உறுப்பினர் புதுப்பித்தல்/புதிய உறுப்பினர் சேர்க்கைப்பணித் தொடக்கம்

உறுப்பினர் புதுப்பித்தல்/புதிய உறுப்பினர் சேர்க்கைப்பணித் தொடக்கம்

01-.01.2025 முதல் 31.12.2026 முடிய இரண்டு ஆண்டுகளுக்கான
உறுப்பினர் புதுப்பித்தல்/புதிய உறுப்பினர் சேர்க்கை & பணித் தொடக்கம்

அன்புடையீர் வணக்கம்.

உலகத்திருக்குறள் கூட்டமைப்பு & திருவள்ளுவர் ஆண்டு 2048 மார்கழி 1 (09.12.2017)
அன்றுதொடங்கப்பட்டு கடந்த 7 ஆண்டுகளாக திறம்பட செயல்பட்டுவருகிறது.
நம் கூட்டமைப்பு & ஐயன் திருவள்ளுவர் வகுத்துத் தந்துள்ள உலகப் பொதுமறை திருக்குறள் வழிநின்று மனித இனத்தை ஆற்றுப்படுத்தும் உயரிய இலக்கினை முன்வைத்துச் செயலாற்றிவருகிறது.

கூட்டமைப்பின் இலக்கினை வென்றெடுக்க தமிழ்நாடு & இந்திய மாநிலங்கள் மற்றும்
அயல்நாடுகளில் ஊர்/நகர்கள்தோறும் கிளை அமைப்புகள் ஏற்படுத்தி, திருக்குறள் வழிநின்று தமிழ்ச்சமுதாய மீட்டுருவாக்கத் திட்டங்கள் வகுத்துச் செயல்படுத்தி வருகிறது.

அடுத்த இரண்டாண்டுகளுக்கான (2025&2026) உறுப்பினர்கள் புதுப்பித்தல்/புதிய உறுப்பினர் சேர்க்கை:
31.12.2024 அன்று கன்னியாகுமரியில நடைபெற்ற 11 ஆவது செயற்குழுக்கூட்டத்தில் அடுத்த இரண்டாண்டுகளுக்கான (2025&2026) உறுப்பினர்கள் புதுப்பித்தல் மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கைப்பணித் தொடங்கவேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டதின் தொடர்ச்சியாக ஒத்த கருத்துடைய பதினைந்து (15) தமிழ்/திருக்குறள்/சமூக ஆர்வலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட விருப்பம் தெரிவிக்கும்
பகுதியில் ஏற்படுத்தப்படும் புதிய கிளை அமைப்புக்கான விண்ணப்பப்படிவம் இணைக்கப்பட்டுள்ளது.

மக்கள் பங்களிப்பு மற்றும் பங்கேற்பு தான் உணர்வும், உயிரோட்டமும் உள்ளதாக இருக்கும் என்பதில் உலகத் திருக்குறள் கூட்டமைப்பு உறுதியுடன் உள்ளது. ஆகவே, ஓர் உறுப்பினரிடம் இரண்டு ஆண்டுகளுக்கான கட்டணமாக ரூபாய் நூறு (100/&) பெற்றுக்கொள்ள வேண்டும் எனத்தீர்மானித்துள்ளது.

உறுப்பினர்களிடம் பெறும் சேர்க்கைக் கட்டணத்தைத் கீழ்காணும் வங்கிக்கணக்கில்
நேரடியாகவும் செலுத்தலாம். பூர்த்திச் செய்யபட்ட உறுப்பினர் படிவம் மற்றும் அதற்கான கட்டணத்தை வங்கியில் செலுத்தியதற்கான சீட்டு ஆகியவற்றை 30.08.-2025-&க்குள் தலைமையகத்திற்குக் கிடைக்குமாறு அனுப்பி வைத்திட வேண்டுகிறோம்.

குறிப்பு:

* ஒரு கிளையில் குறைந்தது 15 உறுப்பினர்கள் இருத்தல் வேண்டும். அதில் 5 மகளிர், 2 மாணவர்கள் (15 வயதிற்கு மேல்), 2 இளைஞர்கள் (35 வயதிற்குள்) இருத்தல் வேண்டும்.
* உறுப்பினர்கள் அதிகபட்சம் எத்தனைபேர் வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம்.
அனைவரும் கூட்டமைப்பின் சட்ட விதிமுறைக்கு கட்டுப்பட்டவர்களாவர்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *