திருவள்ளுவர் ஆண்டு 2049 வைகாசி 19 ஆம் நாள் (02-06-2018) சனிக்கிழமை.. திருக்குறள் வளர்ச்சி வரலாற்றில் ஒரு புதிய பதிவேடு! அன்று காலை 9.00 மணிக்கு உலகத் திருக்குறள் கூட்டமைப்பு – ஒருங்கிணைப்பு மாநாடு தவத்திரு குன்றக்குடி பொன்னம்பலம் அடிகளார் மற்றும் தவத்திரு இரத்தினகிரி பாலமுருகனடிமை அடிகளார் ஆகியோரின் நல்லாசியுடன் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள பாரத்து கல்வி வளாகத்தில் நடைபெற்றது. மாநாட்டில் 150 -க்கும் மேற்பட்ட திருவள்ளுவர் – திருக்குறள் அமைப்பினர் மற்றும் திருக்குறள் சான்றோர்கள் கலந்து கொண்டனர்.
முற்பகல் நிகழ்வுக்குச் சென்னை, திருவள்ளுவர் மக்கள் நற்பணி மன்றத்தின் தலைவர் தமிழ்த்திரு வி. சேகர் (திரைப்பட இயக்குனர்) தலைமை தாங்கினார். தஞ்சை மாவட்ட உலகத் திருக்குறள் பேரவையின் பொறுப்பாளர்களில் ஒருவரான புலவர் கந்தசாமி மற்றும் கரூர் திருவள்ளுவர் கல்வி அறக்கட்டளை நிறுவனர் தமிழ்த்திரு க. செங்குட்டுவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சென்னை, கோட்டூர்புரம், உலகத் திருக்குறள் கலைச் சங்கமத்தின் தலைவர் முனைவர் கோ. ப. செல்லம்மாள் திருவள்ளுவர் வாழ்த்து பாடினார். திருக்குறள் பள்ளிகளின் ஆலோசகர் திருக்குறள் செல்வி பிச்சி ஆதிலிங்கம், தஞ் சாவூர், பாரத்து கல்விக் குழுமம் தாளாளர் திருமதி புனிதா கணேசன், உலகத் திருக்குறள் கூட்டமைப்பின் சென்னை மாவட்டத் துணைத் தலைவர் பேராசிரியர் முனைவர் இரா. கஸ்துரி ராஜா, திருவள்ளுவர் திருக்குறள் நற்பணி மன்றத்தின் தலைவர் முனைவர் இலலிதா சுந்தரம், பேராசிரியர் முனைவர் திலகவதி உள்ளிட்டோர் திருவிளக்கு ஒளி ஏற்றிச் சிறப்பித்தனர்.
திருக்குறள் அரசுக் கழகப் பொதுச்செயலாளர் திருக்குறள் செல்வர் ஆதிலிங்கம் வரவேற்புரை நிகழ்த்தினார். திருவள்ளுவர் ஞானமன்றத்தின் நிறுவனர் தமிழ்த்திரு சி. பன்னீர் செல்வம் தொடக்கவுரை ஆற்றினார். பாவாணர் கோட்டம் நிறுவனர் தமிழாசிரியர் ஆ. நெடுஞ்சேரலாதன் ஊக்கவுரை ஆற்றினார். உலகத் திருக்குறள் தகவல் மையத்தின் தலைவர் பேராசிரியர் முனைவர் பா. வளன் அரசு நோக்கவுரையாற்றினார். உலகத் திருக்குறள் மையத்தின் நிறுவனர் பேராசிரியர் முனைவர் கு. மோகனராசு ஆக்கவுரையாற்றினார். தஞ்சாவூர், பாரத்து கல்விக் குழுமம் தாளாளர் திருமதி புனிதா கணேசன் வாழ்த்துரை வழங்கினார்.
நண்பகல் உணவுக்குப் பின் 3.00 மணிக்குப் பிற்பகல் நிகழ்வு தொடங்கியது. பிற்பகல் நிகழ்வுக்குச் சென்னை, திருவள்ளுவர் நல்வாழ்வு மன்றத்தின் தலைவர் பாவலர் செவ்வியன் தலைமை தாங்கினார். உலகத் திருக்குறள் கூட்டமைப்பின் சென்னை மாவட்டத் துணைத் தலைவர் பேராசிரியர் இரா. கஸ்தூரி ராசா, கன்னியாகுமரி, திருவள்ளுவர் அறக்கட்டளை ஆட்சிப் பொறுப்பாளர் மா. செ. த. தமிழ்முகிலன், வள்ளுவர் குரல் குடும்பம் அமைப்பின் பொறுப்பாளர் திருமதி தே.ஹெலினா (சேலம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநாட்டில் உலகத் திருக்குறள் கூட்டமைப்பு நடைமுறைப்படுத்த வேண்டிய தீர்மான முன் வரைவுகள், நன்றி அறிவிப்புத் தீர்மானங்கள் என 16 தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டன.
இந்தத் தீர்மான முன்வரைவுகள், அடுத்துவரும் கூட்டங்களில் முறைப்படி (முன்மொழிபவர், வழிமொழிபவர் என வரையறுத்து) முன்வைக்கப்படும்; கலந்தாய்வுகள் மேற்கொள்ளப்படும்; திருத்தங்கள் இருப்பின் ஏற்றுத் தீர்மானங்களாக ஏற்கப்படும்.
மாநாட்டின் நிறைவாகப் பெங்களூர் திருக்குறள் சங்கச் செயலாளர், திரு கி.சு. இளங்கோவன், வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாண்பமை முன்னாள் அமைச்சர், திருக்குறள் மாமணி சி.நா.மீ. உபயத்துல்லா கலந்து கொண்டார். பின்னர், உலகத் திருக்குறள் இளைஞர் மையத்தின் தலைவர், திருக்குறள் செல்வம் (திண்டுக்கல்) நன்றியுரை கூற ஒருங்கிணைப்பு மாநாடு இனிதே நிறைப் பெற்றது.
தலைவர் உரைக்குப்பின் உலகத் திருக்குறள் கூட்டமைப்பினைச் சிறப்பாக வழிநடத்திச் செல்வதற்கெனத் தலைமையக நிருவாகிகள், மதிப்புறு தலைவர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பெயர்கள் முன்வைக்கப்பட்டன; பலரிடம் இசைவுகளும் பெறப்பட்டன.
முதல் கட்டமாக, உலகத் திருக்குறள் கூட்டமைப்பின் தலைமையக ஆட்சிமன்றக் குழுவினராகப் பின்வரும் பெயர்கள் அறிவிக்கப்பட்டன;
தலைவராகப் பேராசிரியர் முனைவர் கு. மோகனராசு. (சென்னை)
பொதுச்செயலாளராகத் திருக்குறள் செல்வர் ஆதிலிங்கம். (கன்னியாகுமரி)
பொருளாளராகத் திரு. க. செங்குட்டுவன் (கரூர்)
ஒருங்கிணைப்பாளராகத் திரு. சி. பன்னீர்செல்வம் (செயங்கொண்டம்)
துணைத் தலைவர்களாகத் தமிழாசிரியர் ஆ. நெடுஞ்சேரலாதன் (முரம்பு )
,, கவிமாமணி குமரிச்செழியன் (சென்னை)
,, திருக்குறள் கூ.மாரிமுத்து (தஞ்சாவூர்) .
,, திரு. மோ. அன்பழகன் (தூத்துக்குடி)
துணைப் பொதுச் செயலாளர்களாகப் ப. சுகுமாரன் (மயிலாடுதுறை)
,, திருக்குறள் செல்வம் (திண்டுக்கல்)
,, திரு. சோலை இளம்பிரியன் (வாணியம்பாடி)
,, திருமதி. தே. ஹெலினா (சேலம்)
இவர்கள் ஒருமனதாக ஏற்கப்பட்டனர்.
கூட்டமைப்பின் செயல்பாடுகளுக்குத் தேவையான செயல்திட்டங்கள் வழங்கவும் கூட்டமைப்பின் செயல்பாடுகளை நெறிப்படுத்தவும் மதிப்புறு தலைவர்களாகப் பின்வருவோர் பெயர்கள் முன்வைக்கப்பட்டன.
தலைவர், உலகத் திருக்குறள் பேரவை (குன்றக்குடி, சிவகங்கை)
தலைவர், திருக்குறள் பீடம் (மதுராந்தகம், காஞ்சிபுரம்)
நிறுவனர், ஆதிபகவான் திருவள்ளுவர் ஞான மடம், (கேரளா)
தலைவர், திருவள்ளுவர் வாழ்வியல் மன்றம், (நீலாங்கரை)
தலைவர், உலகத் திருக்குறள் தகவல் மையம், (பாளையங்கோட்டை)
தலைவர், திருவள்ளுவர் கழகம், (தென்காசி)
தலைவர், திருவள்ளுவர் நற்பணி மன்றம், (கோடம்பாக்கம்)
தலைவர், வள்ளுவர் குரல் குடும்பம், (சேலம்)
மதிப்புறு தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சான்றோர்களுக்கு – அருளாளர்களுக்கு – முறைப்படி மடல் வழித் தகவல் தெரிவித்து, இசைவு பெற்றுக் கொள்ள முடிவு செய்யப்பட்டது.
பின்னர், கூட்டமைப்பின் பணிகளைச் சிறப்பாக முன்னெடுத்துச் செல்ல தமிழ் நாட்டில் உள்ள 32 மாவட்டங்களுக்கும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டன; சிலர் பெயர்கள் சேர்க்கப்பட்டன. அதன் விபரம் வருமாறு.
உலகத் திருக்குறள் மையம் – பெருங்குடி, சென்னை
உலகத் திருக்குறள் கலைச் சங்கமம் – கோட்டூர், சென்னை
உலகத் திருக்குறள் வாழ்வியல் நெறி மனறம் – வில்லிவாக்கம், சென்னை
உலகத் திருக்குறள் மையம் கிளை – நொளம்பூர், சென்னை.
உலகத் திருக்குறள் பேரவை – சென்னை மாவட்டம்.
உலகத் திருக்குறள் மையம் கிளை – மைலாப்பூர்.
திருவள்ளுவர் மக்கள் நற்பணி மன்றம் – சென்னை
திருவள்ளுவர் வாழ்வியல் மன்றம் – நீலங்கரை
திருக்குறள் அரசுக் கழகம் – வில்லிவாக்கம், சென்னை.
வள்ளுவர் குரல் குடும்பம் – சென்னை
அடையாறு திருக்குறள் சங்கம்.
குரோம்பேட்டைத் திருக்குறள் பேரவை – குரோம்பேட்டை
திருவள்ளுவர் அருள் நெறிமன்றம் – தண்டையார் பேட்டை, சென்னை
மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கம் – மயிலாப்பூர், சென்னை.
திருவள்ளுவர் தமிழ்ச் சங்கம் – திருமுல்லைவாயில், சென்னை.
திருவள்ளுவர் திருக்குறள் நற்பணி மையம் – பாடி, சென்னை.
திருவள்ளுவர் கழகம் – ஆதம்பாக்கம்
தமிழ் நாடு திருவள்ளுவர் கழகம் – மேற்கு மாம்பலம், சென்னை.
திருவள்ளுவர் திருநாட்கழகம் – விருகம்பாக்கம், சென்னை.
திருவள்ளுவர் இலக்கிய மன்றம் – வாணுவம் பேட்டை, சென்னை.
கருணாகரன் நினைவுத் திருக்குறள் நூலகம் – அண்ணா நகர், சென்னை.
திருவள்ளுவர் இலக்கியக் கழகம் – கே.கே. நகர், சென்னை.
திருக்குறள் அறக்கட்டளை – அகரம்.
திருக்குறள் பயிற்சி மற்றும் ஆசிரியர் தேர்வு மையம் – புட்லூர்
திருவள்ளுர் மாவட்ட திருக்குறள் அரசுக் கழகம் – திருவள்ளூர்
திருவள்ளுவர் ஞானமன்றம் – பொன்னேரி
திருவள்ளூர் மாவட்ட திருக்குறள் அரசுக் கழகம் – திருவள்ளூர்
வேலூர் மாவட்ட உலகத் திருக்குறள் பேரவை – இரத்தினகிரி
திருவள்ளுவர் ஞானமன்றம் – ஆர்காடு
திருவள்ளுவர் ஞானமன்றம் – ராணிப் பேட்டை
வேலூர் மாவட்ட திருக்குறள் அரசுக் கழகம் – வேலூர்
திருவள்ளுவர் தமிழ் பேரவை – இராயபுரம்
தாய்த்தமிழ்ப்பள்ளி திருவள்ளுவர் ஞானமன்றம் – திருப்பூர்
திருப்பூர் மாவட்ட திருக்குறள் அரசுக் கழகம் – திருப்பூர்
கோவை மாவட்டத் திருக்குறள் பேராயம் – என்.ஜி.ஓ. காலனி
திருக்குறள் பயிற்சியகம் – கணபதி
திருக்குறள் உலகம் – வேளாந்து பாளையம்
திருக்குறள் மாமன்றம் – பல்கலை நகர்
கோவை மாவட்ட திருக்குறள் அரசுக் கழகம் – கோயம்புத்தூர்
திருவள்ளுவர் மன்றம் – கீழ் கோத்தகிரி
நீலகிரி மாவட்ட திருக்குறள் அரசுக் கழகம் – நீலகிரி
திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளை – புள்ளம்பாடி
திருக்குறள் பயிற்சியகம் – மணப்பாறை
திருக்குறள் பேரவை – காட்டூர்
திருக்குறள் பேரவை – திருச்சி
உலகத் திருக்குறள் பேரவை – உரையூர்
திருச்சி மாவட்ட திருக்குறள் அரசுக் கழகம் – திருச்சி
திருவள்ளுவர் தவச்சாலை – அம்மாபாளையம்
பெரம்பலூர் மாவட்ட திருக்குறள் அரசுக் கழகம் – பெரம்பலூர்
திருவள்ளுவர் ஞானமன்றம் – செயங்கொண்டசோழபுரம்
திருவள்ளுவர் ஞாணமன்றம் – செந்துறை
திருவள்ளுவர் ஞாணமன்றம் – மாத்தூர்
அரியலூர் மாவட்ட திருக்குறள் அரசுக் கழகம் – அரியலூர்
திருவள்ளுவர் ஞானமன்றம் – நெய்வேலி
திருக்குறள் மையம் – பெண்ணாடகம்
திருக்குறள் இயக்கம் – புவனைக்கிரி
திருவள்ளுவர் ஞானமன்றம் – சிதம்பரம்
திருவள்ளுவர் ஞானமன்றம் – விருத்தாச்சலம்
கடலூர் மாவட்ட திருக்குறள் அரசுக் கழகம் – கடலூர்
திருக்குறள் பேரவை – தியாக துருகம்
திருக்குறள் பேரவை – மணலூர் பேட்டை
திருவள்ளுவர் பேரவை – திருக்கோவிலூர்
திருக்குறள் பேரவை – சங்கராபுரம்
திருவள்ளுவர் மன்றம் – தியாக துருகம்
உலக மாகாகுரு இறைநெறிக் கோயில் – திண்டிவனம்
திருக்குறள் நடுவம் – கள்ளக்குறிச்சி
திருக்குறள் பேரவை – விழுப்புரம்
திருக்குறள் மன்றம் – விழுப்புரம்
திருக்குறள் பேரவை – செஞ்சி
விழுப்புரம் மாவட்ட திருக்குறள் அரசுக் கழகம் – விழுப்புரம்
திருக்குறள் பேரவை – காஞ்சிபுரம்
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அறக்கட்டளை – குன்றத்து£ர்
திருக்குறள் இலக்கிய மன்றம் – குன்றத்து£ர்
திருக்குறள் பீடம் – மதுராந்தகம்
உலகப் பொதுமறை மன்றம் – செங்கல்பட்டு
திருவள்ளுவர் கல்வி மன்றம் – கேளம்பாக்கம்
திருக்குறள் பேரவை – திருப்போரூர்
திருவள்ளுவர் ஞானமன்றம் – செங்கல்பட்டு
காஞ்சிபுரம் மாவட்ட திருக்குறள் அரசுக் கழகம் – காஞ்சிபுரம்
உலகத் திருக்குறள் பேரவை – பெருங்களத்தூர்
திருவள்ளுவர் பைந்தமிழ் இலக்கிய மன்றம் – பெருங்களத்தூர்
வள்ளுவர் பேரவை – கெலமங்கலம்
திருக்குறள் பேரவை – அரூர்
தருமபுரி மாவட்ட திருக்குறள் அரசுக் கழகம் – தருமபுரி
வள்ளுவர் திருக்குறள் மன்றம் – கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்ட திருக்குறள் அரசுக் கழகம் – கிருஷ்ணகிரி
திருக்குறள் தொண்டு மையம் – திருவண்ணாமலை
திருக்குறள் ஒளிச்சுடர் மன்றம் – மாத்தூர்
திருக்குறள் மன்றம் – போளூர்
திருக்குறள் நெறிப்பரப்பு மையம் – வில்வராணி
திருக்குறள் பேரவை – போளூர்
திருக்குறள் சமுதாயம் – திருவண்ணாமலை
திருக்குறள் மன்றம் – தேவிகாபுரம்
திருவண்ணாமலை மாவட்ட திருக்குறள் அரசுக் கழகம் – திருவண்ணாமலை
திருக்குறள் பேரவை – நாமக்கல்
நாமக்கல் மாவட்ட திருக்குறள் அரசுக் கழகம் – நாமக்கல்
உலகத் திருவள்ளுவர் வழிபாட்டுச் சான்றோர் மன்றம் – செங்காட்டூர், மேச்சேரி
வள்ளுவர் குரல் குடும்பம் – சேலம்
திருக்குறள் மன்றம் – சேலம்
திருவள்ளுவர் ஞானமன்றம் – தலைவாசல்
சேலம் மாவட்ட திருக்குறள் அரசுக் கழகம் – சேலம்
உலகத் திருவள்ளுவர் வழிபாட்டுச் சான்றோர் மன்றம் – செங்காட்டூர், மேச்சேரி
வள்ளுவர் குரல் குடும்பம் – சேலம்
திருக்குறள் மன்றம் – சேலம்
திருவள்ளுவர் ஞானமன்றம் – தலைவாசல்
சேலம் மாவட்ட திருக்குறள் அரசுக் கழகம் – சேலம்
திருக்குறள் நெறிப்பரப்பு நடுவம் – மயிலாடுதுறை
திருக்குறள் பேரவை – சீர்காழி
திருவள்ளுவர் திருமன்றம் – ஈராசாபுரம்
திருக்குறள் பேரவை – மயிலாடுதுறை
திருவள்ளுவர் ஞானமன்றம் – மயிலாடுதுறை
நாகப்பட்டினம் மாவட்ட திருக்குறள் அரசுக் கழகம் – நாகப்பட்டினம்
புதுவை திருக்குறள் மன்றம் – புதுச்சேரி
திருவள்ளுவர் மன்றம் – முதலியார் பேட்டை
திருக்குறள் மையம் – புதுச்சேரி
பாண்டிசேரி மாவட்ட திருக்குறள் அரசுக் கழகம் – பாண்டிசேரி
தஞ்சை மாவட்ட திருக்குறள் அரசு கழகம் – தஞ்சாவூர்.
உலகத் திருக்குறள் மாமன்றம் – சாலியமங்கலம்.
தஞ்சை மாவட்டத் திருக்குறள் பேரவை – தஞ்சை.
