உலகத் திருக்குறள் கூட்டமைப்பு- தலைமையக அறிவிப்பு எண்: 28/2025

தலைமை நிருவாகிகள், துணைத் தலைவர்கள், துணைப் பொதுச் செயலாளர்கள், துறை இயக்குனர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர, மாநகர மண்டல, கிளை அமைப்புகளின் பொறுப்பாளர்கள் கவனத்திற்கு:

அன்புடையீர், வணக்கம்.

நமது உலகத் திருக்குறள் கூட்டமைப்பின் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான
(01-01-2026 முதல் 31-12-2027 வரை) நிருவாகிகள்
தேர்தல்
ஏற்பாடுகள் மூன்று கட்டங்களாக நடத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக, புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் புதுப்பித்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இரண்டாம் கட்டமாக, 2025 ஆகத்து மாதம் கிளை நிருவாகிகள் தேர்தல் நடைபெற உள்ளது.

மூன்றாம் கட்டமாக,
14-09-2025 அன்று விருத்தாச்சலத்தில் நடைபெறும் ஏழாவது பொதுக்குழுக் கூட்டத்தில்
தலைமை நிருவாகிகள், துணைத் தலைவர்கள், துணைப் பொதுச் செயலாளர்கள், தலைமைத் துறை இயக்குனர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர, மாநகர மண்டல நிருவாகிகள் தேர்தலுக்கான விருப்பமனு வழங்கப்படவுள்ளது.

இந்நிலையில்
அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான நிருவாகிகள் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கானத் தகுதிகள் வரையறை செய்வதற்குத்
தலைமை நிருவாகத்தால்
ஏழு (7)பேர் கொண்ட தேர்தல் பணி வரையறைக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

தேர்தல்பணி வரையறைக் குழுவினர் விவரம்

குழுத்தலைவர் ‌

01) தமிழரிமா தா.சம்பத், அறக்கட்டளைத் தலைவர்,
கைப்பேசி எண்:9865330392

குழுத் துணைத் தலைவர்

02) வேளாண் பொறியாளர் வ.காசிநாதன்,
அமைப்புச்
செயலாளர்
கைப்பேசி எண்:9443552320

குழு
உறுப்பினர்கள்

03) தமிழ்ச்செம்மல்
ப.சம்பத் குமார்,
தலைமைநிலையச்செயலாளர்
கைப்பேசி எண்:8695006900

04) பேராசிரியர் க. கருத்தத் பாண்டி, துணைத் தலைவர்
கைப்பேசி எண்:9443103313

05) திருமிகு தா. பழனிவேல், துணைப் பொதுச் செயலாளர்
கைப்பேசி எண்:9940963395

06) முனைவர் க. சின்னத்துரை,
தலைமைத் துறை இயக்குனர்
கைப்பேசி எண்:9787939356

07) திருமிகு சிவஞான பாண்டியன், செங்கல்பட்டு மாவட்டத் தலைவர்
கைப்பேசி எண்:9171133663

கூட்டமைப்புத் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான தகுதி,
விருப்பமனு, விருப்பமனுக் கட்டணம் மற்றும் தாங்கள் எதிர்பார்க்கும் வழிகாட்டுதல் நெறிமுறைகள் குறித்த கருத்துருக்கள் வரவேற்கப்படுகின்றன.

தலைமை நிருவாகிகள், துணைத் தலைவர்கள், துணைப் பொதுச் செயலாளர்கள், துறை இயக்குனர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர, மாநகர மண்டல, கிளைப் பொறுப்பாளர்கள்
கீழே கொடுக்கப்பட்டுள்ள வரிசை முறைப்படி
தங்கள் மேலான கருத்துக்களை 31-07-2025-க்குள் எழுத்து மூலம் தேர்தல் பணி வரையறைக் குழுத் தலைவர் அல்லது மற்ற உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

01) தேர்தலில் போட்டுயிட விரும்பும் தலைமை நிருவாகிகளுக்கான தகுதிகள்.

02) துணைத்தலைவர்கள், துணைப்பொதுச் செயலாளர்களுக்கான தகுதிகள்.

03) தலைமைத்துறை இயக்குநர்களுக்கான தகுதிகள்.

04) மாவட்ட நிருவாகிகளுக்கானத் தகுதிகள்‌.

05) ஒன்றிய,நகர,மாநகர மண்டல நிருவாகிகளுக்கான தகுதிகள்.

06) கிளை நிருவாகிகளுக்கான தகுதிகள்.

07) தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு படிவம்,

08) தேர்தலில் போட்டியிட விரும்பும் ஒவ்வொரு நிலையினருக்கும் விருப்ப மனுக் கட்டணம்

09) கிளை நிருவாகிகள் தேர்தல் நடத்துவதற்கான தேர்தல் பொறுப்பாளர்கள்.

10) தலைமை நிருவாகிகள்,துணைத்தலைவர்கள்,துணைப்பொதுச்செயலாளர்கள்,துறை இயக்குநர்கள்,மாவட்ட,ஒன்றிய,நகர,மாநகர மண்டல நிருவாகிகள் தேர்தல் நடத்த தேர்தல் பொறுப்பாளர்கள்.

11) அமைப்பு ரீதியாக தேவைப்படும் கூடுதல் வழிகாட்டுதல் நெறிமுறைகள்.

தங்கள் மேலான கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கும் பேராசிரியர் தங்க. ஆதிலிங்கம்,
பொது செயலாளர்
18-07-2025

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *