பு அமைப்பினரின் குடும்பங்கள் சந்திப்பு விழா – மாணவ – மாணவியருக்கு பாராட்டு விழா திருக்குறள் கலை விழா மற்றும் கலைஞர்களுக்குப் பாராட்டுவிழா ஆகிய ஐம்பெரும்விழா நடத்தப்பட்டது. நிகழ்வுகள் 14.05.2019 அன்று கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா ஏக்நாத் அரங்கில் நடைபெற்றது.

விழாவின் தொடக்கமாக திருக்குறள் அமைப்புகளின் ஒருங்கிணைப்புப் பேரணியும், திருவள்ளுவம் என்னும் பெயரில் சிறப்பு மலரும் வெளியிடப்பட்டது. முக்கிய நிகழ்வாக திரு பழ நெடுமாறன், திரு குமரிஅனந்தன், திரு நல்லகண்ணு, திரு இளங்குமரனார், திரு பத்மநாபன், கோவை பேரூர் ஆதீனம் தவத்திரு. மருதாச்சல அடிகளார், சிரவை ஆதீனம் தவத்திரு. குமரகுருபர அடிகளார் ஆகியோருக்கு திருக்குறள் சான்றோர் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

15-05-2019 அன்று 07.00 மணிக்கு அன்று கன்னியாகுமரி முக்கடல் சந்திக்கும் இடத்தில் திருக்குறள் முற்றோதல் நடைபெற்றது. பின்னர் 08.00 மணிக்கு குமரிஅனந்தன் அவர்களின் குமரி வரலாற்றுக்கலைக்கூடம் பார்வையிடப்பட்டது. பின்னர் 10.00 மணிக்கு திருவள்ளுவர் பாறைக்குச் சென்று மலர் தூவி மரியாதை செலுத்த பட்டது.

நான்காவது செயற் குழுக் கூட்டம் - 13.07.2019 - 14.07.2019 - கோவை

1330 குறள்நெறி ஆசான்களை ஒரே மேடையில் அரங்கேற்றுவதற்கானத் திட்டமிடல் கூட்டம்:

13.07.2019 மற்றும் 14.07.2019 ஆகிய நாட்களில் பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரியில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் மாவட்டம்தோறும் நடைபெறும் குறள்நெறி ஆசான் பயிற்சி நிறைவடைந்தவுடன் 1330 குறள்நெறி ஆசான்களை ஒரே மேடையில் அரங்கேற்றம் செய்வது எனத் தீர்மானிக்கப்பட்டது. அதற்குத் தேவையான முன்னெடுப்புகளை விரைந்து முடிப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது.

உயர்மட்டக் குழுக் கூட்டம் - 25.08.2019 - புதுவை

கூட்டமைப்பின் கடந்த ஓராண்டுகாலச் செயல்பாடுகள் குறித்த அனுபவத்தின் அடிப்படையில் – கோவையில் நடைபெற்ற செயற்குழுகூட்டத்தில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்களை நடைமுறைப் படுத்துவதற்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பினை ஏற்படுத்துவதற்கு திட்டங்கள் வகுத்திட 25.08.2019 அன்று புதுவைத் தமிழ்ச்சங்க வளாகத்தில் உய் மட்டக்குழுக் கூட்டம் நடத்தப் பட்டது.

கூட்டத்தில் தலைமையகப் பொறுப்பாளர்கள், மண்டிலப் பொறுப்பாளர்கள், மாவட்டப் பொறுப்பாளர்கள் என – கன்னியாகுமரி, கடலூர், அரியலூர், திண்டுக்கல், கரூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளுர், செங்கல்பட்டு உட்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 50- க்கும் மேற்பட்டப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு,அவரவர் பொறுப்பு மாவட்டங்களில் நடைபெற்றுள்ள செயல்பாடுகள் குறித்துவிளக்கினர்.

கூட்டத்தில், கடந்த ஓராண்டில் குறிப்பாக, 02.06.2018 தஞ்சை ஒருங்கிணைப்பு மாநாடு, 09.09.2018 கரூர் முதற் செயற்குழு, 10.11.2018 மதுராந்தகம் முதல் ஆட்சிமன்றக்குழு, 02.012.2018 இராசபாளையம் செயற்குழு, 25.05.2019 திருச்சி இரண்டாவது ஆட்சி மன்றக்குழு, 16.03.2019 கரூர் மூன்றாவது செயற்குழு, 14.07.2109, 15.07.2019 கோவை நான்காவது செயற்குழு மற்றும் திட்டமிடல் கூட்டம் ஆகியவற்றில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள் எந்த அளவுக்கு மாவட்டங்களில் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பது குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது. மேற்படி கலந்துரையாடலின் அடிப்படையில் கீழ்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இத்தீர்மானங்களை 29.09.2019 அன்று கள்ளக்குறிச்சியில் நடைபெறும் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டத்தில் ஒப்புதல் பெற்று நடைமுறைக்கு கொண்டு வருவது என ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டமைப்பின் நிருவாக வசதி கருதி, ஒரு மண்டிலத்திற்கு ஒரு ஒருங்கிணைப்பாளர் வீதம் நியமிக்கப்படும் எனவும், ஏதாவது ஒரு மாவட்டத்தின் /மாநிலத்தின் /நாட்டின் தலைவரை – மண்டில ஒருங்கிணைப்பாளராக (கூடுதல் பொறுப்பாளாராக) நியமிக்க வேண்டுமென என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேற்படித் தீர்மானத்தின் அடிப்படையில் கீழ்காணும் பொறுப்பாளர்கள் மண்டில ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டு அவர்களுக்கு தலா இரண்டு மாவட்டங்கள்/மாநிலங்கள்/ நாடுகள் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளன.

  1. நெல்லை மண்டிலம் – காவடியூர் சிவநாராயண பெருமாள் — குமரி, நெல்லை மாவட்டங்கள்

  2. தூத்துக்குடி மண்டிலம்- போரசிரியர் கருத்தப்பாண்டி – தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்கள்

  3. விருதுநகர் மண்டிலம் – ஆசிரியர் நிலவழகன் – விருதுநகர், இராமநாதபுரம் மாவட்டங்கள்

  4. மதுரை மண்டிலம் – முனைவர் இலக்குவன் – மதுரை தெற்கு, மதுரை வடக்கு மாவட்டங்கள்

  5. திண்டுக்கல் மண்டிலம் – திருக்குறள் செல்வன் – திண்டுக்கல், தேனி மாவட்டங்கள்

  6. திருப்பூர் மண்டிலம் – திரு தென்றல் சேகர் – திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு மாவட்டங்கள்

  7. கோவை மண்டிலம் – கவிஞர் நித்தியானந்தபாரதி – கோவை தெற்கு, கோவை மாநகர் மாவட்டங்கள்

  8. ஈரோடு மண்டிலம்- திரு நசியனுர் பழனிச்சாமி – ஈரோடு, நீலகிரி மாவட்டங்கள்

  9. கரூர் மண்டிலம் – தென்னிலை இராமகோவிந்தன் – கரூர், நாமக்கல் மாவட்டங்கள்

  10. திருச்சி மண்டிலம் – யோகா வையாபுரி – திருச்சி வடக்கு, திருச்சி தெற்கு மாவட்டங்கள்

  11. புதுகோட்டை மண்டிலம் – திரு துரைமதிவாணன் – புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்கள்

  12. தஞ்சை மண்டிலம் – திரு பனசை அரங்கன் – தஞ்சை, திருவாரூர் மாவட்டங்கள்

  13. விழுப்புரம் மண்டிலம் – திரு பா£த்தசாரதி – விழுப்புரம், கல்லக்குறிச்சி மாவட்டங்கள்

  14. திருவண்ணாமலை மண்டிலம் – திரு கண்ணன் – திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்கள்

  15. கடலூர் மண்டிலம் – திரு முத்துசெயராம் – கடலூர், பெரம்பலுர் மாவட்டங்கள்

  16. நாகை மண்டிலம் – திரு ம.இராவணன் – அரியலூர், நாகை மாவட்டங்கள்

  17. சேலம் மண்டிலம் – திரு டெக்சு இளங்கோவன் – சேலம், தருமபுரி, மாவட்டங்கள்

  18. கிருட்டிணகிரி மண்டிலம் -முனைவர் அர விவேகானந்தன் – கிருட்டிணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்கள்

  1. காஞ்சி மண்டிலம் – கவிஞர் குறளமுதன் – காஞ்சி, செங்கல்பட்டு மாவட்டங்கள்

  2. திருவள்ளூர் மண்டிலம் – திரு கொ.ப.இராமசாமி – இராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்கள்

  3. சென்னை மண்டிலம் 1 – திரு செந்தமிழ் செல்வன் – தென்சென்னை, மேற்கு சென்னை மாவட்டங்கள்

  4. சென்னை மண்டிலம்2- திரு இனியன் தமிழ்ச் சமணன் – கிழக்குசென்னை, வடசென்னை மாவட்டங்கள்

  1. புதுவை மாநகர மண்டிலம் – பொறிஞர் மு. பாலசுப்ரமணியம் – புதுவை மாநகர்

  2. காரைக்கால் மண்டிலம் – திரு ப.திருநாவுக்கரசு – காரைக்கால், ஏனாம், மாகி பகுதி

  1. கருநாடக மண்டிலம் – திரு தேனிரா.உதயகுமார் – கேரளா, கருநாடக மாநிலங்கள்

  2. மராட்டிய மண்டிலம் – திரு சண்முகசுந்தரம் – மராட்டியம், டெல்லி மாநிலங்கள்

  3. ஆந்திர மண்டிலம் – முனைவர். இராசமாணிக்கம் – ஆந்திரா, தெங்கானா மாநிலங்கள்

  4. வடகிழக்கு மாநிலங்கள் – திரு. இராசசேகர் – ஒரிசா, மேற்கு வங்காள மாநிலங்கள்

  5. ஆசிய மண்டிலம் – திரு முல்லைவாணன் – ஆசிய நாடுகள்

ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்களின் பொறுப்பு மண்டிலங்கள்

ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்களுக்கு கீழ்காணும் மாவட்டங்கள்/மாநிலங்கள்/நாடுகள் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளன. என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1) தலைவர் – திரைப்பட இயக்குநர் வெ.சேகர்

கோவை தெற்கு, கோவை மாநகர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்கள்

2) பொதுச்செயலாளர் – திருக்குறள்செல்வர் ஆதிலிங்கம்

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்கள்

3) பொருளாளர் கவிஞர் செவ்வியன்

தஞ்சை, திருவாரூர்,புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்கள்

4) ஒருங்கிணைப்பாளர் புலவர் சி.பன்னீர்செல்வம்

சேலம், தருமபுரி, கிருட்டிணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்கள்

5) அமைப்புச் செயலாளர் கவிஞர் மு.கோ.ஏழுமலை

தென்சென்னை, மத்திய சென்னை, வடசென்னை மாவட்டங்கள்

6) தலைமைக் கரண ஆசான் புலவர். அய்யாமோகன்,

விழுப்புரம், கல்லக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்கள்

7) துணைத் தலைவர் திரு ஆ.நெடுஞ்சேரலாதன்,

விருதுநகர் கிழக்கு, விருதுநகர் மேற்கு, இராமநாதபுரம், மதுரை மாவட்டங்கள்

8) துணைத் தலைவர் திரு.தென்னிலை இராம கோவிந்தன்

திருச்சி தெற்கு, திருச்சி வடக்கு, நாமக்கல், கரூர் மாவட்டங்கள்

9) துணைத் தலைவர் திரு தா.கோ.சம்பந்தம்

கடலூர், பெரம்பலுர், அரியலூர், நாகை மாவட்டங்கள்

10) துணைப்பொதுச்செயலாளர் தமிழ் அரிமா. தா.சம்பத்

காஞ்சி, செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்கள்

11) துணைப்பொதுச்செயலாளர் திருக்குறள் செல்வன்,

திண்டுக்கல், தேனி, திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு மாவட்டங்கள்

12) புதுவை மாநிலத் தலைவர் கலைமாமணி வி.முத்து

புதுவை மாநகர், காரைக்கால்

13) கருநாடக மாநிலத் தலைவர் திரு. இளங்கோவன்

கருநாடகம், கேரளா, மராட்டியம், ஆந்திரா, தெலுங்கானா, ஒரிசா, மேற்கு வங்காளம், டெல்லி

14) சிறப்புத் தலைவர் திரு க.செங்குட்டுவன்,

ஆசிய நாடுகள் மற்றும் இசுலாமிய நாடுகள்

15) சிறப்புத் தலைவர் திரு ப.தங்கராசு

ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்க நாடுகள் வழங்கப்பட்டுள்ளது.

தீதும் நன்றும் பிறன் தர வரா! என்பார்கள். ஆக, தமிழர்களின் தற்கால இழிநிலைக்கு தமிழராகிய நாமே தான் காரணம். எனவே, திருவள்ளுவர் காலம் முதல் தமிழ்ச் சமுதாயத்தின் கடந்த 2000 ஆண்டு கால கனவை நனவாக்கிட தொடங்கப்பட்டது தான் நமது உலகத் திருக்குறள் கூட்டமைப்பு என்பதை அனைத்து பொறுப்பாளர்களும் நினைவில் கொள்ள வேண்டும்.ஆகவே, தமிழ்த் தாயின் தலைமகள் முப்பால் முதல்வன் தெய்வத் திருவள்ளுவர் ஏற்றி வைத்த புரட்சித் தீபத்தை முன்னெடுத்துச் செல்ல களம் காண்போம். உலக வரை படத்திலும், ஐ.நா.அவையிலும் தமிழினத்திற்கு என ஓர் இடம் கிடைக்கும் வரை போராடுவோம்! வென்றெடுப்போம்! நன்றி! வணக்கம்.

5 ஆவது செயற்குழு மற்றும் முதல் பொதுக்குழுக் கூட்டம் - 29.09.2019 - கள்ளக்குறிச்சி

முக்கடலும் முத்தமிட்டு – முத்தமிழும் முழங்குகின்ற – குமரி அன்னையின் மடியில் நின்று நித்தம் தவம் செய்யும் – தமிழ்த்தாயின் தலைமகன் – உலக முதல்புரட்சியாளர் – முப்பால் முதல்வன் தெய்வத் திருவள்ளுவர் நிற்கின்ற திசை நோக்கி வணங்கி, கூட்டமைப்பின் முதலாம் ஆண்டு செயலறிக்கையினை இம்மாமன்றத்தில் வாசித்து வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

“உலகத் திருக்குறள் கூட்டமைப்பு” என்னும் மாபெரும் வரலாற்றுச் சிறப்பு மிக்க திருக்குறள் மக்கள் இயக்கத்தை சிறப்பாக வழிநடத்தி வரும் தலைவர், பொருளாளர், ஒருங்கிணைப்பாளர், அமைப்புச் செயலாளர், தலைமைக் கரண ஆசான், சிறப்பு தலைவர், மதிப்புறு தலைவர்கள் துணைத்தலைவர்கள், துணைப்பொதுச்செயலாளர்கள், மண்டில ஒருங்கிணைப்பாளர்கள், மகளிர் பிரிவு ஒருங்கிணைப்பாளர், மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பு அமைப்பினர் உள்ளிட்ட அனைவருக்கும் பொதுச்செயலாளர் என்ற முறையில் எமது வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இன்று நடைபெறும் செயற்குழு, பொதுக்குழுகூட்டத்திற்கு சிறப்பாக ஏற்பாடு செய்துள்ள கல்லக்குறிச்சி மாவட்டத் தலைவர், செயலா£ளர், பொருளாளர் மற்றும் நிருவாகிகள் அனைவருக்கும் கூட்டமைப்பின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தலைமையமைப்பின் சார்பில் நடைபெற்றுள்ள முக்கிய நிகழ்வுகள்