உலகத் திருக்குறள் மையம் – பாபநாசம்
திருவள்ளுவர் ஞானமன்றம் – தஞ்சாவூர்
உலகத் திருக்குறள் பேரவை – குன்றக்குடி
திருவள்ளுவர் தமிழ்ச்சங்கம் – தேவக்கோட்டை
திருக்குறள் கழகம் – காரைக்குடி
வள்ளுவர் பேரவை – காரைக்குடி
திருவள்ளுவர் கழகம் – தேவக்கோட்டை
சிவகங்கை மாவட்ட திருக்குறள் அரசுக் கழகம் – சிவகங்கை
குறள் நெறிப் பயிலகம் – இராஜகோபாலபுரம்
திருக்குறள் கழகம் – புதுக்கோட்டை
திருவள்ளுவர்நற்பணிமன்றம் – மச்சுவாடி
உலகத்திருக்குறள் பேரவை – புதுக்கோட்டை
திருக்குறள் பேரவை – கரம்பைக்குடி
புதுக்கோட்டை மாவட்ட திருக்குறள் அரசுக் கழகம் – புதுக்கோட்டை
தேனி மாவட்ட திருக்குறள் அரசு கழக – தேனி
திருவள்ளுவர் ஞானமன்றம் – தேனி
தேனி மாவட்ட திருக்குறள் அரசுக் கழகம் – தேனி
உலகத் திருக்குறள் இளைஞர் மையம் – கள்ளி மந்தயம்
திருவள்ளுவர் திருமடம் – நிலக்கோட்டை
குறள்நெறி மன்றம் – ஒட்டன்சத்திரம்
திருவள்ளுவர் இலக்கியப் பேரவை – மேட்டுப்பட்டி
திருவள்ளுவர் தமிழ்க் கழகம் – நல்லமனார்க் கோட்டை
திண்டுக்கல் மாவட்ட திருக்குறள் அரசுக் கழகம் – திண்டுக்கல்
திருவள்ளுவர் கல்வி அறக்கட்டளை – கரூர்
திருக்குறள் அறக்கட்டளை – செங்குந்தபுரம், கரூர்
கரூர் மாவட்ட உலகத் திருக்குறள் பேரவை – வேலயுதம் பாளையம்
உலகத்திருவள்ளுவர் மையம் – தென்னிலை
கரூர் மாவட்ட திருக்குறள் அரசுக் கழகம் – கரூர்
மதுரை திருவள்ளுவர் கழகம் – மீனாட்சியம்மன் திருக்கோவில்
திருவள்ளுவர் மன்றம் – சோமசுந்தரம் குடியிருப்பு
திருவள்ளுவர் கல்வி நிறுவனம் – எழுமலை
திருக்குறள் குடில் – மதுரை
திருவள்ளுவர் ஞானமன்றம் – மதுரை
மதுரை மாவட்ட திருக்குறள் அரசுக் கழகம் – மதுரை
திருக்குறள் பேரவை – இராமநாதபுரம்
இராமநாதபுரம் மாவட்ட திருக்குறள் அரசுக் கழகம் – இராமநாதபுரம்
பாவாணர் கோட்டம் – திருக்குறள் பயிற்சியகம் – சோழபுரம் தெற்கு
திருவள்ளுவர் மன்றம் – இராஜபாளையம்
அய்யன் திருவள்ளுவர் தமிழோசை மன்றம் – சேத்து£ர்
குறள் நெறிக் கழகம் – விருதுநகர்
திருவள்ளுவர் மன்றம் – சிவகாசி
திருவள்ளுவர் மன்றம் – திருவில்லிபுத்தூர்
விருதுநகர் மாவட்ட திருக்குறள் அரசுக் கழகம் – விருதுநகர்
தூத்துக்குடி மாவட்ட உலகத் திருக்குறள் பேரவை – தூத்துக்குடி
திருவள்ளுவர் மன்றம் – கோயில் பட்டி
திருவள்ளுவர் கழகம் – கழுகு மலை
திருக்குறள் சங்கம் – ஏரல்
தூத்துக்குடிமாவட்ட திருக்குறள் அரசுக் கழகம் – தூத்துக்குடி
உலகத் திருக்குறள் தகவல் மையம் – பாளையங்கோட்டை
வள்ளுவர் வாசகர் வட்டம் – வீரகேரளம்புது£ர்
