உலகத் திருக்குறள் கூட்டமைப்பு

உலகத் திருக்குறள் கூட்டமைப்பு

கூட்டமைப்பு

தோற்றம்

ஐயன் திருவள்ளுவர் வகுத்துத் தந்துள்ள உலகப்பொதுமறை திருக்குறள்நெறி அடிப்படை யிலான ஓர் மக்கள் சமுதாயம் உருவாக வேண்டும் என்பதற்காக சென்னை வள்ளுவர் கோட்டத்தில்,
திருவள்ளுவர் ஆண்டு 2038 புரட்டாசி மாதம் 15 ஆம் நாள் (01-10.2017) அன்று திருவள்ளுவர் – திருக்குறள் பெயரில் செயல்படும் 22 அமைப்புகள் ஒன்று கூடி, உலகத் திருக்குறள் கூட்டமைப்புத் தொடங்கப்பட்டது.

உலகத்திருக்குறள் கூட்டமைப்பு தமிழ்நாடு சங்கங்கள் சட்டப்படியும், விதிமுறைகள் படியும், இந்திய அறக்கட்டளைச் சட்டவிதிமுறைகள் படியும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கூட்டமைப்பு பதிவு எண் 318/2018 ஆகும். அறக்கட்டளை பதிவு எண் 227/2018.

இலக்கு

தமிழ்ப்பேராசான் திருவள்ளுவர் வகுத்துத் தந்துள்ள உலகப் பொதுமறையாம் திருக்குறள் வழிநின்றுசாதி வேறுபாடற்ற, மதசார்பு இல்லாத, மூடப்பழக்கங்கள் மற்றும் மதுப்போதைகளுக்கு இடம்கொடுக்காத, பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும் என்னும்படியான, பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் பொருளாதார சமன்மையுடைய, இயற்கையோடு இயைந்த, அறிவியல் அறிவு பெற்ற, பகுத்தறிவுச் சிந்தனை கொண்ட, சமஉரிமை மற்றும் நீதியுடன் கூடிய சமத்துவ சமவுடைமைத் திருக்குறள் சமுதாயம் அமைத்தல் உலகத்திருக்குறள் கூட்டமைப்பின் இலக்கு ஆகும்.

நோக்கம் மற்றும் குறிக்கோள்:

  • உலகத்திருக்குறள் கூட்டமைப்பின் வாயிலாக தமிழகம், இந்தியத் துணைக் கண்டம் மற்றும் உலக நாடுகளில் செயல்பட்டு வரும் திருவள்ளுவர்- திருக்குறள் பெயரில் இயங்கும் அமைப்புகள், மன்றங்கள், கழகங்கள், இயக்கங்கள், பாசறைகள், கோட்டங்கள், கலைக்கூடங்கள், அறக்கட்டளைகள், ஊடகங்கள் மற்றும் நிறுவனங்களை ஒருங்கிணைத்தல். 

             குறிப்பாக, திருவள்ளுவர் – திருக்குறள் சார்ந்த இலக்கிய அமைப்புகள் மாணவர் சங்கங்கள் இளைஞர் மன்றங்கள், மகளிர் அமைப்புகள்,         ஆசிரியர் சங்கங்கள் பொறியாளர் அமைப்புகள், தொழிலாளர் அமைப்புகள், நவீன தொழில் நுட்ப ஊடகங்கள், கலைக்குழுக்கள்,                 கணினிக்கழகங்கள், ஆய்வு மையங்கள், கல்வி நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் போன்ற பல்வேறு துறைசார்ந்த அமைப்புகளை ஒருங்கிணைத்தல். திருக்குறள் தொண்டர்களை ஒருங்கிணைக்கும் உறவுப் பாலமாக செயலாற்றுதல், திருக்குறள்நெறிவழி வாழ வழிகாட்டுதல்.

  • திருக்குறள் நெறிவழி தனிமனித ஒழுக்கத்தை வளர்க்கவும், இல்லற வாழ்வியலில் திருக்குறள் நெறியை நடைமுறைப்படுத்தவும் தனிமனிதனுக்கும் – சமுதாயத்திற்கும் உள்ளத் தொடர்பினை குறள்வழி நெறிப்படுத்தவும் உழைப்பின் மேன்மையையும் உரிமையும் குறள்வழி போற்றி பாதுகாக்கவும் மக்களிடையே கூட்டுறவு மனப்பான்மையை குறள்வழி உருவாக்கிடவும் திருக்குறள் கூறும் மனித உரிமை, பெண்μரிமை, மக்களாட்சி நெறிமுறைகளை வளர்த்தெடுக்கவும் குறள் வழியாக பண்பாட்டுக் கல்வியை எல்லாநிலையிலும் கொண்டு வரவும் திட்டங்கள் வகுத்துச் செயலாற்றுதல்.
  • பயிற்சிப்பட்டறைகள், கருத்தரங்குகள், பயிலரங்குகள், பொதுக்கூட்டங்கள், தெருமுனைப் பரப்புரைகள், பண்பாட்டு விழாக்கள் கலைநிகழ்ச்சிகள், விளையாட்டுகள் மற்றும் பல்வேறு போட்டிகள் வாயிலாக மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைவருக்கும் திருக்குறள் வாழ்வியலாக்க நெறிகள் குறித்து விழிப்புணர்வு, கருத்தேற்றம் ஏற்படுத்துதல்.
  • தாய்தமிழ் மொழியின் நலன்காக்கவும் அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருத்தல். கலைகள், இலக்கியங்கள், பண்பாட்டுக்கூறுகள் மற்றும் சமூகப்பொருளாதார விழுமியங்களைத் திருக்குறள் நெறிக்கேற்றவாறு வளர்தெடுத்தல்.
  • திருக்குறள் வாழ்வியல் பயிற்சியளித்தல். குறிப்பாக, திருக்குறள் நெறிப்படி குடும்ப நிகழ்வுகளை நடத்த வழிகாட்டும் வகையில் கூட்டமைப்பின் உறுப்பு அமைப்புகளுக்கும், கிளை அமைப்புகளுக்கும், திருக்குறள் தொண்டர்களுக்கும் திருக்குறள் நெறித் திருமணம், சூல்அழைப்பு (வளைகாப்பு), பிறந்தநாள் விழா, பெயர் சூட்டுதல், காதணி விழா, நூல் ஏந்தும் விழா, மங்கைபருவ விழா (பூப்பு நீராட்டு) புதுமனைப் புகுவிழா, மணநாள் விழா (வெள்ளி விழா, பொன் விழா, வயிர விழா, பவள விழா, முத்து விழா, நூற்றாண்டு விழா, படத்திறப்பு விழா மற்றும் நினைவேந்தல் விழா உள்ளிட்ட பிறப்பு முதல் இறப்புவரை அனைத்து நிகழ்வுகளையும் திருக்குறள் நெறி வழி நடத்திட பயிற்சி வழங்கி, நடைமுறைப்படுத்துதல்.
  • திருக்குறள் நெறிவளர்க்கும் பள்ளிகள், சமுதாயக் கல்லூரிகள், அஞ்சல் வழிக் கல்லூரிகள், கணினி மையங்கள், ஆவண காப்பகங்கள், ஆய்வு நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், இதழ்கள், நூலகங்கள், தியான மண்டபங்கள், பயிற்சிக் கூடங்கள், மாதிரிக் கிராமங்கள், கிராம சபைகள், கலைக்குழுக்கள், தொண்டு அமைப்புகள் மற்றும் தேவையான கல்வி நிறுவனங்கள் உருவாக்குதல் – பேμதல்.
  • வீதிகள் தோறும் திருவள்ளுவர் சிலைகள் – வீடுகள், அலுவலகங்கள், வாகனங்கள் தோறும் திருவள்ளுவர் படம் மற்றும் திருக்குறள் அடையாளங்கள் – அனைத்து மக்களின் கரங்களிலும் திருக்குறள் புத்தகங்கள் இடம்பெற செய்தல் – குழந்தைகளுக்கு திருக்குறள் சார்ந்த மற்றும் தமிழ்பெயர் இடுதல் – திருவள்ளுவரின் உண்மையான வாழ்க்கை வரலாற்றை உருவாக்கம் செய்து கதைகள், நாடகங்கள்
    புத்தகங்கள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள் மற்றும் நவீன தொழில் நுட்பங்களின் வாயிலாக மாணவர்களிடம், பொதுமக்களிடமும் பரப்புரைச் செய்தல்.
  • திருக்குறளைத் தமிழர் தேசிய மறைநூலாக அறிவிக்க வேண்டி தமிழக அரசையும், இந்திய இந்திய தேசிய நூலாக அறிவிக்க வேண்டி இந்திய கூட்டாட்சி அரசையும் உலகப் பொதுநூலாகவும் அறிவிக்க வேண்டி பன்னாட்டு மன்றத்தையும் கேட்டு கோரிக்கை வைத்தல் வெற்றிபெற முயலுதல்.
  • இந்திய கூட்டாட்சி அரசின் ஆணைப்படி இந்தியாவிலுள்ள அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் கருத்தருங்குகள், திருக்குறள் போட்டிகள் நடத்திட வலியுறுத்தல் – அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் திருக்குறள் இருக்கைகள் உருவாக்க தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் – இந்திய கூட்டாட்சி அரசு மற்றும் மாநில அரசுகள் நிறைவேற்றியுள்ள அனைத்துத் திட்டங்களையும் சமூகத்தின் அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்த்தல் – விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
  • மாண்புமிகு நீதியரசர் மகாதேவன் அவர்களின் தீர்ப்பின்படி தமிழக அரசுப்பள்ளிகளில் நடைமுறைப்படுத்தும் திருக்குறள் நன்நெறி வகுப்புகளைச் சிறப்பாக நடத்திட ஒத்துழைப்பு வழங்குதல் – திருக்குறள் தொடர்பான வரலாற்று நினைவகங்களைப் பாதுகாக்கவும், செப்பனிடவும் புதிய வரலாற்று அடையாளங்களை உருவாக்கவும் பாடுபடுதல்.
  • தங்கள் வாழ்நாள் முழுவதும் திருக்குறள் தியாகப்பணியாற்றும் திருக்குறள் அமைப்பினர், சான்றோர்கள் மற்றும் தொண்டர்களை அடையாளம் கண்டு, அவர்களின் சமூகப் பொருளாதார நிலையை மேம்படுத்தவும், உயர்த்திடவும் தமிழக அரசின் மூலம் திருக்குறள் நல வாரியம் அமைத்திட கோரிக்கை வைத்தல்.
  • கூட்டமைப்பு வழங்கும் செயல்திட்டங்களைச் சிறப்பாக நடைமுறைப்படுத்தும் திருக்குறள் அமைப்புகள் மற்றும் சான்றோர்கள், தொண்டர்களுக்கு விருதுகள், பாராட்டுகள் மற்றும் பரிசுகள் வழங்கிச் சிறப்பித்தல்.
  • மெத்தத்தில், தமிழ்ப்பேராசான் திருவள்ளுவர் வகுத்துத் தந்துள்ள உலகப் பொதுமறையாம் திருக்குறள் வழிநின்று – சாதி வேறுபாடற்ற, மதசார்பு இல்லாத, மூடப்பழக்கங்கள் மற்றும் மதுப்போதைகளுக்கு இடம்கொடுக்காத, பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும் என்னும்படியான, பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் பொருளாதார சமன்மையுடைய, இயற்கையோடு இயைந்த, அறிவியல் அறிவு பெற்ற, பகுத்தறிவுச் சிந்தனை கொண்ட, சமஉரிமை மற்றும் நீதியுடன் கூடிய சமத்துவ சமவுடைமைத் திருக்குறள் சமுதாயம் அமைத்தல் உலகத்திருக்குறள் கூட்டமைப்பின் இலக்கு, நோக்கம் மற்றும் குறிக்கோள்கள் ஆகும்.
  • கூட்டமைப்பின் நோக்கம் மற்றும் குறிக்கோள்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான நிதிநிலையைப் பெருக்கவும் செயல் திட்டங்கள் வகுத்து நெறிப்படுத்தவும் கூட்டமைப்பின் பெயரில் அறக்கட்டளை ஒன்று தொடங்கிச் செயல்படுத்துதல்.