கூட்டமைப்பின் முதல் செயற் குழுக் கூட்டம் – 09.09.2018 – கரூர்

ஆட்சிமன்றக் குழுக்கூட்டம் – 10.11.2018 – மதுராந்தகம்

மாநில அளவிலான கரணப்பயிற்சி முகாம் – 01-12-2018 – இராசபாளையம்

இரண்டாவது செயற் குழுக் கூட்டம் – 02-12-2018 – இராசபாளையம்

இரண்டாவது ஆட்சிமன்றக்குழுக் கூட்டம் – 24.02.2019 – திருச்சி

கூட்டமைப்பின் மூன்றாம் செயற் குழுக் கூட்டம் – 16.03.2019 – கரூர்

கரண ஆசான்கள் உருவாக்குவதற்கான கருத்தரங்கு – 30.03.2019 – 31.03.2019 – நீலாங்கரை

நான்காவது செயற் குழுக் கூட்டம் – 13.07.2019 – 14.07.2019 – கோவை

தமிழகத்தின் வெளியே கூட்டமைப்பின் செயல்பாடுகள்

தெலுங்கானா மாநிலம் அமைப்புக் கூட்டம் - 18-02-2019 ஹைதராபாத்

தமிழகத்தின் வெளியே உலகத் திருக்குறள் கூட்டமைப்பின் செயல்பாடுகளை விரிவாக்கம் செய்யும் வகையில் தெலுங்கானா மாநில அமைப்பு கூட்டம் கூட்டமைப்பின் தலைவர், வெ.சேகர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திருக்குறள் சி. பன்னீர் செல்வம், பொதுச்செயலாளர் திருக்குறள் செல்வர் ஆதிலிங்கம், துணைத் தலைவர் மு.கோ ஏழுமலை, துணைப்பொதுச் செயலாளர் திரு சம்பத், கரண ஆசான் அய்யா மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தெலுங்கானாவில் 7 பேர் கொண்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப் பட்டார்கள். தலைவராக திரு இராசமாணிக்கம், செயலாளராக திரு. நடராச கணபதி, பொருளாளராக திரு மு. சந்திரசேகர் துணைத்தலைவராக திரு ஆர். இராசா, ப.முத்துசாமி, பொதுச்செயலாளர்கள் த.சண்முகம், கோ. கண்ணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கபட்டார்கள்.

திருவள்ளுவர் பிறந்த 2050 ஆம் ஆண்டு திருக்குறள் மாநாடு-கன்னியாகுமரி 14.05.2019, 15-05-2019

உலகப் பொதுமறை தந்த தமிழன் திருவள்ளுவர் பிறந்த 2050 ஆம் ஆண்டுவிழா –மற்றும் திருக்குறள் சான்றோர்களுக்கு விருது வழங்கும் விழா, கூட்டமைப்பின் முதலாண்டு நிறைவு விழா மற்றும் விழா மலர் – நூல்கள் வெளியீட்டு விழா – பொறுப்பாளர்கள் அறிமுக விழா -இணையதளம் தொடக்க விழா – உறுப்பு அமைப்பினரின் குடும்பங்கள் சந்திப்பு விழா – மாணவ – மாணவியருக்கு பாராட்டு விழா திருக்குறள் கலை விழா மற்றும் கலைஞர்களுக்குப் பாராட்டுவிழா ஆகிய நிகழ்வுகள் 14.05.2019 அன்று கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா ஏக்நாத் அரங்கில் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக திரு பழ நெடுமாறன், திரு குமரிஅனந்தன், திரு நல்லகண்ணு, திரு இளங்குமரனார், திரு பத்மநாபன், கோவை பேரூர் ஆதீனம் தவத்திரு. மருதாச்சல அடிகளார், சிரவை ஆதீனம் தவத்திரு. குமரகுருபர அடிகளார் ஆகியோருக்கு திருக்குறள் சான்றோர் விருது வழங்கி சிறப்பிக்கப் பட்டது.

15-05-2019 அன்று 07.00 மணிக்கு அன்று கன்னியாகுமரி முக்கடல் சந்திக்கும் இடத்தில் திருக்குறள் முற்றோதல் நடைபெற்றது. பின்னர் 08.00 மணிக்கு குமரிஅனந்தன் அவர்களின் குமரி வரலாற்றுக்கலைக்கூடம் பார்வையிடப்பட்டது. பின்னர் 10.00 மணிக்கு திருவள்ளுவர் பாறைக்குச் சென்று மலர் தூவி மரியாதை செலுத்த பட்டது.