திருவள்ளுவர் கழகம் – தென்காசி
திருவள்ளுவர் கழகம் – கடையநல்லூர்
திருவள்ளுவர் கழகம் – கடையம்
திருவள்ளுவர் கல்வி கழகம் – சிவகிரி
திருக்குறள் பேரவை – வள்ளியூர்
அய்யன் திருவள்ளுவர் பொதுச்சேவை அறக்கட்டளை – கோட்டைக் கருங்குளம்
திருவள்ளுவர் தமிழ்ப் பேரவை – சேரன்மாதேவி
அய்யா திருவள்ளுவர் அறப்பணி இயக்கம் – வாசுதேவநல்லூர்
நெல்லை மாவட்ட திருக்குறள் அரசுக் கழகம் – திருநெல்வேலி
குமரி மாவட்ட திருக்குறள் அரசு கழகம் – நாகர்கோவில்
திருக்குறள் ஆய்வு மையம் – கோட்டாறு
குறளகம் – இராமன் புதூர்
திருவள்ளுவர் அறக்கட்டளை – லீபுரம்
திருவள்ளுவர் சேவை அமைப்பு – நாகர்கோவில்.
திருவள்ளுவர் காந்திஆசிரமம் – மகாதானபுரம்
ஆதிபகவன் திருவள்ளுவர் ஞானமடம் – கேரளா
உலகத் திருக்குறள் பேரவை – குன்றக்குடி
பெங்களூர் திருக்குறள் சங்கம்.. உலகத் திருக்குறள் இளைஞர் மையம் – திண்டுக்கல்
உலகத் திருக்குறள் வழிபாட்டுச் சான்றோர் மன்றம் – மேச்சேரி, சேலம்.
உலகத் திருக்குறள் பேரவை – திருப்பூர்.
உலகத் திருக்குறள் கூட்டமைப்பின் முதல் செயற்குழுக் கூட்டம் கரூர் வள்ளுவர் கேட்ரிங்n கல்லூரியில் உள்ள வள்ளுவர் அரங்கில் – திருவள்ளுவர் ஆண்டு 2049 ஆவணி மாதம் 24 ஆம் நாள் (09.09.2018) ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு நடைபெற்றது.
கூட்டமைப்பின் பொருளாளரும், வள்ளுவர் கேட்ரிங் கல்லூரியின் தாளாளருமான க. செங்குட்டுவன் அவர்கள் தலைமை தாங்கினார். கூட்டமைப்பின் மதிப்புறு தலைவர்கள் சிவானந்த அடிகள், பாவலர் செவ்வியன், திரைப்பட இயக்குநர் வி. சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாண்பமை மேனாள் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர், மேனாள் இந்திய பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய், மேனாள் ஐ.ந.சபையின் பொதுச்செயலாளர் கோபி அன்னான், தமிழறிஞர்கள் முனைவர் நன்னன், முனைவர் கவிக்கோ. அப்துல் ரகுமான், பாண்டிச்சேரி ம.லெ. தங்கப்பா ஆகியோரின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திருக்குறள் சி. பன்னீர் செல்வம் வரவேற்புரை நிகழ்த்தியதோடு கலந்து கொண்ட அனைவருக்கும் கைப்பை வழங்கினார். 2018 ஜுன், ஜுலை, ஆகஸ்டு மாதங்களுக்கான செயலறிக்கையினைப் பொதுச்செயலாளர் திருக்குறள் செல்வர் ஆதிலிங்கமும், வரவு, செலவு அறிக்கையினைப் பொருளாளர் க. செங்குட்டுவன் அவர்களும் தாக்கல் செய்து ஒப்புதல் பெற்றனர்.இக்கூட்டத்தில் அடுத்த மூன்று மாதங்களுக்கான செயல் திட்டங்கள் வகுக்கப்பட்டது.
உலகத் திருக்குறள் கூட்டமைப்பின் ஆட்சிமன்றக் குழுக்கூட்டம், திருவள்ளுவர் ஆண்டு 2049 துலை (ஐப்பசி) மாதம் 24 – ஆம் நாள் (10.11.2018) காரிக்கிழமை (சனி) அன்று காலை 10.00 மணிக்கு மதுராந்தகம் திருக்குறள் பீடம் குருகுலத்தில் கூட்டமைப்பின் தலைவர், வெ.சேகர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தவத்திரு. குருபழனியடிகளார், திருக்குறள் பீடாதிபதிகள் மற்றும் கூட்டமைப்பின் சிறப்புத் தலைவர் பாவலர் செவ்வியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டமைப்பின் கடந்த கால செயல்பாடுகள் குறித்து பொதுச்செயலாளர், திருக்குறள் செல்வர் ஆதிலிங்கம் அறிக்கை செய்தார்.
கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் புலவர் சி.பன்னீர் செல்வம், துணைத்தலைவர் ஆ.நெடுஞ் சேரலாதன், துணைப்பொதுச்செயலாளர் திருக்குறள் செல்வன், திருச்சி – புதுக்கோட்டை மண்டில ஒருங்கிணைப்பாளர் திருக்குறள் கூ.மாரிமுத்து, சென்னை மாவட்டத் தலைவர் மு.கோ.ஏழுமலை, திருவள்ளுவர் மிசன் தலைவர், இராம்.மோகன்தாசு, விழுப்புரம் – கடலூர் மண்டில ஒருங்கிணைப்பாளர் தமிழரிமா தா.சம்பத், அரியலூர் – பெரம்பலூர் மண்டில ஒருங்கிணைப்பாளர் திரு ம. இராவணன் (அரியலூர்), தஞ்சை – திருவாரூர் மண்டில ஒருங்கிணைப்பாளர் திரு பனசை அரங்கன் (தஞ்சை), விழுப்புரம் மாவட்டத் தலைவர் புலவர். அய்யா.மோகன்- கள்ளக்குறிச்சி). குறள்அமிழ்தன், பா.முத்துகுமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இரண்டாம் செயற்குழுக்கூட்டம் 02-12-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று 10.00 மணிக்குக் இராசபாளையம், விருதுநகர் மாவட்டம். திருக்குறள் மன்றத்தில் நடைபெற்றது. உலகத் திருக்குறள் கூட்டமைப்பு தலைவர் திரைப்பட இயக்குநர் வெ. சேகர் தலைமை தாங்கினார். திருக்குறள் கூ. மாரிமுத்து திருக்குறள் வாழ்த்து பாடினார். விருதுநகர் மாவட்ட தலைவர் இல.நிலவழகன் வரவேற்புரை நிகழ்த்தினார். பொதுச்செயலாளர் திருக்குறள்செல்வர் ஆதிலிங்கம் செயலறிக்கை வாசித்தார்கள்.
கூட்டமைப்பின் மதிப்புறு தலைவர்கள் கசா புயல் தாக்கி உயிர் நீத்த தமிழ்ச் சொந்தங்கள் – தமிழறிஞர்கள் திரு கி.த.பச்சையப்பனார், திரு சோ. க. அறிவுடை நம்பி ஆகியோரின் மறைவிற்கு நினைவஞ்சலி செலுத்தபட்டது. வரவு, செலவு அறிக்கை கவிஞர் செவ்வியன், பொருளாளர் அவர்கள் வழங்கினார்கள். ஒருங்கிணைப்பாளர் புலவர் பன்னீர் செல்வம் கலந்து கொண்ட அனைவருக்கும் கைப்பை வழங்கினார். தமிழரிமா தா. சம்பத் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். தலைமையக ஒருங்கிணை இக்கூட்டத்தில் அடுத்த மூன்று மாதங்களுக்கான செயல் திட்டங்கள் வகுக்கப்பட்டது.