புதுவை மாநில அமைப்புத் தொடக்கவிழா

உயர்மட்டக் குழுக் கூட்டம் - 25.08.2019 - புதுவை

கடந்த 25.08.2019 அன்று புதுவையில் கூட்டமைப்பின் கிளை தொடக்கவிழா நடைபெற்றது. கூட்டமைப்பின் அனைத்துப் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர். முன்னாள் தமிழகச் சட்டமன்ற உறுப்பினர் சொல்லின் செல்வர் திரு பழ.கருப்பையா அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்த கொண்டு நல்லுரையாற்றினார்.

கரணப்பயிற்சி தொடக்கவிழா நடைபெற்றள்ள மாவட்டங்கள்

01.12.2018 – விருதுநகர், 15.012.2018 – சென்னை, 16.012.2018 – கள்ளக்குறிச்சி, 22.012.2018 – தஞ்சாவூர்,

23.012.2018 – கரூர், 29.12.2018 – நாமக்கல், 30.012.2018 – தருமபுரி, 31.012.2018 – கிருட்டிணகிரி,

01.01.2019 – அரியலூர், 05.01.2019 – திருவண்ணாமலை வடக்கு, 20.01.2019 – திண்டுக்கல்,

19.01.2019 – திருப்பூர், 26.01.2019 – காஞ்சிபுரம், 03.02.2019 – கடலூர், தூத்துக்குடி, பெரம்பலூர்,

09.02.2019 – மதுரை, திருச்சி, 09.03.2019 – கோவை, 10.03.2019 – நீலகிரி ஆகிய 20 மாவட்டங்களில் குறள்நெறிக் கரண ஆசான்கள் உருவாக்குவதற்கான பயிற்சித் தொடக்கவிழா நடைபெற்றுள்ளது.

புதுவையில் உயர்மட்டக்குழு அறிக்கை

கூட்டமைப்பின் கடந்த ஓராண்டுகாலச் செயல்பாடுகள் குறித்த அனுபவத்தின் அடிப்படையில் – கோவையில் நடைபெற்ற செயற்குழுகூட்டத்தில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்களை நடைமுறைப் படுத்துவதற்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பினை ஏற்படுத்துவதற்கு திட்டங்கள் வகுத்திட 25.08.2019 அன்று புதுவைத் தமிழ்ச்சங்க வளாகத்தில் உயர் மட்டக்குழுக் கூட்டம் நடத்தப் பட்டது. கூட்டத்தில் தலைமையகப் பொறுப்பாளர்கள், மண்டிலப் பொறுப்பாளர்கள், மாவட்டப் பொறுப்பாளர்கள் என – கன்னியாகுமரி, கடலூர், அரியலூர், திண்டுக்கல், கரூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளுர், செங்கல்பட்டு உட்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 50- க்கும் மேற்பட்டப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு,அவரவர் பொறுப்பு மாவட்டங்களில் நடைபெற்றுள்ள செயல்பாடுகள் குறித்துவிளக்கினர்.

கூட்டத்தில், கடந்த ஓராண்டில் குறிப்பாக, 02.06.2018 தஞ்சை ஒருங்கிணைப்பு மாநாடு, 09.09.2018 கரூர் முதற் செயற்குழு, 10.11.2018 மதுராந்தகம் முதல் ஆட்சிமன்றக்குழு, 02.012.2018 இராசபாளையம் செயற்குழு, 25.05.2019 திருச்சி இரண்டாவது ஆட்சி மன்றக்குழு, 16.03.2019 கரூர் மூன்றாவது செயற்குழு, 14.07.2109, 15.07.2019 கோவை நான்காவது செயற்குழு மற்றும் திட்டமிடல்

கூட்டம் ஆகியவற்றில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள் எந்த அளவுக்கு மாவட்டங்களில் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பது குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது. மேற்படி கலந்துரையாடலின் அடிப்படையில் கீழ்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இத்தீர்மானங்களை 29.09.2019 அன்று கள்ளக்குறிச்சியில் நடைபெறும் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டத்தில் ஒப்புதல் பெற்று நடைமுறைக்கு கொண்டு வருவது என ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.